இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேடு நினைத்தால்..!

படம்
  காதலிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். காதலுடன் காமம் கலக்க,   அதுவும் முறையற்ற விதத்தில்   நடந்தால், துன்பங்கள் தொடர்கதையாகும். எனது நண்பர் படிக்கும் காலத்தில் ஒரு அழகான பெண்ணுடன் காதல் வயப்பட்டு, கொஞ்சநாட்கள் தாடியுடன் அலைந்தார்..! சில மாதங்கள் கழியத் தாடியைக்காணவில்லை. மகிழ்ச்சியாகத்   திரிந்தார்..! அப்போது புரிந்தது, அவரது காதல் கைகூடியுள்ளது என்பது..! சில மாதங்கள் கழிய மீண்டும் முகத்தில் வாட்டம் தெரிந்தது..! வினாவ, காதல் கட்டில் வரை போனதால் கரு உருவாகிவிட்டது..! கலியானமே நடக்காமல், இது தெரிந்தால் இரு குடும்பங்களும் நாறும்..! அது மாத்திரமன்றி, இன்னும் பெற்றோருக்கு இந்த விடயம் தெரியாது..! இருவரும் சேர்ந்து, தெரிந்த வைத்தியர் ஒருவரிடம், ஆலோசனை பெற்று கருவைக் கலைத்தனர்..! திரும்ப, நண்பரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.   தான் ஏதோ வென்று விட்டதாக நினைத்தார். ஆனால் காதலியின் முகத்தில், ஒருவித வாட்டத்தை அவதானித்தேன். நண்பரிடம் கேட்கவில்லை. காலங்கள் சென்றது..! காதலை இரு குடும்பமும் எற்றுக்கொண்டது. முதலில் கட்சி மாற, நினைத்த நண்பனும் மனம் திருந்தி, அந்தக் காதலியைக் கரம்

கல்கி..!

படம்
    அமிதாப் பச்சன், கமலஹாசன், பிரபாஸ் என்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலர் சேர்ந்து நடித்த படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இந்தப்படத்தின் மீது இருந்தது. இற்றைக்கு 6000 வருடங்களுக்கு முன்னர் நடந்த மகாபாரதக்கதையின் தொடர்ச்சி போல், வரும் காலத்தில் நடக்கும் சூழலையும் இறைவன் ஒரு பெண்ணில் கருவாக உருவாகி வருவதையும், அதையொட்டி பல நல்ல சக்திகளும், தீயசக்திகளும் மோதிக்கொள்ளும் நாகரீக-புராதான சண்டைகளைக்கொண்ட ஒரு திரைப்படமாக எடுத்து, எம்மை அடுத்த பாகம் வரை காக்க வைத்துள்ளார்கள்..! சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. சில காட்சிகள் சற்று வேடிக்கையாகவும் இருக்கின்றன. “கொம்லெக்ஸ்” என்ற பகுதி எல்லா வசதிகளையும் கொண்ட சொர்க்கம் மாதிரியும், ஏனையவை அழிவடைந்த வறண்ட மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளாகக் காட்டுகின்றார்கள். இதற்குள் ஒரு பகுதியில் நல்லவர்கள் இறைவன் வருவதை எதிர்பார்த்து, “சம்பாலா” என்ற ஒரு குறித்த இடத்தில் மறைந்து வாழ்கின்றார்கள்..! கொம்லெக்ஸிலுள்ள “சுப்ரீம்” என்ற அதிசக்தி வாய்ந்தவர், தனது நீண்ட ஆயுளுக்காக சீரம் என்கின்ற பதார்த்தத்தைக் கற்பம் தரித்த பெண்களிடம் இருந்து

ஏரிஐ..!

படம்
  பல்கலைக்கழகம் போனால் தான் வாழ்க்கை என்ற காலத்தில், எனது உற்ற நண்பனே அறிமுகப்படுத்தினான் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தை..! அந்நேரம் நான் வவுனியாவில் இருந்து வந்து, திருமலையில் உறவினர்   உதவியுடன் தங்கியிருந்தேன்..! ஏறக்குறைய 1996 கடைசிகளில் அங்கே படிக்கும் மாணவர்கள் சிலர்   “தொழிற்படு ஆராய்ச்சி..” என்ற பாடத்தை பற்றிக் கேட்டு, அதனைப்படிப்பிக்க முடியுமா என   என்னிடம் வினாவ, நானும் தலையசைத்துவிட்டு தேடினேன் அது என்ன “தொழிற்படு ஆராய்ச்சி”..? Operationnal Reseach என்ற ஆங்கிலத்தைப் பார்த்ததும் புரிந்தது என்னால் முடியும் என்று..? எனது பட்டத்தில் சில பகுதிகள் அதில் இருந்து படித்துள்ளேன்..! ஆனால் அவை போதுமானதாக இருக்கவில்லை..? தேடினேன்..! அடிப்படைக்கொள்கை அப்போது தான் புரிந்தது ..! அது   “ சிறந்ததில் சிறந்ததை தெரியும் முறை..!” சுய கற்றலில் ஆர்வம் தொடங்கியது..! புத்தகங்கள் எனது அறைக்குள் நிறைய வந்தன..! என்னால் இயன்றவரை   அவற்றைப் புரட்டினேன். படிப்பித்தேன்..! அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கின்றது..! அதற்குள் பல மாற்றங்கள் நடந்துவிட்டன..! எனக்கு திருமணம் ஆகியது..!

கொடுப்பதற்கும் பலன் வேண்டும்..!

படம்
  இந்தக்கிழமை முதலில் வீட்டுக்கு போவதில்லை என்று முடிவெடுத்தாலும் பின்னர் சில தவிர்க்க முடியாத திருமண அழைப்பிதழ்களால் போகவேண்டி வந்துவிட்டது..! வழமைபோல் நேற்றே பஸ்ஸை புக் பண்ணி, இன்று மனைவி, பிள்ளைகளுக்கு வழமைபோல் “போய்வாறேன்”   என்று சொல்லி   4.15 மணி பஸ்ஸில் ஏறிய பிறகு தான் தெரிந்தது தெரிந்தது அன்று   போல் இன்றும் கூட்டம் என்று..! அன்று போயா தினம்..! செல்வச்சந்நிதி தேர்..!   இன்று என்னவென்று தெரியவில்லை..? நாளை பாடசாலைகள் தொடங்குவதால் சுற்றுலாச்சென்றவர்கள் ஊருக்குத் திரும்புகின்றார்களோ என்னவோ..? வழமையாக நான் வெளிக்கிடும் போது   ரன்னிங் ஷூவை (Running Shoe) போட்டு லேசைக்கட்டுவேன். இன்று வரும்போது, மனைவியும் மூத்த மகளும் ஆளுக்காள் ஒவ்வொரு   பக்க ஷூவின் லேசையும் கட்டிவிட்டு, நான் பிழையான இடத்தில் கட்டியுள்ளதாகச் சொன்னார்கள்..! அவர்கள் எப்படிக் கட்டினார்களோ என்னவோ தெரியவில்லை..? இன்று கால் சற்று கூட வலித்தது..!   கொஞ்சம் இறுக்கிக் கட்டிவிட்டார்கள் போலும்..! ஏறிய திருமலை பஸ்ஸில் போன கிழமைபோல், இந்தக்கிழமையும் எனது பொதிப்பையை வைக்க அங்கே இடம் இல்லை..!   அதுமாத்திரமன்றி, சில வாரங்களுக்

உயர்தொழில்நுட்பவியல் தாய்..!

படம்
  திருமலையில் பல்கலைக்கழகத்திற்கு மாற்றாய் இருக்கும் உயர்தொழில்நுட்பவியல்   தாயே உன்சேவை என்றும் இங்கே வேண்டும். பல்கலைக்கழகக் கனவைக் சொந்த இடத்திலே நிஜமாக்கியள் நீ..! அனைவரையும் அரவணைத்து அறிவை ஆழமாக ஊட்டி அரியாசனத்தில் ஏற்றியவள் நீ..! துறைமுக வீதியிலே வசதிகள் அற்ற நிலையிலும் எம்மை உயர்த்த, உற்சாகமாய் இருந்தாய் நீ..! வேகமாய் வந்த சுனாமி உன்னைத்தூக்கி   செல்வநாயக புரத்தில் போட்டாலும் உன் சேவை நிற்கவில்லை..! நன்மைக்காய் அவதரித்த நீ சுனாமியாலும் நன்மையே பெற்றாய். துவரங்காட்டிலே அழகான ஆடையை சூடிக்கொண்டு யாருக்கும் சளைக்காமல் தொடர்ந்து செய்கின்றாய்   உன்சேவையை..! 25 வருடங்கள் போனாலும் என்றும் குறையாது மக்களுக்கான உனது சேவை..! தாயே ஆரம்பத்திலே கணக்கியலைக் கையில் எடுத்தாய்..! சில வருடங்களில் ஆங்கில மொழியையும் புகட்டத்தொடங்கினாய்..! காலங்கள் சில ஓட, தகவல் தொழில்நுட்பமும் இனி வேண்டும் என்று அதனையும் இணைத்துக்கொண்டாய்..! திருகோணமலை என்றாலே சுற்றுலாத்துறை என்பதை நினைத்தோ என்னவோ சுற்றுலாத்துறை கற்கையையும் கொடுத்தாய் நீ..! பலநூறு ஆண்டுகளுக்

சமத்துவம்..!

படம்
    இது ஏன் இன்று கதைக்கவேண்டிய ஒரு விடயமாகிவிட்டது என்றால் ஒரு சிலர்   எது சரி..? எது பிழை என்பதையே புரியமுடியாமல் இருப்பது தான்..! எமது நாடு பல இன மக்களைக்கொண்டது. இந்நாடு அத்துணை இன மக்களுக்கும் பொதுவானது. பெரும்பாண்மைகள் மாறு படலாம். இன்று சிறுபாண்மையாக இருப்பவர்கள், நாளை பெரும்பாண்மை ஆகலாம். அவ்வாறு ஆகாமலும் போகலாம்.   திருகோணமலை ஒரு காலத்தில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் பிரதேசமாக இருந்தது..! தற்போது மூன்று இனங்களும் ஏறக்குறைய சம அளவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் சரியான விபரம் எனக்கு இன்னும் தெரியவில்லை..! கிடைத்த விபரத்தின் படி முஸ்லீம் மக்கள் 43 சதவீதமும் தமிழ்கள் 30 சதவீதமும் மீதி 26 சதவீதம் சிங்களவர்களும் மிகுதி ஏனைய இனங்களும் அடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. இருந்தாலும் காணி, ஏனைய வசதிகள், பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பார்த்தால்   ஏறக்குறைய சமமாகவோ அல்லது முஸ்லீம் பிரதிநிதித்துவம் சற்று கூடுதலாகவோ அமையலாம். கால மாற்றங்கள், வெளிநாட்டு மோகங்கள், ஏனைய சில நிலைமைகள் காரணமாக இவற்றில் மாற்றங்கள் வரும்காலத்தில் ஏற்படலாம். இதற்கு

திசைப்படுத்தல் (Orientation)

படம்
  ஒவ்வொருவருடமும் நடைபெறும் நிகழ்வு என்றாலும் இந்தமுறை எனக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இருந்தது. நினைத்த மாதிரி, அது பொய்க்கவில்லை..! திருகோணமலைக்கு நேற்றுமாலையே யாழில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு வந்துவிட்டேன். ஏற்கனவே சில ஏற்பாடுகள் செய்து இருந்தேன். முன்பு யாழில், நிறைய ஊழியர்கள் இருப்பதால் அவர்களிடம் பொறுப்பைக்கொடுத்துவிட்டு, ஒரு பேச்சைத் தயார்பண்ணி, அனைத்து துறைகளுக்கும் அனுப்பிவிடுவேன். மிகுதியை அவர்கள் செய்வார்கள். ஏதாவது பொதுவான விடயங்களை மாத்திரம், வளவாளர்களை வைத்து தயாரித்து, அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு,ஒவ்வொரு துறைக்கும் அந்த வீடியோக்களை அனுப்பிவிடுவேன். உண்மையில் இந்த நடைமுறை கொரோனா வந்ததால் வந்த நடைமுறை..! அதற்கு முன்பு, மிகக்கோலாகலமாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களையும் அழைத்து நடக்கும்.   ஆனால்   இங்கு அவ்வாறு செய்யவில்லை. மாறாக எல்லாவற்றையும் நேரடியாகச் செய்ய முயன்றோம். அதற்காகப் பலரைப் பயன்படுத்தினோம். குறிப்பாக இம்முறை 2ஆம்   வருட மாணவர்களில் இருந்து, ஊடகப்பிரிவு என்ற ஒன்றையும், மாணவ பிரதிநிதிகளை வரவழைத்து, அவர்களுடன் புகைப்படங்கள

வரப்பிரகாஷ்..!

படம்
    இவர் எனது தம்பியின்  பல்கலைக்கழகத் தோழன் (Batch Mate). 1996இல் பொறியியல் பீடத்திற்குத் தெரிவாகி, ஒரு வருடத்திற்குள் பகிடிவதை என்ற அரக்கனிடம் பலியாகிவிட்டார்..! அது மாத்திரமன்றி, அவரது பெற்றோரின், உறவுகளின்  மற்றும் நட்புக்களின் கனவும் நாசமாகியது..! அது மட்டுமா..? அவருக்குப் பகிடிவதை என்ற அரக்கனை ஏவிய சிரேஷ்ட மாணவர்களின் கனவும் சிதைந்தது..! அதுமட்டுமல்லாமல் சட்டங்களுக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடியவர்களும், இன்று வரை அந்தத் தவறால் வருந்துபவர்களும் இந்த உலகில் எங்கோ  பல மூலைகளில் ஒடுங்கி இருக்கின்றார்கள்..! அந்த நிகழ்வுக்குப் பின்னர் பகிடிவதை முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது. யாராவது செய்தால், கடும் விசாரணைகளூடாகத் தண்டனைக்கு உட்படுத்துவதுடன், அவரின் படிப்பு, நன்மதிப்பு  மற்றும் பெற்றோர், உறவுகள், நட்புக்கள்  என்பவர்களின் கனவுகள் எல்லாம் தொலையும்..! 1996இல் நிகழ்ந்த இவரின் மரணம்   இலங்கையில் பகிடிவதைக்கு   முற்றுப்புள்ளி வைத்த ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுவதை, பலர் தற்போது மறந்துவிட்டார்கள்..! “வேடிக்கை வினையாகும்..!” என்பது பகிடிவதைக்கான கருவாகக்கூடக் கருதலாம். எமது நிறுவனங்களில்

ரெபோ (Turbo)..!

படம்
    வழமையாக மலையாளப்படங்கள் என்றால் ஒரு நேர்த்தியும், காட்சிகளில் ஒரு தெளிவும் இருக்கும். இந்தப்படத்திலும் அது அமைந்திருந்தது. மம்மூட்டி இந்த வயதிலும் சிறப்பாக நடித்து இருந்தார். சண்டைக்காட்சிகளிலும் வழமைபோல் கலக்கியிருந்தார். ஹீரோவைக் கொண்டாடும் படம் என்றாலும், தாயார், மகனைப்பற்றி சொல்லும் காட்சிகள் சுவாரசியமாக இருந்தன. பல வகையான வில்லன்கள் வந்து வந்து பயமுறுத்திச் சென்றார்கள்..! படத்தின் கதை என்று பார்த்தால், பயன்படுத்தாக வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடி (Scam) பெரிய அரசியல் புள்ளிகளிடம் கொடுத்து அரச சிஸ்டத்தை தமக்கு ஏற்றது போல் வளைக்க முனையும் ஒரு ரவுடிக்கும்பலைப் போட்டுத்தள்ளுவதே கதை..! அந்தக்கதைக்குள் பலர் இறக்கின்றார்கள்..! படம் தொடங்கும்போதே பெண் ஒருவர் தூக்கிலிடப்பட்டுக்கொல்வது முதல், படம் முழுக்க பெண்களையும், கதாநாயகியின் காதலனையும் தொங்கவிட்டே கொன்றார்கள்..! படத்தின் தொழில்நுட்பங்கள் பரவாயில்லாமல் இருந்தன.   தெலுங்கு வில்லன் நடிகரான சுனிலின் பங்களிப்பும் சிரிக்க வைத்தது..! ராஜ் பி.செட்டி என்ற வில்லன் கூட வித்தியாசமாகவும், நன்றாக ஆங்கிலம் பேசியும் நடித்து

அனிமல் (Animal)..!

படம்
  மனிதன் ஒரு விலங்கு..! அவன் அறிவால் கடவுள் மாதிரி நடந்தாலும், உள்ளுக்குள் அவன் விலங்கு தான் என்பதை உணர்த்த வந்த படம் தான் அனிமல்..! பணக்காரக்குடும்பம், தமது அந்தஸ்தை நிலைநாட்ட ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களுடன் மாத்திரம் பழகுவதும், எப்போதும் பெரிய அளவில் பணம் சம்பாதித்து, தாம் தான் உசத்தி என்பதைக் காட்ட முற்படுவதுமே, அவர்களது வாழ்க்கை முறை. தனது தந்தையே தன்னுடைய ஹீரோ என்று சொல்லும் தனயன், தந்தையிடம் பேச தவமிருப்பதும், தந்தை தனது வேலைப்பளுவால் மகனைச்சந்திக்காது விடுவதும், இதனையே தந்தையை தான் பழிவங்க அல்லது தந்தைக்கு பாடம் புகட்ட நினைக்கும் தனயன், நீங்கள் ஒரு நாள் மகனாகவும், தான்  அதேநாள் அப்பாவாகவும் இருப்பதாகச்சொல்லி, தனது மனக்குமுறல்களைக் கொட்டி, தந்தையைக் காயப்படுத்துவதும், தந்தை இந்தப்பிறப்பில் தான் இப்படியே இருந்துவிட்டுப் போவதாகவும், அடுத்த பிறப்பில் மகனாக வந்து, உனது அன்பில் வளர்வதாகவும், அதற்கு அடுத்த பிறப்பில் தான் திரும்ப வந்து, அந்தக்கடனைத் தீர்ப்பதாகவும் சொல்லி காட்சிகள் அமைத்திருப்பது, விதிப்பயனையும், கர்மாவையும் சர்வசாதாரணமாகக் கடந்து செல்வதைப் போல், மிருகம் என்றால் அ

குழந்தை இல்லையா..?

படம்
    2003இல் எனது நிறுவனத்தின் பணிப்பாளர் என்னைப்பார்த்து “என்னடா கலியாணமாகி இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.. என்ன இன்னும் ஒன்றையும் காணோம்.. சும்மா இருக்கின்றயா..? அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றாயா..?” என்று கேட்டார். நான் என்ன சொல்ல முடியும்..? நான் எப்போதும் முயற்சிகள் செய்வது வழக்கம். வழமையானவர்களை விட கூட, நித்திரையை தவிர்த்துக்கூடச் செய்வேன்..! ஆனால் பலன் வருவது என்னுடைய கையில் இல்லை. அது எப்ப வரவேண்டுமோ அப்போது தான் வரும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கின்றது.  அதுவரை என்ன என்ன மகிழ்ச்சியான விடயங்கள் இருக்கின்றனவோ அவற்றைச் செய்யவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ முயல்வேன். என்னுடைய பணிப்பளார் சொன்னதை மனைவியிடம் சொன்னேன். உடனே அழத்தொடங்கிவிட்டார்..! எனக்கு என்னைப்பற்றி நன்றாகத் தெரியும். நான் எப்படியான ஆள் என்பதும்   மனைவிக்குத்தெரியும். மனைவியை சந்திக்க முதல், நான் ஒரு 10 வருடங்களுக்கு மேல் எங்கே இருந்தேன் என்பதை என்னுடன் பழகிய பலருக்குத் தெரியாது..! சிலர் கலியாணம் முடித்துப் பிள்ளையுடன் இந்தியாவில் இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்..! சிலர் யாருடனோ தொடர்பில் இருப்பதாகப் பேச

கெட்டது உறக்கம்..!

படம்
    இன்று காலையில் இருந்து “புதிய மாணவர்கள் திசைப்படுத்தல்  தொடர்பான தொடக்க நாள்” என்பதால் பல நிகழ்வுகள் நடந்தன..! எம்மால் இயன்றவரை அவற்றை சிறப்பாக நடத்தினோம். மாலை எனது வேலைகள் ஓய, சற்று நேரம் உறங்க வழமையான தங்குமிடத்திற்குச் சென்று படுக்க, அந்த நேரம் மின்தடைப்பட்டது. அவ்வளவு தான்..! உடல் முழுக்க வேர்த்துக்கொட்டி கட்டிலே நனையும் அளவிற்கு வந்துவிட்டது..! நேற்று யாழில் இருந்து வரும்போது, வன்னிப்பகுதியில் நல்ல மழை பெய்தது. திருகோணமலையிலும் அவ்வாறு இருக்கும் என நினைத்தேன். வெல்கம்விகார, கன்னியா தாண்ட மழையைக்காணவில்லை..! கடும் வெட்கை நிலவியது. இன்றும் அதே சூழல்..! அத்துடன் மின்சாரமும் இல்லை என்றால் படுப்பது என்பது முடியாத காரியம். ஏறக்குறைய, அரைமணிநேரம் கழிய மின்சாரம் வந்தது..! அதோடு சேர்ந்தே நிம்மதியும் வந்தது..! நான் தங்குமிடத்தில் போதிய காற்றோட்டம் இல்லை. கொங்றீற் கட்டடம் என்பதால் வெப்பமும் அதிகம். மின்சாரம் இல்லை என்றால் நித்திரையும் இல்லை..! வழமைபோல்   இரவு உணவு மற்றும் எனது வேலைகள் செய்து முடிக்கும் தருணத்தில் ஏறக்குறைய இரவு 10 மணியளவில் மீண்டும் மின்சாரம் தடைப்பட்டது. எங்கும்

இடமே இல்லை..!

படம்
  இன்று திங்கக்கிழமை என்பதாலும், போயா விடுமுறை என்பதாலும், நல்லூர், செல்வச்சந்நிதி கோவில் திருவிழாக்கள் என்பதாலும் யாழில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் கூட்டம்..! காலையே க.பொ.ச செமினார் வகுப்பிற்காக மகளை யாழிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் விட்டு வந்தேன். அதன் பிறகு, வீடுவந்து ஏனைய வேலைகளைச் செய்து , திருமலை போவதற்கான ஆயத்தங்களைச் செய்தேன். மாலை 2.00மணியளவில் மனைவி மகளை வீரசிங்கம் மண்டபத்திலிருந்து கூட்டிவந்தார். நானும் மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை பஸ்ஸிற்குத் தயாரானேன். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்தார்கள். நான் அவர்களிடம் விடைபெற்று, மாலை 3.30 இற்கு வீட்டில் இருந்து புறப்பட்டேன். சரியாக 4.00 மணிக்கு கிட்டவாக   வாகனத்தரிப்பிடத்தில் மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு, பஸ் நிற்கும் பகுதிக்குச் சென்றேன். அங்கே அதிக கூட்டமாக இருந்தது. பஸ்ஸிற்குள் ஏறக்கூட முடியவில்லை. அவ்வளவு கூட்டம். கொஞ்ச நேரம் பொறுத்து உள்ளே   சென்றால் எல்லா சீற்றிலும் ஆட்கள் இருந்தார்கள்..!   எனது பையை வழமைபோல் வைக்க   இன்று இடமே இல்லை. எனது சீற்றிலும் யாரோ இருந்தார்கள். கடந்த வாரம் ப

நானும் தொழில் நுட்பங்களும்..!

படம்
    நான் பிறந்த 60களின் கடைசியில் எமக்கு கல்வீடே கிடையாது..!   அந்தச்சமயத்தில் பகுதி மண் வீடோ அல்லது மண்வீடோ இருந்தது. ஆனால் இரவு விளக்குகள் எரியும். மண்ணெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் விளக்குகளே அதிகம் பயன்பட்டது.   எல்லோரும் கூட்டமாக இருந்து கதைப்போம். சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவார்கள். வீட்டில் பொழுது போக்குகள் கிடையாது. பெரிவர்கள் அவர்களது வேலைகளைச் செய்வார்கள். 10 மணிக்கு முன்னரே அனைவரும் படுத்துவிடுவார்கள். காலை 4 மணிக்கு முன்னரே எழுந்துவிடுவார்கள். சாப்பாடுகள் பல மாதிரியும் இருந்தாலும், பழைய சோறு அல்லது பழஞ்சோறு, பழம்தண்ணீர் என்பன   நிறைவான உணவு. இரவு மிச்சங்கள் எல்லாம் அடுத்தநாள் உணவில் தோன்றும். வருத்தங்கள் வருவது குறைவு. அந்தக்காலத்தில் நிறைவும் நிம்மதியும் இருந்தன என்றால் மிகையாகாது..!   70 தொடக்கங்களில் கல்வீடு வந்தது..! நான் தவழும் காலத்தில் கல்வீடு வந்தது. இருந்தாலும் விளக்குகள் இருந்தன. வீட்டின் ஒரு பகுதியில் வெங்காயக் கட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. இன்னோர் பகுதியில் பூசனிக்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அம்மா, அப்பா, நான் நாவலப்பிட்டி மற்றும் மூ