கானசரஸ்வதி வாணிஜெயராம் காலமானார்.. !

 


சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. அப்படி ஒரு பாடல் "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ.."
50 அல்லது 60 வருடங்களாக உலகத்தமிழர்களிடையே பிரபல்யமான இந்தப்பாடலை பாடிய குயில் வாணிஜெயராம் இன்று அவரது நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டில் மரணமடைந்துள்ளார். 3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர் வாணி ஜெயராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனபல  மொழிப்பாடல்களைப்பாடியுள்ளார்..!


தமிழ்நாட்டின் வேலூரில் 1945-11-30இல் பிறந்த வாணிஜெயராமின் இயற்பெயர் கலைவாணி.  இவரது கணவர் பெயரே ஜெயராம். வாணிஜெயராம் இதுவரை  1000படங்களுக்கு மேல் 10000இற்கு மேற்பட்ட பாடல்களை 19 மொழிகளில் பாடியுள்ளார்.  1000இற்கு மேற்பட்ட பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார். மரணமாகும் போது அவருடைய வயது 78 ஆகும். 1945 ஆண்டு பிறந்த வாணிஜெயராம் பாடகியாக 1971இல் இந்திப்படத்தில் அறிமுகமாகி அங்கே பிரபலமானாலும், தமிழில் வேறுபாடல்கள் பாடினாலும்,  "தீர்க்க சுமங்கலி..!" திரைப்படம்  வெளிவரமுதலே அப்படத்தில் இடம்பெற்ற  "மல்லிகை என் மன்னன்.." என்ற பாடல் அவரைத் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியது..!


இவருக்கு, அண்மையில் இவரது சேவைக்காக 76 ஆவது இந்தியக் குடியரசு தினத்தில் பத்மபூசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் பெறமுதலே அவர் மறைந்துவிட்டார். விருதுதான் அவரைச்சேர தாமதமாகிவிட்டது போலும்..!

இவரது மரணத்தால் இந்தியத் திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் மிகவும் கவலையுடன் இருப்பார்கள். மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானதே..! அவரது உடல் மறைந்தாலும், அவரது பாடல்கள் மூலம் என்றும் வாழ்ந்துகொண்டு இருக்கும் சாகாவரம் பெற்ற சிலரில் வாணிஜெயராமும் ஒருவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.



ஆ.கெ.கோகிலன்
(04-02-2023)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!