மதத்தலைவரின் மரியாதை..!
நான் சில நேரங்களில் இந்து சமயத்தில் பிறந்ததற்காக வேதனைப்படுவதுண்டு..! நான் நினைத்தாலும், சில விடயங்களை என்னால் செய்யமுடியாது என்பதுடன், எனது முயற்சிக்கு அப்பால் அவை வரையறுக்கப்பட்டிருப்பதாக நினைப்பதுண்டு. எனது அம்மாவின் அண்ணன் ஒருவர் எனக்குத் தெரிந்த வரை அசைவம் சாப்பிடுவது கிடையாது. ஒவ்வொரு நாளும் மூன்று வேளைக்கு மேல் அவருடைய சாமியறையிலுள்ள சாயிபாபா உட்படப் பல சாமிகளுக்கு அர்ச்சனைகள் செய்து, அமுது படைத்து, அதன் பின்னரே அவர் உணவை எடுப்பார்..! எனது வயதைவிட நீண்டகாலமாக அந்தப் பயிற்சியைச் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றார்..! அவரைப்பார்த்துப் பார்த்து எனக்குப் பயமே வந்துவிட்டது..! இவ்வளவு உண்மையாகவும், தனது உடலை வருத்தியும் இறைவனை வணங்கினாலும் அவரால் ஒரு கோவிலுக்குள் போக முடியாது..! கோவில் அய்யரே அவ்வளவு ஆச்சாரமாக இருப்பாரா என்பதைச் சொல்ல முடியாது. எத்தனையோ கோவில்களில் பூஜை செய்பவர்கள் கூட உண்மையாகவும், ஆச்சாரமாகவும் இருப்பதில்லை. அவர்களும் மனிதர்கள் தானே. அதை நான் குறையாகச் சொல்லவில்லை. இருந்தாலும் இதுவரை யாரையும் எனது மாமனாரும் குறைசொ...