துருக்கிப் பூமியதிர்ச்சி..!
ஒவ்வொரு நாளும் உலகில் நன்மையான மற்றும் தீமையான பல விடயங்கள்
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.
இது இயற்கையின் கட்டளையா அல்லது மனித அறிவியலால் ஏற்பட்ட தவறா நாம் அறியோம். அதேபோல் ஒவ்வொரு விநாடியும்
பிறப்புக்களும், இறப்புக்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பூமியும் அதற்கேற்பவே
இயங்குகின்றது.
அண்மையில் 18 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட
7.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்வு துருக்கி மற்றும் சிரியா
போன்ற நாடுகளை பெரிதாகத் தாக்கியுள்ளது. 3000 மேற்பட்டவர்கள் துருக்கியில் இறந்துள்ளார்கள்.
அதேவேளை சிரியாவில் 2000 அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர், காயமடைந்தோர்
எண்ணிக்கை பல இலட்சங்கதளைத் தாண்டியுள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட பல அதிர்வுகளால் மக்கள் பெரும் கலக்கத்தில்
உள்ளனர். அயல்நாடுகளிலும், அதன் தாக்கம் உணரப்பட்டதுடன் பாதிப்புக்களும் ஏற்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளின் கவனம் தற்போது துருக்கி மற்றும் சிரியா போன்ற அருகிலுள்ள
நாடுகளின் மேலும் திரும்பியுள்ளது.
பல நாடுகள் இந்த கஷ்டமான சூழலில் துருக்கிக்கு பல்வேறுபட்ட
உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்
ரஷ்ய இராணுவமும் உதவிக்கு வந்துள்ளது என்பது தான்.
உலகமே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் இயற்கை வில்லனாக மாறவேண்டும் போலிருக்கின்றது. பூமியில் இயற்கை அழிவுகள் வருவது, சமநிலைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு என்பதே எனது கருத்து..!
2000 வருடங்கள் பழமையான புராதன கட்டடங்கள் கூடத் தரைமட்டமாகியுள்ளன. கொரோனா, யுத்தம், இப்படியான இயற்கை அழிவுகள் உலகை
மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்கலாம் என நினைக்கின்றேன். இவற்றில் இருந்து மீளவும் அந்த
இயற்கையே எமக்கு உதவவேண்டும்.
06-02-2023
கருத்துகள்
கருத்துரையிடுக