75ஆவது சுதந்திர தினம்..!
2023 இல் இலங்கையர்கள்
75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயங்குகின்றார்கள். நாட்டை, ஆளுபவர்கள்
சூறையாடிவிட்டதாகத் திட்டுகின்றார்கள். மாணவர்கள் அரசியல் பின்புலங்களால் தூண்டப்பட்டு,
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலைக் கடைப்பிடிக்க கோரியிருந்தார்கள். நாட்டை ஆளுபவர்களை கொண்டுவருவது மக்களின் வாக்குகள்
தான். மக்கள் சரியான தலைமைகளைத் தீர்மானிக்க வேண்டும். தமது தேவைகளைத் தீர்க்கும் வியாபார
நபர்களை
தேர்ந்தெடுத்தால் இவ்வாறான சூழலைத் தவிர்க்க முடியாது. ஆங்கிலேயர்கள்
ஆண்டாள் என்ன..? சிங்களவர்கள் ஆண்டாள் என்ன..? நம்மவர்களை ஆளவிட்டாலும் என்ன..? யாரும் இலங்கைத் தாயை ஒன்றும் செய்ய முடியாது. அது
ஆதிகாலம் தொட்டு, அழியும் வரை அப்படியே தான் இருக்கின்றது. யார் என்ன ஆட்டம் ஆடினாலும் எல்லாம் தனக்குள் அடங்கும்
என்ற உண்மை, இலங்கைத் தாய்க்குத் தெரியும்.
இலங்கைத் தாய் மக்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. எங்கள் எல்லோரையும்
இந்தக்கணம் வரை தாங்கி, உயிருடன் வைத்திருக்கும் அன்னைக்கு நாம் நன்றியுடையவர்களாக
இருக்க வேண்டும். தாயை கௌரவிக்கும் இந்நாளை நாம் மௌனமாகவேனும் வணங்க வேண்டும். அன்னையின்
ஆசியிருந்தால் மட்டுமே எதிர்காலம் எமக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.
இலங்கையர்கள் அனைவருக்கும் 75ஆவது சுதந்திரதின வாழ்த்துக்கள்.
அத்துடன் எம்மைத் தாங்கும் இலங்கை அன்னைக்கு எமது நன்றிகள்.
ஆ.கெ.கோகிலன்
(04-02-2023)
கருத்துகள்
கருத்துரையிடுக