நாடு..!

 

நம்ம ஊரு தர்ஷனுக்காகப் படத்தைப் பார்த்தேன். அவர் தான் படத்தின் நாயகன் என்பது மாத்திரமன்றி, படத்தைத் தூக்கிச்செல்பவரும் அவரே..! உண்மையில் மிக நல்ல படம்.

மருத்துவம் என்பது ஒரு சேவை. ஆனால் தற்போது, மருத்துவத்தைப் பெரிய வியாபாரமாகவும், பணக்காரர்களின் ஒரு கௌரவப் படிப்பாகவும், வளர்ந்த நாடுகளுக்குச் செல்லத்தேவையான முக்கிய தொழில்வாய்ப்பாகவுமே பார்க்கின்றார்கள்..!

உண்மையில் மருத்துவர் ஆவதற்கு, மக்கள் மேல் அன்பு பாசம் என்பன வேண்டும். ஒவ்வொரு உயிரையும் காக்கும் தாய்மை உணர்வு வேண்டும்.

இந்தப்படத்தில் வரும் ஒரு பெண் வைத்தியரை, மக்கள் அனைவரும் ஊரில் தங்க வைக்கவும், தொடர்ந்து தமக்கு வைத்தியம்  செய்ய வைக்கவும் எவ்வளவோ முயற்சிகள் செய்கின்றார்கள். இறுதியில் டொக்டரே மனம் மாறி விடுவாரோ என நினைக்க அப்படியில்லாமல் பெற்றோரின் விருப்பத்திற்காக அவர்கள் ஒழுங்குபடுத்திய மணமகனை மணந்து வாழ்வில் இணைய ஊரைவிட்டே செல்கின்றார்..!

படத்தின் கதையே, டொக்டராக ஆசைப்பட்ட பெண், பிளஸ் 2 இல் நல்ல மதிப்பெண் பெற்றும்,  நீட்  பரீட்சையில் நல்ல புள்ளியைப் பெறமுடியாமல் வைத்தியராகும் வாய்ப்பை இழக்கின்றார். அந்த விரக்தி காரணமாக, தூக்குப்போட்டு தனது உயிரை மாய்க்கின்றார். தமையனும், தந்தையும்  அந்த இழப்பைத் தங்கமுடியாமல் சொல்லொனா வேதனைகளை அடைகின்றார்கள்.

ஊருக்கு எப்படியாவது ஒரு மருத்துவரைக் கூட்டிவர போராடுகின்றார்கள்.  அந்த ஊரில் கலெட்டரான ஒரு அரச அதிகாரி, மக்களின் கோரிக்கையை இயன்றவரை நிறைவேற்ற முயன்றார்.

அதற்காகத் தன்மகளையே அந்த ஊரில் சேவை செய்ய அனுப்பினார். அதற்கேற்ப சேவைகள் செய்தாலும் சில வாரங்களில் டொக்டர், தனது திருமணத்திற்காக ஊரைவிட்டுச் செல்கின்றார்.  ஊர் மக்கள் இன்னோர் மருத்துவர் வருவார் எனக்காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். நம்பிக்கையே வாழ்க்கை என்பது போலவே மக்களின் எண்ணங்கள் உள்ளன.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் தமது வேலையைத் தரமாகச் செய்திருந்தார்கள்.

தொழில்நுட்பக்கலைஞர்களின் பங்களிப்பும் இருந்தன..!

இயக்குனர் எம். சரணவனனிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 


ஆ.கெ.கோகிலன்

08-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!