யசோதா..!

 

 

வாடகைத்தாய்  (Surrogacy)  தொடர்பான படம் என்ற எண்ணத்தில் படம் பார்க்க உட்கார்ந்தேன்.  ஆனால் படம் வேறுதிசையில் பயணித்து, ஆச்சரியப்படுத்தியது. 

நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமணம் செய்து சில மாதங்களில் இரட்டைக்குழந்தைகள்  பெற்றதாகவும், அவை வாடகைத்தாயின் உதவியுடனே பிறந்ததாகவும் தெரிவித்தார்கள். இந்தக்கதை, அந்தசெய்தி பரவிய சந்தர்ப்பத்திலே இப்படமும் வெளிவந்தது.  அதனாலேயே அந்த எண்ணத்துடன் படம் பார்த்தால் படம் வேறுமாதிரி இருந்தது. 

அழகுக்காக குழந்தைகளை உருவாக்கி, அவற்றின் திசுக்களை எடுத்து அழகுச்சிகிச்சை செய்து பெரும் பணம் சம்பாதிக்கும் சட்டவிரோதக்கும்பலை கண்டுபிடித்து அழிப்பதே படத்தின் கதை.

சமந்தா ஒரு கதாநாயகி மாத்திரம் அல்லாமல் கதாநாயகனாகவும்  அசத்தியிருந்தார். உன்னி முகுந்தன் (Unni Mukundan), சரத்குமார் வரலஷ்மி, சம்பத், ராவோரமேஷ் (Rao Ramesh), முரளி சர்மா (Murali Sharma) போன்ற பலர் நடித்திருந்தார்கள். விறு விறுப்புடன், திகிலாகப் படத்தைக்கொண்டுசென்றாரகள்.  சமந்தா பொலிஸ் ரெயினிங் எடுத்தவர் என்று தெரிந்ததும் படம் இன்னும் சூடுபிடித்தது. நம்ப முடியாத பல காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டுள்ளன.  இருந்தாலும் படம் ரசிக்கக்கூடியதாக இருந்தது.

2022இல் வெளிவந்த இப்படத்தை ஹரி மற்றும் ஹரீஸ் (Hari Harish) என்பவர்கள் இயக்கியுள்ளனர்.  படத்தில் ஏனைய தொழில்நுட்ப பிரிவினர்களும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். குறிப்பாக ஒளிப்பதிவு, இசை மற்றும் படத்தொகுப்பு என்பவற்றைச் சொல்லலாம்.

குறிப்பாகச் சிறுவயதிலே வாடகைத்தாயாகப்போகும் பெண்கள்,  பணத்திற்காக கர்ப்பமாவதும், பலவீனமான கர்ப்பப்பைப் பிரச்சனைகளால் இறப்பதும், வேறும்  சில அற்ப  நோக்கங்களுக்காக வாடகைத்தாயாக முனைவதும் அவமானம் என எடுத்துக்கொள்ள வேண்டும்.  இயற்கைக்கூறுகளை வியாபாரமாக முயலும் கும்பல்கள் பெரும் இந்தக்காலத்தில் பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தாய்மை, குழந்தைப்பேறு போன்ற விடயங்களில் அதிக அக்கறை எடுக்கவேண்டும். இயற்கை அளிக்கும் கொடைகளை வீணடிக்கக்கூடாது. பணத்திற்காக இவ்வாறு போகும் பெண்களை காக்க, எல்லோரும் உதவவேண்டும். விஞ்ஞானம் வியாபாரமாகின் உலகின் அழிவை காப்பது கடினம். எல்லாவற்றிற்கும் ஒரு அளவு வேண்டும்.

 

Hari Harish

ஆ.கெ.கோகிலன்

25-02-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!