தோடம்பழத் திருவிழா..!


 



உலகில் பல்வேறுபட்ட கொண்டாட்டங்கள் நடக்கின்றன..! இவை அந்நாடுகளின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப அமைகின்றன.  ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் அப்படியான ஒரு விழா .  ஒவ்வொரு வருடமும்

நடைபெறுகின்றது. உலகில் ஏற்பட்ட அசாதாரண சூழல்  காரணமாக கடந்த 3 வருடங்கள் இவ்விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை.  இந்தவருடம் பெப்ரவரி 18 இல் இந்தவிழா நடந்துள்ளது.

ஐவ்ரியாவின் கானிவேல் (The Carnival of Ivrea) என்று அழைக்கும் இவ்விழா, வடக்கு இத்தாலியின் ஒரு நகரமான ஐவ்ரியாவில் நடைபெறும் ஒரு திருவிழா.  இதனை தோடம்பழங்கள் (Oranges) எறியும் போர் என்றும் அழைக்கப்படும். ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்களிடையே தோடம்பழங்களை வீசி எறிந்து விளையாடும் பாரம்பரியமிக்க இந்த விளையாட்டை, இத்தாலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் மக்கள் நடாத்துகின்றார்கள்.

 


தோடம்பழப் போர், (War of the Oranges -1801), என்பது போர்த்துக்கல்லுக்கு எதிராக பிரான்சிற்கும் ஸ்பெயினுக்கும்  ஏற்பட்ட சிறிய முரண்பாட்டால்(Brief Conflict) வந்தது. 1800ம் ஆண்டில், பிரான்சின் அரசியல் மற்றும் பொருளாதார விரிவாக்கத்தை (Political and economic extension) நோக்கமாகக்கொண்ட நெப்போலியனின் கோரிக்கைகளை (Napoleon's Demands) போர்த்துக்கல் ஏற்க மறுத்ததால் இப்போர் உருவானது.



ஆ.கெ.கோகிலன்

18-02-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!