முசுறுகள் (Red/Fire Ants) ..!
சிலருடன் இயற்கை விரும்பி விளையாடுவது வாடிக்கை..! ஏன் என்று தெரியவில்லை..? பொறுத்தார் பூமியாழ்வார் என்பது போல் என்னையும் இயற்கை நினைத்துவிட்டதோ என்பது தெரியவில்லை..? ஆனால் விளையாட்டு தொடர்கின்றது..! ஆனால் சில சமயம் இயற்கையின் எண்ணங்களை என்னால் நிறைவேற்ற முடியாது போகின்றது..! நான் எல்லா உயிரினங்களையும் நேசிக்க விரும்பினாலும், என்னைக் கடிக்கும் நுளம்பைத் தூக்கிக் கொஞ்ச என்னால் முடியவில்லை..! அப்படியே கடித்துவிட்டுப் போகட்டும் என அன்பாய் இருக்கவும் இயலவில்லை. கடித்த நுளம்பை அடித்துக்கொன்றால் தான், நானே ஒரு பயனுள்ள மனிதாக எனக்குத்தோன்றுகின்றது. இன்று எனதுவீட்டிலுள்ள செவ்வரத்தை மரங்களில் நிறைய முசுறுகள் கூடுகட்டி வசித்து வந்தன. பல நாட்களாகப் பார்த்தாலும் அவற்றை அழிக்க மனம் வரவில்லை. அந்தச் செவ்வரத்தை மரங்களில் பூக்கள் கூட ஆய்வதில்லை. ஆனால் அவை பெருகிப்பெருகி கைவைத்தாலே பாய்ந்து ஏறிக்கடிக்கும் அளவிற்கு வந்துவிட்டன..! மனைவியும், பிள்ளைகளும் என்னைப்போல் பொறுத்து இருந்தார்கள். அவற்றை அழிக்கும்படி என்னிடம் ஒன்றும் குறைசொல்லவில்லை. நான் யாழில் நிற்கும் நாளில...