கொட்டுக்காளி..!
சூரி தற்போது நாயகனாகப் பல படங்களில் நடித்து வருகின்றார்.
அவற்றின் தரங்களும் நன்றாக இருக்கின்றன. கதைத்தேர்வுக்கு
அவரைப் பாராட்டலாம். இந்தப்படத்தில் அதுவும் நகைச்சுவை இல்லாத சீரியஸான ஒரு மனிதராக
வாழ்ந்து இருக்கின்றார்..! அத்துடன் அவரது குரலிலும் ஒரு நடிப்புத் தெரிகின்றது..!
குரல் பிரச்சனைக்காக கழுத்தில் ஏதோவோர் வெள்ளைத் திரவியத்தைப் பூசியுள்ளார்.
படத்தின் கதையே மிக மிக மெதுவாக நகர்கின்றது. அத்துடன், அனைவரும்
ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். உண்மையில் இந்தப்படம்
பார்க்க ரொம்ப பொறுமை அவசியம். ஆனால் பல காட்சிகளில் வித்தியாசத்தைக்காட்டியுள்ளார்கள்.
குறிப்பாக சேவல் மயக்கமுற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் அதை அசுவாசப்படுத்த செய்த முயற்சிகள்
உண்மையில் ஒரு பாடம் போல் இருந்தன..!
அதேபோல் குறுக்கே நின்ற ஒரு காளை மாட்டைப் பார்த்து அனைவரும்
பயப்பட, ஒரு சிறுமி வந்து அதனை அநாயசமாகக் கூட்டிச்செல்லும் காட்சி..!
சூரிக்கு கோபம் வந்து அனைவரையும் அடிக்கும் காட்சியும் மிக
நன்றாக இருந்தது..!
அதுமாத்திரமன்றி, பேய் பிடித்த பெண்களில் இருந்து பேயோட்டும்
காட்சி ஒரு வித ஆபாசமாகவும், நம்ப முடியாத
வகையிலும், கடைசியில் எல்லாவற்றையும் முடிக்க சேவல்கோழியினைப் பலி கொடுப்பதை பார்க்கக்
கொடுமையாக இருந்தது..! சில ஊர்களில் இப்படியான வழக்கங்கள் இருக்கலாம்..!
இந்தப் பேயோட்டும் காட்சியைப் பார்த்து சூரி பேயே ஓட்டத்தேவையில்லை
என்பது போல் சென்றது, திடீரென கதை முடிந்துவிட்டதோ அல்லது ஏதாவது குறையுடன் காட்சி
துண்டிக்கப்பட்டதா என்ற சந்தேகமே வந்தது.
நாயகியாக நடித்த பெண்ணின் முகம் உண்மையில் பேயறைந்த மாதிரியே
இருந்தது..! இடையில் கண்களில் கண்ணீர் வருவதும், பாடலை முணுமுணுப்பதும், சாமி கும்பிட்டதும்,
ஒருவித முரட்டு சுபாவத்துடன் இருப்பதும், படத்தில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது உண்மை.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியிட்ட இந்தப்படம்,
புதுமையான சில விடயங்களைக்கொண்டிருந்தாலும் முற்றாகத் திருப்தியளிக்கவில்லை. படத்தை
இடையில் வெட்டிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
இருந்தாலும் பார்க்கும் போது போரடிக்காமல் வாகனங்களின் பயணத்தை, அந்த வாகனச்
சத்தங்களுடன் காட்சிப்படுத்தியது, கூட நாமும் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது..!
நடிக நடிகைகளின் நடிப்பு, தொழில்நுட்பங்கள் நன்றாக இருந்தன..!
பி.எஸ்.விநோத்ராஜ் என்ற இயக்குனருக்கு ஒரு பாராட்டைப் போட்டாலும்,
இன்னும் சிறப்பாக படத்தின் முடிவை எடுத்திருக்கலாமோ..? என்று தோன்றியது..!
ஆ.கெ.கோகிலன்
18-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக