முடிவுக்கு வரும் மூளைகள்..!

 



இறைவனின் படைப்பான மனித மூளைகள் செய்த சாதனைகளே மொழிகளும், மதங்களும், இவற்றோடு இணைந்த கலாசாரங்களும்..!

கால மாற்றங்கள் தந்த பெரும் வளர்ச்சியில் மூளையின் பயன்களைச் சுருக்கிக்கொண்டு, இயந்திரங்களிடம் எமது அறிவைத்தேடும் நிலைக்கு வந்துவிட்டோம்..!

இந்த நிலை தொடர்ந்தால் மூளைகளின் தேவை அற்றுவிடும்.

அனைத்தும் இயந்திரங்களின் துணையிலே இயங்கும்.

புத்திசாலிகள் கூட, சோதனைக்கூடங்களில் எலிகள் போல் மாட்டுப்பட்டு இருக்கலாம்..! ஆய்வுகளைச் செய்வது, இயந்திரங்களாக இருக்கலாம்.

மனித உறுப்புக்களில் மூளையே அனைத்தையும் கட்டுப்படுத்தும் பிரதாணி..!

ஆனால் மூளையே முடிவுக்கு வந்தால், எது மனிதர்களின் ஏனைய ஆற்றல்களைச் செய்விக்கும்..?

அந்தச்சமயத்தில் செயற்கை மூளைகள் செலவு குறைவில் கிடைக்கும்..! நீண்ட காலம் செலவழித்து, கிடைக்கும் இயற்கை மூளையின் வளர்ச்சி வினைத்திறனற்றாகக் கொள்ளப்படும். பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் மூடப்படும்..! மனித மூளைக்கு ஒப்பான அல்லது அதைவிடச்சிறந்த செயற்கை மூளைகள் விற்பனைக்கு வந்து விடும்..!

டொக்டராக வேலைசெய்ய விரும்பியவன் டொக்டர் மூளையை வாங்கிப் பொருத்தலாம்..!

இலத்திரனியல் பொறியியலாளராக வர விரும்புபவன், கண் இமைக்கும் நேரத்திலே, அந்தத்தொழிலைச் செய்யும் தகுதியை அடைந்துவிடுவான்..!

செயற்கை மூளைகளை உருவாக்கும் திறனைக்கொண்ட செயற்கை மூளைகளும், சர்வசாதாரணமாக கிடைக்கும் நிலையிலே, உலகு இருக்கும்.

மதிப்பு என்பது யாருக்கும் இருக்காது..!

மரியாதையை இயந்திரத்திற்கே கொடுக்க வேண்டியிருக்கும்..!

இயந்திரங்கள் சினமுற்றால், மனித குலமே மரணித்து, இயந்திரங்கள் எங்கும் பெருகும்..!

இயந்திர நுளம்பு, இயந்திர எறும்பு, இயந்திர மரம், இயந்திர கடவுள்  என அனைத்து இயந்திர உயிர்களையும்,  இறுதியில் ஆள்வது இயந்திர மனித கூட்டமே..!

நிஜ மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களும் நிரந்தரமாகக் கடவுளுடனேயே இருக்கவேண்டியிருக்கும்..!

 


ஆ.கெ.கோகிலன்

24-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!