பின்மூச்சுக் குளிசை..!

 

 


மனித நாகரிகம், ஆடையில்லாமல் நிர்வாணமாகப் பிறந்த மனிதனை  ஆடைபோட்டு அழகு பார்க்கின்றது..! இன்னும் மனிதர்களை அழகாக்க மற்றும் ஆரோக்கியமாக்க எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன..!

அது, மனித நாகரீகம் என்ற பெயரில் தொடங்கி, தற்போது மனிதர்களையே அழிக்கும் பெரும் வியாபாரங்களாக மாறி நிற்கின்றன..!

உதாரணத்திற்கு, இயற்கையாக மனிதனுக்கு வரும் வியர்வை நாற்றத்தை, நாம் ஏற்றுக்கொள்ள பழகியிருக்கலாம். கிராமங்களில் வேலைசெய்தவனின் வியர்வையை ரசிக்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள். ஒரு விவசாயி கஷ்டப்பட்டு வியர்வை சிந்திப் பயிரிட்ட விளைபொருட்களைத் தான், நாம் காசுகொடுத்து வாங்கி உண்கின்றோம். எங்களுக்கு காசு எப்படி வந்தது..? நாமும் ஏதோவோர் வேலையில் உழைப்பதன் ஊடாகவே பணம் கிடைக்கின்றது. எமக்கும் வியர்வை வரலாம் அல்லது வராமலும் இருக்கலாம். ஆனால் எமது வேலையினையும், ஒரு விவசாயின் வேலையினையும் சமமாகப் பார்க்க முடியாது. நாம் மனிதர்களின் தொழில் செய்கின்றோம். விவசாயி, உயிர்களை வாழ வைக்கும் இறைவனின் தொழில் செய்கின்றார். அதனால் தான், விவசாயத்தை எல்லா தொழில்களிலும் முதன்மையான தொழிலாக மதிக்க வேண்டும்..! ஆனால் மதிக்கின்றோமா..?

சரி, வியர்வை நாற்றத்தையே சகிக்கமுடியாமல் விவாகரத்து பெற்றவர்களும் இந்தவுலகில் இருக்கின்றார்கள்..!

சிலரது உடலில் ஏற்படும் மணம் சகிக்க முடியாது..! அந்த சிக்கலைப் போக்க, வந்ததே சென்ட் என்று சொல்லக்கூடிய வாசனைத்திரவியங்கள்..! இப்போது வாய்க்குள் நல்ல நறுமணத்தைக் கொண்டுவருவதற்காக பல வாசனைகளைக் கொண்ட திரவங்கள் வந்துள்ளன..!

அதேபோல், இன்று எனக்கு ஒரு ஐடியா தோன்றியது..! மனைவி பிள்ளைகளுக்குச் சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்தார்கள்..! அப்படிச் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் சொன்னது உண்மை தான்..! சிலர் இரவில் உண்ட மச்ச உணவுகளால், வெளிவிடும் பின் மூச்சுக்கள் சகிக்க முடியாது. எனவே வாசனைக்குளிசைகளை அறிமுகப்படுத்தி, ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம் என்ற எண்ணம் வருகின்றது.  அந்தக்குளிசைகளைப் போட்டால், பின்மூச்சுக்கள் பல வித நறுமண வாசனைகளில் பெறமுடியும். யாரும் முகம் சுழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதேநேரம் சூழலும் நறுமணத்துடன் இருப்பதால், அனைவரும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்வார்கள்..! இங்கு, குளிசைக்குப் பதிலாக, ஒரு சிறிய கருவியை பின்மூச்சு வெளிவரும் பகுதியில் பொருத்தி விட்டாலும் நல்ல நல்ல வாசனைகளில் காற்றை வெளியிடலாம்..! மனித நாகரீகத்தின் இன்னொரு கட்ட வளர்ச்சியாக இதனையும் பார்க்க முடியும்.

அண்மைய காலங்களில் தூர இடப்பயணங்கள் தவிரக்க முடியாது இருக்கின்றன. வயதானவர்கள் அடிக்கடி 1, 2 ஆல் பாதிப்படையக்கூடிய நிலைகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து சமாளிக்கவும், சில கருவிகளைப் பயன்படுத்துவதால், அசௌகரியங்களைத் தவிர்க்கலாம்.

விஞ்ஞானமே, மனிதனின் ஆற்றல்களைப் பேணவும், நாகரீகத்தை உயர்த்தவும் பயன்படுகின்றது. அந்த வகையில் நான் சொன்ன விடயங்களும் மனித வாழ்க்கையில் முக்கியமானவையாக மாறலாம்..! சிலவேளைகளில் அந்த மாற்றங்கள் உலகின் சில பகுதிகளில் ஏற்பட்டும் இருக்கலாம்..!

 

ஆ.கெ.கோகிலன்

01-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!