பதான்..!
சாரூக்கான், ஜோன் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனி நடித்த
இந்தப்படத்தை பார்த்தபோது, ஒரு விடயம் உடனேயே பற்றிக்கொண்டது. அந்த ஜப்பான் தத்துவம்..!
ஒரு மண் பானை உடைந்ததும், அதனைத் தூக்கிப்போடாமல், தங்கத்தை வைத்து அந்தப்பானையை ஒட்டி,
அந்தப்பானையின் பெறுமதியை இன்னும் உயர்த்துவார்கள்..! இது தான் மதிப்புச் சேர்த்தல்
என்பதோ..!
இந்தப்படத்தின் கதை மிகச்சிறியது..! இந்தியாவிற்காகச் சேவைசெய்த
ஒரு வீரனை, எதிரிகள் பிடித்து சித்திரவதைசெய்து, அவரது மனைவி மற்றும் கருவாக இருந்த
அவரது குழந்தையை மீட்க, எதிரிகள் இந்தியாவிடம் பேரம் பேச, அதனை இந்தியா மறுக்க, எதிரிகள்,
அவனது கருவோடு மனைவியை சுட்டுக்கொல்கின்றார்கள்..! பின்னர், அந்த வீரன், தப்பி இந்தியாவிற்கு
எதிராக பல செயல்களைச்செய்து நாட்டை அழிக்க முற்பட, அதனைத் தடுத்து, நாட்டைக்காக்கின்றான்
பதான் என்ற வீரன்.
படத்தில் விறு விறுப்புக்குப் பஞ்சம் இல்லை. காட்சிகளையும்
மிகவும் பிரமாண்டமாகச் செதுக்கியுள்ளார்கள். நிறைய பூச்சுத்தல்கள் இருந்தாலும் சில
கருத்துக்கள் மனதைத் தொட்டதால், தொடர்ந்து பார்க்கத் தூண்டியது.
நாடு என்ன செய்தது..? என்று கேட்பதை விட நாம் நாட்டிற்கு
என்ன செய்தோம்..? என்று கேட்பதே மேல். அவ்வாறே நாம் வாழ முற்பட வேண்டும். யாரோ ஒரு
அதிகாரி தவறு செய்யும் போது மொத்த நாட்டையும் மக்களையும் பழிவாங்குவது என்ன நியாயம்..?
இந்தப்படத்தில் இன்னொரு சூப்பர் ஸ்டாரான சால்மான்கானும் வருகின்றார்..!
ஒரு கட்டத்தில் சாருக்கானுக்கு உதவி, இருவரும் தப்புகின்றார்கள். இறுதியில் சொந்தக்கதையைப்
பேசி, தங்களை விட்டால் நாட்டிற்கு நல்லது செய்ய ஆளே இல்லை என்பது மாதிரிச்சொல்லி முடிக்கின்றார்கள்.
30 வருடங்களுக்கு முன்னர் எப்படி நிலைமை இருந்ததோ அதேபோல் நாளையும் யாரோ வருவார்கள்..!
மக்கள் மனதை வெல்வார்கள்..! நாளை மறுநாள் மறைவார்கள்..! இது தான் உலக நியதி..! இதனைப்
புரியாமல் கிழவன்களானாலும் ஓடவேண்டும் என்று நினைப்பது, இளையோர்கள் மேல் நம்பிக்கையற்ற
நிலையைக் காட்டுகின்றது. அது எமது தவறு..! அவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறுவார்கள்..!
அல்லது நாம் அவர்களை அவ்வாறாக மாற்ற வேண்டும். இல்லை என்றால், இந்த இரு கிழவர்களின்
ஆயுள் முடிந்தால், பின்னர் யார் அந்த வேலைகளைச் செய்வது..?
படத்தில் அனைவர் நடிப்பும் சிறப்பாக இருந்தன..! தொழில்நுட்பங்களும்
சிறப்பு..! கதை மற்றும் இயக்கமும் சிறப்பு. ஒட்டுமொத்தமாக நல்ல செய்தியோடு மக்களை திருப்திப்படுத்தும்
படமாகப் பதான் இருக்கின்றது.
இடையில் வைரஸை வைத்து கொஞ்சம் சூடேற்றி, இறுதியில் ஒரு நேர
இயந்திரத்தை கைப்பற்றி, மக்களைக்காப்பாற்றி, வைரஸ்களையும் அழிக்கின்றார்கள்.
சித்தார்த் ஆனந்த் என்ற இயக்குனரைப் பாராட்டலாம்.
ஆ.கெ.கோகிலன்
20-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக