எக்சிமா (eczema)..!
எனது அம்மாவின் தந்தைக்கு இந்த வியாதி 90களில் இருந்தது..!
அவரது கால்கள் இரண்டிலும் அலர்ஜியாகி, இரத்தமாகவும், சில இடங்களில் காய்ந்து அயறுகளாகவும்
இருந்தது. அவர் நல்ல சுத்தமாக இருக்கக்கூடியவர். இந்த வருத்தம் வந்தபின்னர், மிகவும் சோர்ந்து இருந்தார்.
நான் சிறுவனாக இருக்கும் போது, ஒரு நாவல் நிறத்திரவத்தால் (கொண்டிஸ்) அவரது கால்களைக்கழுவி, ஏதாவது மருந்தை
போட்டுவிடுவேன். ஏறக்குறைய 35 அல்லது 40 வருடங்களுக்கு
முன்னர் வந்த அந்த வருத்தம், தற்போது அம்மாவின் காலிலும் வந்து இருந்தது..!
அம்மாவும், ஜயா போலவே மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று
விரும்புவார். திரும்பத் திரும்ப வீடுகளைக் கூட்டுவார். அடிக்கடி முகம், கை, கால் என்பவற்றைக்கழுவுவார்.
தற்போது 80 வயதைத் தாண்டினாலும், அவரால் சும்மா இருக்க முடியவில்லை.
தானே சமைக்க நினைப்பார்..! மற்றவர்கள் சமைக்கும் சாப்பாடு, அவருக்கு அவ்வளவு பிடிக்காது.
சில நேரங்களில் குறைகளும் சொல்வார். அதனால் எல்லோரும் அவருடன் அளவுடனே பழுகுவோம். அம்மா
உண்மையில் மிகவும் நல்லவர். ஆனால், அவருடைய சில இயல்புகள் குறிப்பாக தான் நினைத்ததே சரியென அடம்பிடிப்பது, பலருக்குப் பிடிக்காது..!
நான் மாத்திரம் அம்மாவின் கட்டளைகளுக்குப் பணிவதும், திரும்ப
நான் போடும் கட்டளைகளுக்கு அவரை பணிய வைப்பதும் என மாறி மாறி விதிகளை வகுப்பதால், இருவருக்கும்
நன்றாக ஒத்துப்போகும்..!
இந்த எக்சிமா வந்ததும் தானே கஷ்டப்பட்டு காலைக்கழுவி மருந்துகள்
போடுவார். இன்று நான் போய் மருந்து போட்டுவிட்டேன். அம்மம்மா போல் ஒரு சின்ன உருவமாக வந்துவிட்டார்..! நான் குழந்தையாக இருக்கும்போது என்னை எப்படிக்கஷ்டப்பட்டு
பார்த்த தாய், இன்று இப்படியாக இருக்கும் நிலை எனக்கு மிகவேதனையாக இருந்தது..! என்ன
செய்ய..? முதுமை என்பது எல்லோருக்கும் வந்தேயாகும்.
ஆனால் நோயில்லாமல் இருக்க, மிகக் கவனமாக இருக்க வேண்டும்..? யாரையும் திட்டவோ, பகைக்கவோ
கூடாது. எல்லோரிடமும் அன்பைப் பரப்ப வேண்டும். எமது மனதை அன்பால் நிரப்பியிருக்க வேண்டும்.
அம்மாவிற்கு மருந்து போட்ட பின்னர் தான் புரிந்து கொண்டேன்,
அம்மா வாங்கச்சொன்ன மருந்து தவறானது என்பதை..! வயதுகள் போகப்போக மாறாட்டங்கள் வந்துவிடும்..!
இருந்தாலும் சரியான மருந்தை எடுத்துப்போட வேண்டும். நல்ல வேளை போட்ட மருந்து, சாதாரன
தோலுக்குப்போடும் ஒரு அழகுக்கிறீம் போன்றது. அதனால் பராவாயில்லை. இல்லை என்றால் பெரும்கவலையான
நாளாக இன்றைய நாள் மாறியிருக்கும்..!
பொதுவாக என்ன வருத்தங்கள் வந்தாலும், அது தொடர்பான மருத்துவங்களையும்,
பாவித்த மருந்துப்பொருட்களையும் ஒரு இடத்தில் குறித்து வைத்திருப்பது சாலச்சிறந்தது.
வேண்டும் என்றால் திகதியுடன் வைத்திருக்கலாம்.
இந்த மருத்துவ விபரங்கள் பின்னர், நோய்கள் தொடர்பான வரலாறுகளைப்
பார்ப்பதற்கும், சரியான மருத்துவத்தைப் பெறுவதற்கும் பலருக்கு உதவும்..!
அம்மாவிற்கும் அதனைச் செய்யச்சொல்லிவிட்டு வந்தேன். நானும் அதனைப் பின்பற்றுகின்றேன்.
ஆ.கெ.கோகிலன்
13-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக