கட்டா குஸ்தி

 


எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கத் தொடங்கிய படம், கதையில் சுவாரசியமும், நகைச்சுவையும், புதுமையான சில காட்சிகளும் மனதை மகிழ்வித்ததுடன்,  வாழ்வியல் உண்மைகள் பற்றியும் சில விடயங்களைப் பேசுகின்றது.   

பெண்  என்பவள் சாதிக்க முதல் குடும்பத்திற்குள் போராட வேண்டியிருக்கின்றது.  அதில் வென்றால் தான், வெளியில் ஏதாவது துறையில் சாதிக்க முடிகின்றது. அப்படியான பெண்களுக்கு, தகப்பனும், மகனும், கணவனும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே இந்தக்கதை நகர்கின்றது.


படிக்காத மற்றும் நீண்ட முடிகொண்ட பெண்வேணும் எனும் ஆண்மகனுக்கு எல்லாம் மாறி அமைந்ததால் வந்த விபரீதங்களும், நன்மைகளுமே படம்.
செல்லா அய்யாவு என்பவர் படத்தை ரசிக்கும் வகையில் இயக்கியுள்ளார். இந்தப்படம் அனைத்து தரப்பையும் கவரக்கூடிய வகையில் இருக்கின்ற ஒரு வெற்றிப்படமாகும்.

விஷ்ணு விஷால் மற்றும் ஜஸ்வரியா மேனன் சிறப்பாக நடித்திருந்தார். அனைவர் பாத்திரங்களும் மனதில் பதியும் வகையிலே படத்தில் காட்சிகள் இருக்கின்றன. படத்தின் ஹீரோவே  இன்னொருவருடன் சேர்ந்து படத்தையும் தயாரித்துள்ளார்.

ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், படத்தொகுப்பு  எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன.



ஆ.கெ.கோகிலன் 
(31-01-2023).




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!