கப்டன் மில்லர்..!

 


 


இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில், விடுதலைப்புலிகளின் இயக்கத்தில், மனிதவெடிகுண்டாக முதன் முதலில்  தனது உயிரைத்துறந்தவர் தான் கப்டன் மில்லர்..!

இந்தப்படத்தில் மில்லர் என்ற பெயரை ஆங்கிலப் படையினர் தனுஷிற்கு வழங்க, அதற்கு முன்னாலுள்ள அடைமொழியான கப்டன் என்ற பட்டத்திற்கு ஏற்ப ஒரு சிறந்த வீரனாக தன்னைச் செதுக்கி, அடிமைப்பட்டுக்கிடந்த சமூதாயத்திற்கு ஒரு மீட்சியை ஏற்படுத்த, ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், உள்ளூர் நயவஞ்சக ஆளும் வர்க்கத்திற்கும் எதிராகப் போராடி, அந்த அடிமைப்பட்ட சமூகத்தை கோவிலுக்குள் கருவறை வரை செல்ல வைக்கின்றான்..! இந்தப்படத்தில் நீண்டகாலமாக எமது மக்களின் நயவஞ்சகத்தனங்களும், அப்பாவி மக்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்ளை அடிமைகளாகவும், அழுக்கானவர்களாகவும், ஏழைகளாகவும் வைத்து வேதனைப்படுத்தும் வாழ்வியல் முறைக்கு, ஒரு மாற்றீடாக சிந்தித்து, உழைக்கும் மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்கத்தையும், அடுத்தவர்களின் பொருளாதாரத்திற்கு ஆசைப்படும் ஐரோப்பிய  ஆங்கிலேய மனப்போக்குகளுக்குப் பதிலடியாகவும், இந்தப்படத்தைப் பார்க்கலாம்.

 இந்தப்பூமியில், இறைவன் ஒருவரையும் நீண்டகாலத்திற்கு வாழவிடாமைக்கு காரணம், இயற்கையைப் புரிந்துகொண்டு, அனைத்து உயிர்களையும் இயன்றவரை அவற்றின் போக்கில் வாழவிடுவதுடன், நாமும்  அவற்றோடு அனுசரித்து, வாழ்வதற்கேயாகும்.

இந்தமெய்யியலை ஏற்க உண்மையில் விலாசமான மனம் வேண்டும். இந்த மனத்துடன் இருப்பவர்கள், உலகில் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் உலகம் அமைதிபெறும். அதுவரை சண்டைகளும், போர்களும் தொடரத்தான் போகின்றன..!

இந்தப்படத்தில், கோவிலிலுள்ள கருவறைக்குள்  அப்பாவி அடிமைப்பட்ட மக்களை கூட்டிவருவதே பிரதான நோக்கமாக எடுக்கப்பட்டுள்ளது..! அதனை சிறப்பாக, அரச வாழ்க்கையையும், ஆங்கிலேய வாழ்க்கையையும், அடிமை  வாழ்க்கையையும் இணைத்து, அடிமைகளின் விலங்குகளை உடைத்துள்ளார் படத்தின் இயக்குனர்..!

படத்தில் நடித்த அனைவர் நடிப்பும் தரமாக இருந்தன. தனுஷின் தோளில் அதிக சுமையை ஏற்றி, வழமையான கதாநாயப் போக்கில் கூட்டிச்சென்று, இறுதியில் அவரைக் கடவுளாகவே மாற்றியுள்ளார்கள்.

படத்தில் தொழில்நுட்பங்கள் எல்லாம் சிறப்பாக இருந்தன.

இயக்குனர் அருண் மாதேஷ் சமூகத்தில் இருக்கின்ற ஒரு சாராரின் மனநிலைக்கு ஒத்தடம் கொடுத்ததுடன், சிலரது எண்ணங்களுக்கு ஆப்பும் அடித்துள்ளார்..!

கல்வி, கருவி, நாகரீகம் என்பன வரும்போது அனைத்தும் மாறும்.

ஆயுள் அதிகம் இருந்தால், ஆணவத்தில் அலைந்தவர்களும் அதனை அவதானிக்க முடியும்..!

 


ஆ.கெ.கோகிலன்

14-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!