மருமகனின் திருமணம்..!
நித்திரையே கொள்ளமுடியவில்லை. விடிய திருகோணமலை போகவேண்டும்..! அங்கே எனது மச்சாளின் மகனின் திருமணம் நடைபெற இருக்கின்றது. மணிக்கூட்டைப் பார்க்கின்றேன் மணி நடு இரவு 12.40. சரி இன்னும் இரண்டு மணித்தியாலம் படுத்துவிட்டு எழும்புவோம். அதிகாலை 2.30 மணிக்கு எழும்பினால் அனைத்துக்காலைக்கடன்களையும் முடித்துவிட்டு, எனது காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் அச்சுவேலி போய், அங்கு இருக்கின்ற அன்ரிவீட்டில் அதை நிறுத்திவிட்டு, அவர்களுடன் வானில் திருகோணமலை போவதே திட்டம்..! நித்திரை வர மறுத்தது..! எழுந்து பார்க்கின்றேன் மணி அதிகாலை 1.40..! மீண்டும் திரும்பி திரும்பி படுக்க முயல்கின்றேன். கண் மூடமுடியவில்லை..! பொறுமையிழந்து 1.40இலே எழுந்து, 2.30இற்கு வைத்த அலாமை நிறுத்திவிட்டு, காலைக்கடமைகளை முடித்தேன். 3.30 இற்கு வெளிக்கிடக்கூடியதாக இருந்தது. நடு இரவு மோட்டார் சைக்கிளில் போவது சற்று பயமாக இருந்தது. குறிப்பாக நாய்களுக்கும், கள்ளர்களுக்கும் இடையில் மறித்துக் குறுக்கிடலாம்..! மகளை எழுப்பி கேற்றை திறக்கச் சொல்ல, அவள் குழம்பி ஏதோ செய்ய, அவளைப் பேசிவிட்டு, காரில் வெளிக்கிட்ட...