பெல்டன் தீபந்தக் கொண்டாட்டம்

 

Beltane- Gaelic May Day Festival

மக்கள் தாம் பிறந்த நாடுகளின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் வாழ்வியலும் அமைகின்றது. ஐரோப்பியர்களின் வாழ்க்கை முறை முற்றுமுழுதாக எம்முடைய வாழ்க்கை முறைகளில் இருந்து வேறுபடுகின்றது. குளிரில் வாழக்கூடிய உடலமைப்பை அவர்கள் கொண்டுள்ளார். அதற்கு ஏற்பவே அவர்களின் உணவுப்பழக்கங்கள், கொண்டாட்டங்கள் போன்றவை இருக்கும். அந்த வகையில் ஸ்கொட்லாண்ட் (Edinburgh) மக்களின் கலாசாரங்களும் இருக்கின்றன.


இந்தக் குளிரான காலத்தில், அவர்கள் குளிரைத்தாங்க நெருப்பினைப் பயன்படுத்துவார்கள். அப்படியாக உருவாக்கப்பட்ட கொண்டாட்டம் தீப்பந்த கொண்டாட்டம் (
Beltane Fire Festival)அப்பிரதேச மக்கள் தீபந்தங்களுடன் வலம் வருவார்கள். ஊரே ஜெகஜோதியாக காட்சியளிக்கும். குளிரின் தாக்கம் கூடினாலும், இந்த நெருப்பால் குளிர் குறைவாக இருப்பதாகத் தோன்றும். மகிழ்ச்சி எங்கும் பரவும். கொண்டாட்டமே குதூகலிக்கத் தானே..!



இளவேனில் காலம் தொடங்குகின்ற மகிழ்ச்சியைத் தெரிவிக்கவும் பொதுவாக மே 1 இற்கு முதல் இதனைக் கொண்டாடுவார்கள்..! காலநிலைகளுக்கு ஏற்ப கொண்டாட்டங்களையும் உருவாக்கி வைத்துள்ளார்கள் முன்னோர்கள். நாம் அதனைப் பின்பற்றினாலே போதும். வாழ்க்கை இலகுவாக இருக்கும். இருந்தாலும் சில தவறுகளும் இருக்கலாம். காலப்போக்கில் அவையும் சரியாக வாய்ப்புண்டு.


ஆ.கெ.கோகிலன்
(02-02-2023)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!