நினைத்தது முடிந்தது..!

 



சில விடயங்கள் நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் நடாத்த முடியாது. அறிவியல் பூர்வமாகக்  காரணம்   சொல்வது கடினம். ஆனால் ஆன்மீக ரீதியில் சிந்திக்கும் போது புரிகின்றது..! பிரபஞ்சம் என்பது எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டு தான் இருக்கின்றது. அதனை இயற்கை என்றால் என்ன அல்லது கடவுள் என்று சொன்னால் என்ன ஒன்று மட்டும் நிச்சயம். அது எம்மைவிட பெரிய சக்தி இந்தப்பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துகின்றது..! 

அது சம்மதித்தால் தான் சில காரியங்கள்  பூமியில் நடக்கும். அது சம்மதிக்கவில்லை என்றால் எவ்வளவு முயன்றாலும் முடியாது. ஒரு சின்ன விடயம். ஆனால் என்னால் முடியவில்லை. ஏறக்குறைய ஒருவருடம் முழுவதும் முயன்றும் முடிக்க முடியவில்லை..!


அம்மன் கோவில் திருவிழா தொடங்க  முதல் வீட்டுக்கு வௌ்ளையடிக்க நினைத்தேன். தொடர்மழையால் தடைப்பட்டது. இடையில் தாத்தாவின் ஆண்டுத்திவசத்திற்கு முன்னர் வெள்ளையடிக்க நினைத்தேன். அப்போதும் மழையால் தடைப்பட்டது. பின்னர் மகளின் சமத்தியவீடு செய்யலாம் என்றும், தங்கச்சி வேறு கனடாவில் இருந்து வருவதால் வீட்டின் நிறத்தை மாற்ற முனைந்தேன். கடும் மழையால் அந்த விடயத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை. இந்தவருடமும் பொங்கல் முடிந்ததும் வௌ்ளை அடிக்க நினைத்தேன். திரும்ப மழைவந்து குழப்பிவிட்டது. இனி அடிப்பதே இல்லை. நடக்கிறநேரம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்ன மாயமோ தெரியவில்லை..! இன்று அந்த வேலை முடிந்துவிட்டது. மழை குழப்பவில்லை. இன்னும் சில நாட்களில் அம்மனின் அடுத்த வருடப்பூஜையும் வருகின்றது. ஆனால் வீடு புதுப்பொலிவுக்கு வந்துவிட்டது..! ஒருவருடம் தாமதம் ஆனதற்கு காரணம் புரியவில்லை. ஆனால் பல விடயங்கள் உலகில் நடந்துகொண்டிருக்கின்றன. இலங்கையின் ஆட்சி மாறியது..! உக்ரேன்- ரஷ்யா போர் தொடங்கித் தொடர்கின்றது..! பொருளாதார நெருக்கடி உலகெங்கும் தலைவிரித்து ஆடுகின்றது..!  பெற்றோல் இல்லாமல் நாள் கணக்கில் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலை வந்தது..! விலைவாசி அதிகரிப்பு ஏற்பட்டது..! வேலையில்லாப் பிரச்சனைகளும் அதிகமாகின.!. துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் அதிக உயிர்களையும், உடமைகளையும் பறித்துள்ளது..!

சம்பளமே வருமா என்ற சூழலும் வந்து எம்மைப் பயமுறுத்துகின்றது..!

இப்படியான சூழலில் மாட்டியிருக்கும் உலகத்தை யார் தான் காப்பாற்ற முடியும்..?

நான் நம்புகின்றேன் ”நேரம் வந்தால். அனைத்தும்  முடியும்..!

 


ஆ.கெ.கோகிலன்

12-02-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!