ஜகுசியா
Yakutia, Russia
ரஷ்யாவின் ஒரு பகுதி. இந்த மக்களின் வாழ்வியல் வெப்பநாடுகளில் இருக்கும் மக்களின் வாழ்வியலுக்கு
நேர் எதிர். கடும் குளிரிலே (-50° or - 60°) அவர்களது வாழ்க்கை ஓடுகின்றது. வருடத்தில் குளிர்காலமே அவர்களுக்கு
நீண்டதாக இருக்கும். கோடைகாலம் மிகவும் குறைவு (3 மாதங்கள்). கொழுப்புள்ள உணவை அதிகம் எடுப்பார்கள். பச்சை இறைச்சியை
உண்பார்கள். இறைநம்பிக்கை நிறைய இம்மக்களுக்கு இருக்கின்றது.
கலைமான்கள் அதிகம்
அப்பிரதேசத்தில் இருக்கின்றன. அவர்கள் உடமைகளை இழுத்துச்செல்ல அவை உதவுகின்றன. அம்மான்கள் பனிக்கட்டிகளையும்
உண்ணும். ஆறுகள் குளங்கள் எல்லாம் குளிர்காலத்தில்
உறைந்து பனிக்கட்டிகள் போலே இருக்கும். அந்தப்பனிக்கட்டிகளுக்கு கீழே நீர் இருக்கின்றது. அவற்றில் மீன்கள் வசிக்கின்றன..!
அப்பிரதேச மக்கள், மேற்பரப்புப் பனிக்கட்டியை
உடைத்து மீன்பிடிப்பதையும் தொழிலாகவும், விளையாட்டாகவும் செய்கின்றார்கள்.
இந்தப்பிரதேசத்தில் வாழும் குதிரைகளும் மிக மிகச் செழிமையாக இருக்கும். வழமையான தாவர உணவுகள் தாண்டிப் பனிகாலத்தில் பனிக்கட்டிகளையும் இவைகள் உண்ணும்..!
ஆ.கெ.கோகிலன்
05-02-2023.
05-02-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக