ஆதிபுருஷ்..!
சின்ன வயதில் இருந்தே இராமாணயம் தெரியும். அதில் வரும் இராமர்
மற்றும் சீதை பற்றி ஒரு கனவு உருவம் இருக்கும். சீதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
இந்த முக அமைப்பில் இருக்க வேண்டும். இராமன் என்றால் இப்படியான தோற்றத்தில் தான் இருக்க
வேண்டும் என்ற அடிப்படையை மாற்றி, எடுத்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.
அதேபோல் இராவணன் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற ஒரு
இலக்கணம் எனக்குள் இருந்தது..! இந்தப்படத்தைப் பார்த்தபோது, இராவணன் ஐரோப்பிய நாட்டைச்
சேர்ந்தவன் போலவும், இராமன் தென்னிந்தியாவை சேர்ந்தவன் போலவும், சீதை பாகிஸ்தான் அல்லது
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் போலவும், கதாபாத்திரங்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்தது,
எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் கதையில் ஒட்டமுடியவில்லை.
இலங்கையை அமெரிக்கா மாதிரிக்காட்டி வேறுப்பேற்றியுள்ளார்கள்.
எவ்வளவு அழகான இயற்கையான விடயங்கள் இலங்கையில் இருக்க, கணினி வரைகலை இருக்கு என்பதற்காக
சும்மா பணத்தை இறைத்துள்ளார்கள்..!
அதேபோல் இராமரின் வில் மற்றும் அம்பு வடிவமைத்த விதம், புஷ்பக விமானம் என எதையும் நான்
நினைத்த மாதிரி வரவில்லை என்பது எனது எண்ணம்.
இந்தப்படத்தின் கதை என்றால், காட்டில் இருக்கும் இராமன்,
இலக்குமணன் மற்றும் சீதா, மாயாஜாலம் மூலம் இராவணனால் ஏமாற்றப்பட்டு, ஒரு கொடிய
மாமிசப்பறவை மூலம் சீதா இலங்கைக்கு கடத்தப்படுகின்றாள். பின்னர் அனுமானின் உதவியுடன்
சண்டைபோட்டு சீதையை மீட்கின்றார். இடையில், போருக்கு உதவி பெறுவதற்காக சுக்ரீவனையும்
, வாலியையும் சண்டைபோட வைத்து அந்தச்சமரில் வாலியைக்கொன்று, சுக்ரீவனை அரசனாக்கி, அவனது அனைத்துவானரப் படைகளையும்
திரட்டி, கடல் அன்னையின் அனுசரனையுடன் இலங்கைக்கு மிதக்கும் கற்பாதைபோட்டு, இலங்கை
வந்து சண்டைபோடுகின்றார்கள். முடிவு, இராமனும் சீதாவும் சேருகின்றார்கள். அவ்வளவு தான்.
இந்தப்படத்தைப் பார்க்க
எடுத்த பின்னர், 10 மாதங்கள் தாமதித்து, மூன்று இடைவேளைகளில் இரண்டு நாட்கள்
எடுத்துப் பார்த்து முடித்தேன்..!
எத்தனையோ தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் போன்ற பலரின் உழைப்பு விரயமாக்கப்பட்டுள்ளது..!
ஓம் ரவுடின் (Om raut) இயக்கம் நவீன இராமாயணம் என்று நினைத்து எடுத்தாலும்,
விளைவு ரசிக்க முடியவில்லை.
இது இராமாயணம் அல்ல..! மயாணம் மாதிரி இருந்தது..!
ஆ.கெ.கோகிலன்
11-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக