ஊழியர் பற்றாக்குறை..!

 


 


தற்போதைய காலத்தில் நிறுவனம் பரபரப்பாக இயங்கவேண்டிய சூழலில் இருக்கின்றது..!  நேற்று யாழில் இருந்து வரும்போதே, சிக்கல்கள் ஆரம்பித்துவிட்டன..! ஒரு ஊழியர் தனது பாட்டி இறந்துவிட்டார் என்பதால் தன்னால்  வரமுடியாது என்றும் லீவு கேட்டும் இருந்தார்.  அவருக்கு ஒருவாறு அனுமதி வழங்க, காலையில் இன்னோர் ஊழியர் சுகவீனம் என்று லீவு கேட்க, அவருக்கும்  அனுமதிக்க, இன்னோருவர்  எனது பதிவாளரிடம் லீவு சுகவீன லீவு பெற்று நிற்க, இன்றைய வேலைகளை எமது கல்விசார் ஊழியர்கள் ஒருவாறு சமாளித்து, செய்துமுடித்தார்கள்.

இன்று தலைமையகத்தில் முகாமைத்துவ உதவியாளர்களின் புது நியமனம் தொடர்பாகத் தகவல்  ஒன்று கிடைத்தது. எமது ஊழியர்கள் எமக்கும் ஒரு முகாமைத்துவ உதவியாளர் வேண்டும் என்று கோரினார்கள். நானும், அவர்களின் ஆசைக்காக தலைமையகத்திலுள்ள முக்கிய அதிகாரிகளுக்கு போன் எடுத்தால்  சரியான பதில்  இல்லை.

திரும்ப மாலையும் எடுத்துவிட்டு, விட்டுவிட்டேன். இடையில் மாணவர்கள் தமது ஒப்படைப்புள்ளிகளில் இருக்கும் குறைகளை நிவர்த்திப்படுத்தச் சொல்ல அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, மரண வீட்டிற்கும் போய்விட்டு வர, பாதுகாப்பு ஊழியர்கள் நாளை வேலைக்கு வரவிரும்பவில்லை என்றும் தமக்கு சம்பளம் தராமல்விட்டால் தொடர்ந்து  வேலைக்கு வரமாட்டோம் என்றும் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் பணிப்பாளர் நாயகம் இரவு எனக்குப் போன் எடுத்தார்..! தனது வேலைப்பணிச்சுமை தொடர்பாக அப்போது பதிலளிக்க முடியவில்லை என்பதையும், நான் வழமையாகச் சொல்லும் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் சொன்னார்..!  அப்போது பாதுகாப்பு ஊழியர்களின் வருகைப்பதிவைக் கேட்டார். நாளை நாம் அவற்றை அனுப்பினால், அவர்களுக்குரிய சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யமுடியும் எனக்கூறினார்.

மாலை மரணவீட்டிற்குச் சென்றதால் குளித்துவிட்டு, சிறிது உறக்கத்தின் பின் எமது திருத்திய காரை ஓட்டிப்பார்க்க முற்பட்டேன். அது ஒத்துழைக்கவில்லை..! பேசாமல் விட்டுவிட்டேன்.

இந்தக்கார் இன்னோர் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால், அனுப்பும்போது இடையில் ஏதாவது சிக்கல் பண்ணினால், அங்கு கொண்டுசெல்வதும் கஷ்டமாகிவிடும். எனவே எல்லாம் சரியென்றால், வந்து எடுக்கும்படி சொல்வோம் எனத்தீர்மானித்தேன்.

நாம் சரியாக நடக்க முயல்வோம். பின்னர் நடப்பது எதுவென்றாலும், பார்த்து செயற்படவேண்டியது தான். தற்போது எங்கும் மக்கள் விழப்படைந்து வருகின்றார்கள். அதற்கு சமூக ஊடகங்களும், நவீன ஊடக நுட்பங்களும் பெரும் துணை புரிகின்றன..! அந்தவகையில் நாளைய எமது நாடு நன்றாக வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக உணர்கின்றேன். உண்மை வெல்லும். உண்மையே உயர்வு..! உண்மைக்காக மரணிப்பதே, பெருமையான மரணம்.

 

ஆ.கெ.கோகிலன்

15-07-2024.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!