கங்குவா அரசியல்..!

 

 


தமிழர்கள் என்ற இனக்குழு காலமாற்றங்களில் பல இனக்குழுக்களாக மாறிவிட்டன..! எஞ்சியிருக்கும் தூய தமிழர்களும் சாதி மற்றும் சமயங்களாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும் பெரிதும் பிளவுண்டு கிடக்கின்றார்கள்..!

இவர்கள் எவ்வளவு மூத்த இனமாக இருந்தாலும் இன்னும் ஆதிவாசிகள் போல் நாகரீகங்கள் அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அதனைக்காட்டாது, பண்பற்றவர்களாக இருப்பது மிகவும் ஆச்சரியமானது..!

ஏன் இந்த முரண்கள் வருகின்றது என்றால் தமிழனுக்குத் தமிழனே எதிரியாக இருக்கின்றான்..! ஒருவன், ஒரு நல்லதைச் செய்தால், போட்டி மற்றும் பொறாமையால் அந்தச்செயலில் குறைகளை மாத்திரம் தேடுகின்றான். அப்படி ஒரு குறை கிடைத்தால், அதைப்பெரிதாக்கி, குறித்த நன்மை செய்தவனை, இனிமேல் அவ்வாறான காரியங்களைச் செய்யவிடாது தடையாகவும் மனதிற்கு பெரும் வேதனையாகவும் மாற்றுகின்றான்.

 

நீ நல்லது செய்..! அல்லது செய்பவனை பாராட்டு..! அது உன்னால் முடியாது என்றால், பொறுமையாக இருக்கக்கூட முடியாதவானக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இது இலங்கை, தமிழ்நாடு போன்ற தமிழர்களின் தோற்றிடங்களிலும், உலகின் பல நாடுகளிலும் குறிப்பாகக் கனடா, இலண்டன், அவுஸ்ரேலியா போன்ற வாழும் நாடுகளிலும் தொடர்வது மிகவும் வேதனையானது..!

இவ்வாறு உண்மையான தமிழர்கள் முரண்பட்டு இருக்க, உருமாறிய வேடதாரி ஆதித்தமிழர்கள் பச்சோந்திகள் போல் இருந்துகொண்டு, மோட்டுத்தனமாக இருக்கும் உண்மையான  தமிழர்களை அடிமைப்படுத்தி ஆண்டுவருவது மிக மிக வேதனையானது.

ஒரு சாதாரண அலுவலக வேலைகளிலேயே அனுபவம் என்ற ஒருவிடயத்தை கணக்கில் எடுத்தே பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. நியாயமான நிறுவனங்களில் இவ்வாறான சூழ்நிலைகளைப் பார்க்க முடியும்.

ஆனால், மாறி மாறி நிறுவனம் விட்டு நிறுவனம் தாவும் பச்சோந்திகளை, திறமையானவர்கள் என்று அங்கீகரித்து, உயர் பதவிகள் வழங்கினால் எப்படியிருக்கும்..?  அங்கு தொடர்ந்து உழைத்துக் கஷ்டப்பட்டவர்களிற்கு என்ன கிடைக்கப்போகின்றது..?

அவர்களும் பச்சோந்திகள் போல் மாறவே இவ்வாறான நிலைப்பாடுகள் ஏற்படுத்திவிடும்.

போலிகள் எங்கும் பரந்துள்ள உலகில் உண்மையானவர்களைத் தேடுங்கள். அவ்வாறான நல்ல மனிதர்களை மேலே கொண்டுவந்தால் அனைவருக்கும் நன்மை நடக்கும்.  நல்லவர் போல் நடிப்பவர்களை மேலே கொண்டுவந்தால், தொடர்ந்து நடக்கும் துன்பத்தைப் பார்ப்போம். வேறு  என்ன நாம் செய்ய முடியும்..?

 

தமிழர்களுக்கு நன்மை செய்ய ஆயிரம் வழிகள் உண்டு.  தமிழக நடிகர்கள் கூட தங்கள் படங்கள் ஊடாக நல்ல அறிவை மக்களுக்கு வழங்கலாம். ஆச்சரியமான அனுபவங்களை வழங்கலாம். இயற்கையில் எம்மால் புரிந்துகொள்ள முடியாத பல அமானுஷ விடயங்களைக் கொடுக்கலாம். எத்தனையோ வழிகளில் அவர்களால் உதவ முடியும். சிலர் செய்கின்றார்கள்..! சிலர் செய்வது போல் நடிக்கின்றார்கள்..! சிலர் செய்ய விருப்பமில்லை என்பதை உண்மையாகவே காட்டி நிற்கின்றார்கள். அவ்வாறு இல்லாமலும் சிலர் இருக்கின்றார்கள். மனிதர்கள் பல விதம். நடிகர்களும் மனிதர்கள் தானே..! அதனால் தான், அவ்வாறான நிலைகள் ஏற்படுகின்றன.

நேற்று சூரியா நடித்து, கங்குவா என்ற ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படம் திரைக்கு வந்தது. வரும்போதே பல குளறுபடிகள் நடந்தன..! படத்தில்  பங்குபற்றிய கலைஞர்கள் சிலர் இறந்தும் இருந்தார்கள்..! தயாரிப்புக்காலம் நீளுவதால் இவ்வாறான நிலைகளையும் பார்க்கவேண்டி ஏற்படலாம்.  படத்தரப்பும், தேவையில்லாத  ஆடம்பர விளம்பரங்களால் அதிக எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தி, தேவையில்லாத வெறுப்பையும், பண இழப்பையும் சம்பாதித்துக்கொண்டார்கள்..!

சாதாரணமான ஒரு படத்தைவிட சற்று மேலுள்ள ஒரு வர்த்தக ரீதியிலான திரைப்படத்தை மண்கவ்வச்செய்ய பலர் இணைந்து செயற்பட்டது வித்தியாசமாக இருந்தது..! சரிபிழைகள் எல்லாரிடமும் இருக்கின்றன..! தவறுகள் இருந்தால், திருத்தவேண்டும். யாரையாவது உண்மையாகப் பாதித்தால் அவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும். அதேபோல் காலத்தையும், பணத்தையும், கடினமான உழைப்பும் கொடுத்து, உண்மையான தரமான படமாக வெளிவந்திருந்தால், யார் என்ன  சொன்னாலும் வெற்றி பெறவேண்டியது வெற்றி பெற்றேயாகும்.  இன்று தெரியாமல் போனாலும், நாளை நிச்சயம் வெளிப்பட்டேயாகும்..! அதேபோல் தோல்வி அடைய வேண்டியது தோல்வியடைந்தேயாகும்.

யாரும், யாரையும் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. குறைகள் இருந்தால், திருத்த முடியுமென்றால் திருத்திக்கொண்டு, தேவையற்ற  வாய்த் தர்க்கங்களைத் தவிர்த்துவிடலாம்.

யாரும் மற்றவர்களின் எல்லா கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது எதிர்க்கவோ தேவையில்லை. அவரவர் தத்தமது நிலைப்பாட்டில் பயணிப்பதே அனைவருக்கும் நல்லது.

கங்குவாவின் எதிர் கருத்துக்களுக்குக் காரணம் நடிகர் சிவகுமாரின் சில நடத்தைகளும் பேச்சுக்களும்..!  அதேபோல்,  சூரியாவின் தமிழக ஆட்சிகளுக்கு ஏற்ற மாதிரியான அரசியல் நிலைப்பாடுகள்..!  குறிப்பாக ஜெய்பீம் படத்தை,  பணத்திற்காக திரையரங்குகளைத் தவிர்த்து இணையத்தில் வெளியிட்டதும், வன்னியர் இனத்தைப் பகைத்துக்கொண்டதும் தவறு..! அதேபோல், அதிமுக ஆட்சியில் திமுக சார்பாக நீட்பற்றிக்கதைத்து விட்டு தற்போதைய ஆட்சியில் தவறுகளைக் கண்டுக்காமல் விடுவது..! 

கொரோனா காலத்தில் திரையரங்குகளிற்கு படத்தை கொண்டுவராமையும்  நியாயமான காரணம் இருந்தாலும், ஒருவிதத்தில் அது தவறாகவே அவருக்கு அமைந்துள்ளது..!

எல்லாவற்றிற்கும் மேலாக, அவரை வளர்த்த இயக்குனர்களை, கண்டுக்காமல் அவமதிப்பதும் தவறு தான்.

மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.  அதேபோல், ஜோதிகாவும் கோயில் தொடர்பான சில கருத்துக்களும், குறிப்பாக கோவிலுக்கு பணவுதவி செய்வதை விட  ஏழைகளின் கல்விக்கு உதவுவது மேல் என்பது போன்ற கருத்துக்கள் பரவியதாலும், சில மதச்சார்பான மக்களிடம் வெறுப்பை சாம்பாதித்துள்ளார்..!

இறுதியாகக் கார்த்தியும் தேவையில்லாமல் நடிகர் சங்கத்தில் இருந்து பலருக்காகக் கருத்துச்சொல்லி வாங்கிக்கட்டுவதும் என்று அவர்கள் குடும்பமே தமது பெயரை அவர்களது சில சுயநல நடவடிக்கைகளால் கெடுத்துக்கொண்டார்களே தவிர கல்வி உதவி, விவசாய உதவி, குறைந்த செலவில் உணவு போன்ற பல நன்மைகளை, மக்களுக்குச் செய்தாலும்,  மக்களில் பலர் கவனிக்காத வகையில் இருப்பது புரிதல் இன்மைக்கான உச்சம்..!

தமிழர்கள் முதலில் தமிழர்களுக்கு கேடு செய்யக்கூடாது. அதேபோல் தமிழர்கள், தமிழர்களின் காலை வாரிவிடவும் கூடாது. இவ்வாறு நடக்கும் என்றால், பச்சோந்தித் தமிழர்கள் தான் உண்யைான  மரபணு மாறாத தமிழர்களை ஆள்வார்கள்..!

கால மாற்றத்தில் அனைத்தும் ஒருவிதத்தில் கலப்பது என்பதும், எல்லாம் ஒன்றே என்ற நிலைக்கு வருவதும் உண்மை தான்..! அப்படி என்றால் நடப்பதை அப்படியே பார்த்துக் கடந்து போகவேண்டியது தான்..!

இறுதியாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எவ்வளவு நியாயங்கள் நம்பிக்கைகள் இருந்தாலும், வாயை அடக்கி வைத்திருக்க வேண்டும். அந்த வாயால், கஷ்டப்படுவது முதலில் அவர் தான். இந்தப்படம் தோற்றால், பெரிய அடி அவருக்கே விழும். தேவையில்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மௌனமாகக் கடந்து செல்லுங்கள்..!  தவறுகள் என்று தெரிந்தால், மன்னிப்பு கேட்டுவிடுங்கள். படத்தில் குறைகள் இருந்தால், திருத்த முடியுமாயின் திருத்திக்கொள்ளுங்கள். முடியாவிட்டால் இதில் பாடமாவது கற்று, இனிமேல் இவ்வாறான பிரச்சனைகளில் சிக்காது பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக ஒரு நியாயமான படத்திற்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது நிச்சயம் எப்படியாவது கிடைக்கும்.

அன்று தூற்றிய செல்வராகவன், கார்த்தி போன்றோரின் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை இன்று தூக்கி வைத்து ஆடும் தமிழர்கள் தான், பெரும்பாண்மையான  எமது தமிழர்கள்..!

 

தங்கம் எப்போதும் தங்கம் தான்.

இரும்பை மூலாம் போட்டுத் தங்கம் போல் மாற்றலாம். ஆனால் காலம் அதனைக் காட்டிக்கொடுக்கும்..!

போட்ட முயற்சிக்கு பலனில்லை என்றாலும், கடந்து சென்று அடுத்த முயற்சியைப் போடுங்கள். அதில் கிடைக்காதது, அடுத்ததில் இரட்டிப்பாகக் கிடைக்கும் வாய்ப்பு எப்போதும் உண்டு.

இயற்கையின் சமநிலைவிதி காலத்துடன் அதை நிரூபிக்கும்.

இறுதியாக ஒன்று, தமிழர்களைத் தமிழர்கள் அழிப்பார்கள் என்றால், அவர்கள் உண்மையான தமிழர்களாக இருக்கவே முடியாது. பச்சோந்திகளாகவே இருக்க முடியும்.

 

ஆ.கெ.கோகிலன்

16-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!