சுடுகாற்று விநியோகம்..!

A plant providing heating for the people of Yakutsk in Siberia releases smoke into the air as dusk falls.


 எமது நாட்டில் சூரியன் வஞ்சகம் பார்க்காமல் இருப்பதால் நாமெல்லாம் மிக ஆரோக்கியமாகவும், எங்கும் போய்வரக்கூடிய வகையில், சூழலும் கிடைக்க வரம்பெற்றவர்கள். 

அதேநேரம், இந்த உலகில் ஒரு சாரார் வருடத்தில் அதிக நாட்கள் குளிரிலேயே வாழவேண்டிய சூழலில்இருக்கின்றார்கள். அவர்களைப் பார்க்க நல்ல அழகாககவும், நிறமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதாகத்தோன்றும். அவர்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்த்தால் தான் புரியும்  அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள்..!


-60 அல்லது -70 பாகை செல்ஸியஸ் வெப்பநிலையில் கூட வாழ்பவர்கள் அவர்கள்..! தமது உறைவிடங்களுக்குள்  குளிரைத்தாங்க எத்தனையோ வழிமுறைகளைச் செய்யவேண்டியுள்ளது. பல வித கம்பளி ஆடைகளை அணியவேண்டியுள்ளது. கொழுப்பான உணவுகளை அதிகம் எடுக்கவேண்டியுள்ளது.  தண்ணீருக்குச் சிரமப்பட வேண்டியுள்ளது. உருகிய பகுதிகளுக்குச் சென்று நீர் எடுக்க வேண்டியுள்ளது. இல்லை என்றால் பனிக்கட்டிகளை உருக்கி நீராக்க வேண்டி இருக்கும். அவர்களின் வாழ்வியலும் போராட்டமானதே..!

இப்படியான இடங்களில் வசிப்பவர்களுக்கு என்று அரசோ அல்லது தனியார்களோ சுடு காற்றை விநியோகிக்கும் சேவைகளைச் செய்து அதனூடாக பணவருவாயினையும் ஏற்படுத்திக்கொள்கின்றார்கள். அவர்களுக்கு இது சாதாரணமாகத் தோன்றினாலும் நமக்கு இது புதுமையானதே..!


ஆ.கெ.கோகிலன்
23-02-2023.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!