அல்காட்ராஸ் சிறை (Alcatraz Prison)
ஒரு மனிதன் தனியாக ஜன்னலே இல்லாத ஒரு அறைக்குள் அடைபட்டு
இருப்பதே ஒரு தண்டனை என்றால், இன்னும் அதிக தண்டனை என்னவென்றால், வெளியே தலைகாட்ட முடியாதபடி
மற்றவர்களால் பூட்டப்பட்ட அறைக்குள் இருப்பது..!
மற்றவர்களால் பூட்டப்பட்ட அறைக்குள் இருப்பது..!
கைதியாக சிறையில் இருப்பவர்களை நினைக்கும் போதே
மனம் பதைபதைக்கின்றது. அதுவும் இருண்ட சிறைக்குள்
இருப்பது என்பது மிகப்பெரிய தண்டனை.
அறிவு இருப்பதாலே இது தண்டனையாகத் தெரிகின்றது. வெளியில் இருக்கும் சுதந்தரம், வெளிச்சம் என்பவற்றை நினைக்க எமது அறிவே காரணம். அதுவே எம்மை அழுத்தும்..! வருத்தும்..! அது மிகவும் வேதனையான ஒரு விடயமாக இருக்கும். இந்த அறிவு இல்லை என்றால் எங்கு அடைத்தாலும் கவலையில்லை. ஒரு சாதாரண விலங்குபோல் இருக்க வேண்டியது தான். இருந்தாலும் சில விலங்குகளே அடைத்து வைக்கும்போது அதற்கு வீரியமும் கோபமும் கூடுகின்றது. அப்படி என்றால் மனிதனுக்கு..?
வீடியோ ஒன்றில் அல்காட்ராஸ் என்ற ஒரு தனித்தீவிலுள்ள சிறைச்சாலையைப்
பார்த்தேன். அது இப்போது ஒரு சுற்றுலாத்தலமாக இருக்கின்றது..! முன்பு எத்தனையோ கைதிகள்
அங்கு சிறைவைக்கப்பட்டு இருந்தார்கள். சிலர் விடுவிக்கப்பட்டார்கள். பலர் அங்கேயே மாண்டுள்ளார்கள்.
சிலர் தப்பியதாகவும் அறிய முடிகின்றது. சிலர் தப்பிக்கும் முயற்சியில் இறந்துள்ளார்கள்.
இப்படியாகப் பல சம்பவங்களைப் பார்த்த சிறைச்சாலையாக அது இருக்கின்றது. அதனைப்பார்க்க பலரும் போகின்றார்கள். தற்போது ரசிக்கக்கூடிய அந்த இடம் அந்த காலக்கைதிகளுக்கு, அந்த இடத்தை ரசிக்கும் வாய்ப்பு இருந்திருக்குமா..?
அங்கே வைக்கப்பட்டுள்ளது..!
அவற்றைப்பார்க்கும் போது தான்
தெரிகின்றது, சிறைகளுக்குப் போகாமல் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலே, அது நல்ல
வாழ்க்கை தான்..!
கருத்துகள்
கருத்துரையிடுக