நிகரகுவா தீவிலுள்ள விமானப்பாதை..!

 
வீதி மற்றும் விமான ஓடுபாதை 

உலகில் வளரும் சில நாடுகள், இருக்கும் வளங்களை உச்சமாகப் பயன்படுத்த பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றது.  ஒரு காப்பெற் வீதியை (Carpet Road) அமைக்க மிகுந்த செலவாகும். அதேபோல் ஒரு விமான ஓடுபாதையை அமைக்கவும் அதிக செலவாகும்.

நிகரகுவா

இரண்டும் குறைவாக பயன்படும் சூழலில் ஒரு வீதியினையே விமான ஓடுபாதையாகவும், மக்களின் பொதுவான போக்குவரத்து வீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றது..!

ஒமிரேபே தீவு

இவ்வாறு ஒரு வீதியையே இரண்டு வழியிலும் பயன்படுத்தக்கூடியவாறு நடவடிக்கை எடுத்திருப்பது நிகரகுவா(Nicaragua)  அரசு. குறிப்பாக ஒமிரேபே (Ometepe) என்ற
ஏரியின் நடுவிலுள்ள தீவிலே இப்படியான வசதியுள்ளது.

ஒமிரேபே தீவு

மேலும் இத்தீவில் இரண்டு எரிமலைகள் உள்ளன. இருந்தாலும் இந்தத்தீவில் மக்கள் வசிக்கின்றார்கள்..!  இந்நாட்டில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. 

ஒமிரேபே என்ற தீவு உருவாவதற்கு காரணமே இந்த இரு எரிமலைகளின் வெடிப்புகள் தான். எரிமலை வெடிப்பால் வெளித்தள்ளப்பட்ட பாறைக்குழம்புகளே இறுகிப்பின்னாட்களில் ஒரு தீவாகவே மாறிவிட்டது. அத்துடன் ஏறக்குறைய 30இற்கும் அதிகமான மக்கள்  தற்போது இங்கு வாழ்கின்றார்கள். இங்கு எமது பிரதேசத்தைப்போல் பசுமையான இயற்கைச் சூழலும், மரங்களும், உயிரினங்களும் இருக்கின்றன. ஆடுகள், மாடுகள், குதிரைகள், பன்றிகள், கோழிகள், வாத்துக்கள் போன்றவற்றை வளர்ப்பதன் ஊடாக இயற்கையான வாழ்வியலை மக்கள்  மேற்கொள்கின்றார்கள். விமான ஓடுபாதையும் ஒரு கிழமையில் இரண்டு தடவைகள் (வியாழன் மற்றும் ஞாயிறு) தான் பயன்படுவதாகச் சொல்கின்றார்கள். ஏனைய நேரம் அது பொதுவீதியாகவே பயன்படுகின்றது.  தேவைகளுக்கு ஏற்பவே செலவுகளைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் பொருளாதாரக் கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

விமான நிலையம்

ஆ.கெ.கோகிலன்

21-02-2023.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!