ஒரு வருட நிறைவு..!

France, Eiffel Tower lit up in blue and yellow to mark anniversary of Russia-Ukraine  conflict

நல்ல சந்தோசமான நிகழ்வுகளின் ஒரு வருட நிறைவு என்பது மகிழ்ச்சிக்குரியது. இன்று உக்ரேன்-ரஷ்யா சண்டை தொடங்கி ஒரு வருடம் முடிந்துவிட்டது. என்னைப்பொறுத்தவரை இதனைப்பற்றிக்கதைக்க ஒன்றுமில்லை. ஒரு சண்டை முழு உலகத்தையும் பாதிக்கின்றது. அமைதிக்கான வழிகளைத்தேடிப் பயணிக்க தடையாக இருப்பது, தற்போதைய மனிதர்களின் சுயநல எண்ணங்களே..!
Opera House are illuminated with the colors of Ukraine's national flag


உலகின் பல நாடுகள் உக்ரேனுக்கு மறைமுகமாக பல உதவிகளைச் செய்வதுடன், உக்ரேனைத் தூண்டிக்கொண்டிருக்கின்றது. வெளிப்படையாக இந்தப்போரை வெறுத்தாலும், இந்நாடுகளிலுள்ள சிலர், தமது ஆயுத உற்பத்திகள், போர் விமான உற்பத்திகள் என்பவற்றினை, உதவிகள் என்ற பெயர்களுடாக  தமது உற்பத்திகளை விற்று பணம் சம்பாதிக்கின்றார்கள்.

Liberty Statue
இது ஒரு புறம் என்றால் இன்னும் சில நாடுகள் நடுநிலையில் இருப்பது போல் நடித்து, தமது நாட்டின் நலத்தையும் பொருளாதாரத்தையும் இச்சமயத்தில் அதிகரித்து, உலக வல்லரசுப்போட்டியில் குதிக்கின்றார்கள்..!

 Serbia People

இன்னும் சில நாடுகள் ரஷ்யாவின் ஆதரவு நாடுகள் என்று சொல்லிக்கொண்டு, தேவையில்லாமல் சண்டையைத் துவங்கிய ரஷ்யாவை உசுப்பேத்திக்கொண்டு இருக்கின்றார்கள்..!

Georgia People

இவ்வாறான நாடுகளுக்கு மத்தியில் வளரும் சில நாடுகள் கொரோனா பாதிப்பை ஈடுசெய்யமுன்னரே இந்த யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களால் இன்னும் கீழே பொருளாதாரத்தில் விழுந்து, விழிபிதுங்கி இருக்கின்றன..!

Common People

இவ்வாறாக, உலகம் பல நலன்களில் சிக்கல்பட்டிருக்க இயற்கை தன்பாட்டுக்கு, இன்னும் பேரிடிகளைக் கொடுத்துவருகின்றது.  இந்தச் சூழலில் நிச்சயமில்லாத தன்மை அதிகரித்துச்செல்வதால்,  மக்களின் வாழ்வியல் முறைகள் மாறுகின்றன. என்னைப்பொறுத்தவரை, அறிவால் வந்த இந்த வினையைப் போக்க உலகை அன்பால் அளக்கவும், எல்லோரையும் அரவணைத்துச் செல்லவும் கூடிய தலைமைத்துவங்களுடாக  அமைதியையும், நிறைவையும் மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய தலைமைகள் பெருகவேண்டும். ஏனைய உயிர்கள் போல், இயற்கையுடன் இணைந்து வாழும் வாய்ப்புக்களை அறிந்து, அவற்றினூடாக வாழப்பழக வேண்டும். இயற்கையை இயன்றளவு பேணிப் பாதுகாக்க வேண்டும். இதைச்செய்தால் இயற்கையும் அவ்வாறே இந்தப்பூமியை வளத்துடன் வைத்திருக்க உதவும். புரிந்து, தெளிந்து இந்த உலகில் பயணிப்போம்.

Ukraine



ஆ.கெ.கோகிலன்
24-02.2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!