கணம் முக்கியம்..!

 


பல ஆன்மீக வாதிகள் என்ற போர்வையில் இருப்பவர்கள் நேற்றைய விடயங்களை மற என்றும் நாளைய விடயங்களையும் மற என்றும் இந்தக்கணத்தை மட்டுமே நினைத்து வாழ் என்று சொல்கின்றார்கள்..!

இது தான் இயற்கை. விலங்கின் இயல்பு. நீண்டகாலமாக மனித இனம் அறிவு என்னும் ஒரு விடயத்தால் ஏனைய விலங்குகளை விட வேறுபடுகின்றது. அதன் நோக்கமே ஒழுங்கான வாழ்க்கை முறைக்கு தேவையான நல்ல நியாயமான விடயங்களை மக்களிடம் புகுத்தி, மனிதத்தன்மை மேலோங்கியவர்களை உருவாக்குவதே..! ஆனால் இன்று அறிவே வியாபாரமாகிவிட்ட உலகில், மீண்டும் மனிதனை முற்றான விலங்காக மாற்றும் முயற்சிகள் உலகெங்கும் நடக்கின்றன..!  அது பல வழிகளில் அரங்கேறுகின்றது. மதுபானம், கஞ்சா போன்ற போதைதரக்கூடியவற்றை எடுப்பதும், அதன் பின்னர் ஏற்பட்ட போதையால் விலங்குகள் போல் செயற்படுவதும், அதனால் ஏற்படும் பல விளைவுகளையும் நாம் ஒவ்வொரு நாளும் நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் பார்த்துக்கொண்டும், அனுபவித்துக்கொண்டும் தான் இருக்கின்றோம்.  இவர்களின் வேதமந்திரம் இந்தக்கண வாழ்க்கை மட்டுமே..! அப்படி என்றால் யாரை கொலை செய்யலாம், கற்பழிக்கலாம், எந்தக்கெடுதல்களையும் தனது சந்தோசத்திற்காகச் செய்யலாம் என்பதே அறிவு குறைந்தவர்கள் எடுக்கும் முடிவாகிவிடும். இதனை சில ஊடகங்கள் விளம்பரங்களிலும் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. அது சொல்வது ஒன்றையும் பற்றிக் கவலைப்படாதே..!



உனது சந்தோசமே முக்கியம் என்கின்றது..! இப்படிச்சொல்லிச் சில சாமியார்களும் திரிகின்றார்கள்.

உண்மையில் இந்தக்கருத்து, துன்பமான சூழலில் இருந்து மீளும் ஒருவர் மீளுவதற்காகச் சொல்லப்பட்டதே தவிர, யாரையும் பொருட்படுத்தாமல் அனுபவிப்பதற்கு அல்ல..! இப்படியான கருத்துக்களை மாணவ சமூதாயத்திடம் விதைத்தால் அவர்களால் எப்படி படிக்க, திறன்களை வளர்க்க, முயற்சிகள் செய்ய முடியும்.

இயற்கையோடு ஒன்றிப்போக வேண்டும். ஆனால் எமது வாழ்க்கை மற்றவர்களுக்கு எந்தக்கெடுதலையும் செய்ய அனுமதிக்கக்கூடாது. குறைந்த பட்சம் சக மனிதர்களுக்காவது கெடுதல்கள் செய்யாமல் இருக்க பார்க்க வேண்டும். (Past is History, Future is Mystery, Present is Gift. So enjoy it.)

 



ஆ.கெ.கோகிலன்

12-02-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!