புலமைப்பரிசு..!
நான், பெரியவர்கள் மாதிரி சில வாக்குகள் கொடுத்துவிட்டு, எனது மறதி காரணமாக அவற்றை நிறைவேற்றாமல் விடுவதுண்டு..! பொதுவாக மறதி வராமல் இருக்க, சிறு குறிப்புக்கள் எழுதி வைப்பதுண்டு. சில சமயம் அதையும் சேர்த்து மறந்துவிடுவேன்..! மறதி பெரும் குறையாக இருந்தாலும், அதனையும் நான் நன்மையாக எடுத்துக்கொள்கின்றேன்..! என்னைக் காயப்படுத்தும் அளவிற்குத் துரோகங்கள், ஏமாற்றுக்கள், களவுகள் போன்றவற்றைச் செய்துவிட்டு என்னுடன் நல்லவர்கள் போல் பழகும் மக்களைப் பற்றித் தெரிந்தாலும், இந்த எண்ணம் காரணமாக அவர்களை மன்னித்துவிடுவேன். மறதியால் விரோதிகள் குறைவு..! நல்ல ஞாபகத்துடன் இருந்தால், இருக்குமிடம் எல்லாம் பதட்டத்துடனே இருக்க வேண்டும். எனது தற்போதைய நிலைக்கு அவை ஒத்துவராது. மறதியால் தம்பியின் மகனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நீண்ட காலம் எடுத்துவிட்டேன். அவர் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து, எமக்கும், அவரது கிராமப் பாடசாலைக்கும் பெருமை சேர்த்ததால் ஏதாவது செய்ய வேண்டும் என்று இருக்க, எனக்கு முந்திப் பலர், பல உதவிகளைச் செய்துவிட்டார்கள்..! சரி இருந்தாலும், யாரும் அவரையும் அவரது அக்காவையும் அழைத்...