நட்சத்திரம் நகர்கிறது..!

 


பொன்னியின் செல்வன் போல் எரிநட்சத்திரம்  (shooting star) விழுவதையே ஒரு  விந்தைபோலும், அதனை ரசிக்கக்கூடிய வகையில் கதாநாயகி  பேசுவதாக பல இடங்களில் காட்சிகளை படத்தில் வைத்துள்ளார் இயக்குனர். அபசகுனம் என்று பொன்னியின் செல்வனில் கருதும்போது, இங்கு அது இயற்கையின் ஒரு அழகாக, அற்புதமாகப் பார்க்கப்படுகின்றது என்பது சிறப்பு..!ஆணவக்கொலை, நாடகக்காதல், ஒரு பாலினக்கவர்ச்சி, சந்தேகம், துரோகம் போன்ற பல மனித  விநோத இயல்புகளைப் பல கதாபாத்திரங்களுடாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.


காட்டுப்பூனை மற்றும் நாட்டுப்பூனைக்கு இடையிலான காதலையும், அதனால் ஏற்படும் புறச்சூழல் தாக்கங்களையும் மறுதாக்கங்களையும்  நாடகக் கலைக்குள்  கொண்டுவந்து, அதனூடாக விஞ்ஞானமும், மெய்ஞானமும் தெரிகின்றது..!

நாடகப்பட்டறையில் நடக்கும் சம்பவங்களுடாகக் கதையைக் கொண்டு செல்வதும், என்ன தான் அறிவியல் மாற்றங்கள் வந்தாலும், நாம் மாறமாட்டோம் என்று அடம்பிடிக்கும் வைராக்கிய மனம்கொண்ட மக்கள் கூட்டத்தைப் பிரதிபலிக்க, ஒரு உறுதியான விநோக கதாபாத்திரம் ஊடாக முயன்றுள்ளார்கள்..!

பலருக்குப் புரிந்ததோ தெரியவில்லை. எனக்கு புரிந்தது..! நவீன ஓவியங்கள் போல், நவீன குறியீட்டுக்  காட்சி வெளிப்பாடுகள் படத்திற்குப் புதிய அழகு..!

மாற்றங்கள் ஏற்கும் பக்குவம் மனங்களில் வரவேண்டும்.  அதை எதிர்க்க ஒரு கூட்டம் இருந்தேயாகும். அதனை எதிர்க்க ஏனையோர் ஒன்றுபட்டே ஆகவேண்டும். அப்போது தான் வர்ணங்களால் பிரிக்கப்பட்ட பல தாழ்ந்த மக்களின் உணர்வுகளை அறியமுடியும். விநோத உலகத்தையும் நாம் ரசிக்க முடியும். இல்லையேல் துயரத்துடனே சகித்துத்தான் செல்லவேண்டும். முன்னைய காலங்களில் இருந்தது போல் அதற்கு பழக்கப்படவும் வேண்டும்.

நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். நாயகி  துசாரா விஜயன் வாழ்ந்துள்ளார். பா.ரஞ்சித் படம் என்றாலே வில்லங்கமான கதைக்களம் தான்..!  அவரது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேலும் சிலருடன் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளார்.  இருந்தாலும் இயக்கத்திற்கு கூட்டுச்சேரவில்லை.  பா.ரஞ்சித், சமூகத்திற்கு பாடம் எடுக்கும் படத்தையே எடுத்துள்ளார். ரசிக்க முடிகின்றது. சில இடங்களில் காட்சிகள் முகம் சுழிக்கவும் வைக்கின்றது.. ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் படம் தருகின்றது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


ஆ.கெ.கோகிலன் 
(29-01-2023).





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!