மூவரின் பிரியாவிடை..!
நான் திருகோணமலையில் இருந்த கடந்த சில வாரங்களில் 2பேர் இந்த உலகத்தை விட்டுச் சென்றுள்ளார்கள்.
நேற்று 3வது நபரும் இறந்துள்ளார்..!
இன்று மூன்று பேரினது வீட்டிற்கும் மனைவியுடன் சென்றுவந்தேன். அதுவே ஒரு பெரிய மனநிறைவைத்
தந்தது.
இங்கு வந்ததும், அவற்றினை மறந்துவிட்டேன்.
பின்னர், குறித்த
மரண வீட்டில் இருந்து, அடுத்த செத்தவீடு நடந்த இடத்திற்குச் சென்றேன். வாசலிலே எனக்குத்
தெரிந்த, முன்பு பழகிய நண்பரின் உறவினர்கள் நின்றார்கள். அவர்களுடன் கதைத்தபோது, இறந்தவர்
அண்மையில் தனது குடும்பத்தாருடன் இந்தியா எல்லாம் சென்றுவந்து ஆரோக்கியமாக இருந்துள்ளார்.
ஒருமுறை யாரோ ஒரு உறவினரின் திருமணத்தில் சந்தித்து, வரும்போது எனது காரிலே வந்து சுன்னாகம் நிறச்சமிக்கை விளக்கடியில் இறக்கிவிட்டேன். அவரை
வீடுவரை கொண்டு சென்று விட ஆசைப்பட்டேன். அவர், தனது சைக்கிள் பக்கத்தில் இருப்பதாகவும், அதனை எடுத்துக்கொண்டு
வீடு செல்வதாகவும் சொல்லி, எனக்கு நன்றியும் தெரிவித்தார்.
இறந்தவரின் மகனின் திருமணத்தின் போது நடந்த சுவையான சம்பவம்
நினைவிற்கு வந்தது. வெளிநாட்டில் இருந்து வந்து, தனக்குத் திருமணம் வேண்டாம் என்று
அடம் பிடிக்க, நானும், எனது பொறியியலாள நண்பரும் அவரை ஈவினை என்ற இடத்திலுள்ள கோவிலுக்கு
கூட்டிச்சென்று, சில பரிகாரங்கள் செய்தோம். சில நாட்களில், அவர் திருமணத்திற்கு சம்மதம்
தெரிவித்தார். அவரது திருமணத்தை, நாம் எல்லாரும் சேர்ந்து நடாத்தி வைத்தோம். இன்று
அவர்கள் இருவரையும் அங்கே சந்தித்தது மகிழ்ச்சி. அவர்கள் திருமணத்தில் தந்த அவரது பெயர்
போட்ட தட்டு, அண்மையில் என்கண்ணில் பட்டு, அவரை நினைவு படுத்தியது..! இன்று அவரைப்
பார்க்க முடிந்தது. அவரும் உடனே, எங்களின் போட்டோவை தனது வெளிநாட்டு தமையனுக்கு அனுப்ப,
அவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடன் கதைத்தது ஆறுதலாக இருந்தது.
இதன் பிறகு தான், நேற்று இறந்தவர் வீட்டிற்குச் சென்றோம்.
இறுதிக்கிரிகைகள்
நாளை தான் நடைபெறும். நாளை, நான் திருகோணமலை போவதால், சிலவேளை போகக்கடினம் என்ற நிலையிலே
இன்று சென்றேன். இறந்தவர் எனது மனைவியின் ஒன்றைவிட்ட
சித்தப்பா..! அவரது மகனும், பெரிய விடுதி ஒன்றை நடத்துகின்றார். அவரது மருமகளும் நான்
முன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் படித்தவர்.
கடந்த வருடம், அவர்களது மகளின் பிறந்த தினத்திற்குச் சென்றுவந்தோம். சிங்கள
சினிமா ஒன்று, யாழில் எடுக்கின்றார்கள். அதோடு சம்பந்தப்பட்ட இயக்குனர் முதல் தொழில்நுட்பக்கலைஞர்கள்
வரை பலர், அவரது ஹொட்டலில் தங்கியுள்ளார்கள். அதுமாத்திரமன்றி, எமது பிரதேச மயாணத்தை
திருத்தி, அழகுபடுத்துவதற்கான ஒப்பந்தம் இறந்தவரின் மகனுக்கே கிடைத்தது..! நேற்று தான்
அந்த வேலைகள் முடிவுற்றிருந்தன. நாளை, தனது தந்தையின் தகனம் அங்கு நடைபெற இருப்பதை
நினைத்து ஆச்சரியப்பட்டார். இறந்தவர், மிகவும்
அழகானவர். நன்றாக ஆடை அணிந்து செல்வார். பார்க்க எப்போதும் டீசன்டாக இருப்பார். எனது
திருமணத்தின் போது, இறந்தவரும், அவரது மகளும் வந்திருந்தார்கள். எல்லார் கண்களும் அவர்கள்
மேலே இருந்தன..! அவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும் உடுத்து, வந்திருந்தனர். அவரின்
மகளும், அப்போது நடிகை மாதிரி அழகாக இருந்தார். தற்போது பார்க்கும்போது, இரு பிள்ளைகளின்
தாயாக, தந்தையின் பிரிவைத் தாங்க முடியாமல், கடும் துயருடன் இருந்தார்.
மரணத்தை யாராலும் வெல்ல முடியாது.
அதனை வெல்ல வேண்டிய தேவையும் இல்லை. எமது கடமை முடிந்தால், நிச்சயம் மரணம் வரும். அதை
ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
“மரணம் என்பது மிகப்பெரிய ஒரு
பரிசு..!” என்பதை யாரும் மறக்கக்கூடாது. அந்தப் பரிசைப்பெற பலர் ஏங்குவதை நான் பார்த்திருக்கின்றேன்.
அது ஒரு நிச்சயமான நிலை..!
ஆ.கெ.கோகிலன்
02-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக