கடாவர்..!

 


இந்தப்பெயரே புதுமையானதாக இருந்தது..! மருத்துவம் படிப்பவர்களுக்கு இது அறிமுகமான பெயர். மருத்துவப்படிப்பிற்காக வழங்கப்படும் இறந்த உடல் தான் கடாவர் (Cadaver). சில மனிதர்கள் இருக்கும் போது பயன்படாவிட்டாலும் இறந்தபின்னர்  உலகிற்கு பயன்படுவதும் இறைவனின் விருப்பமே..!

மருத்துவ உலகம் வியாபார உலகத்துடன் நெருங்கியதால் வந்த விளைவு மருத்துவ வியாபாரம்..! உலகை ஆட்டிப்படைக்கும் ஒரு பெரிய விடயத்தை, ஒரு அழகான காதல் கதைக்குள் புகுத்தி, அருமையாகத் திரைக்கதை அமைத்து படத்தை கண்கொட்டாது பார்க்கும்படி செய்துள்ளார் மலையாள இயக்குனர் அனூப் எஸ் பனிக்கர் (Anoop S Panicker).  


அதேபோல் படத்தில் பணிபுரிந்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். குறிப்பாக   பிணவறையில் (Mortuary) உடற்கூராய்வு (Postmortem) செய்யும் மருத்துவராக (Pathologist) வந்த அமலா போலின் (Amala Paul) நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. அவரின் உடல்மொழியும், கண்கள் சொல்லும் காவியமும் மனதில் தைத்தது.

கண்களால் தகவல் கடத்தும் ஒரு நுட்பத்தை இதுவரை நான் எந்தத்தமிழ் படத்திலும் பார்க்கவில்லை. இதற்கே ஒரு சலூட் வைக்கலாம் இயக்குனருக்கு..!

என்னைப்பொறுத்தவரை நல்ல படம் என்பதற்காக அனைத்து தகுதிகளும் இந்தப்படத்திற்கு உண்டு. 



2022இல் டிஸ்னி ஹொட் ஸ்டார் (Disney + hotstar) என்ற இணையத்தளத்தில் (OTT)  இப்படம் வெளிவந்தது. ஆனால் படம் வணிகரீதியில் வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அமலா போலின் தயாரிப்புக்கு பாராட்டு, மக்கள் படத்தை  வேறுபட்ட ஊடகங்களில் பார்க்கும்போது கொடுப்பார்கள் என்பது எனது கருத்து.

நல்ல விறுவிறுப்பான திகில் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இது நல்ல ஒரு விருந்தாக இருக்கும்.

 


ஆ.கெ.கோகிலன்

20-02-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!