தேரைகளின் கூத்து..!

 


 


முன்பு திருகோணமலையில் இருந்தபோது, குரங்குகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகள் என்பவற்றின் தொல்லைகள் காரணமாக அவற்றை அழிக்க முற்பட்டேன்..! அவைகள் அழிந்தனவோ தெரியவில்லை எனக்கு பல சிரமங்களைக் கொடுத்தன..! ஓடுகளை உடைத்தல், உணவைத் திருடல் அல்லது கெடுத்தல் போன்ற வேலைகளை அவை மிக இலகுவாகச்செய்துவிடும்.  ஒரு கட்டத்தில் திருகோணமலை, உவர்மலையில் வசிக்கவே முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். அவ்வளவு தொல்லைகள் செய்தன..! நான் முழுநேரக்கொலைகாரனாக  மாறினால் ஒழிய அவற்றை ஒழிக்க முடியாது என்ற எண்ணமே வந்துவிட்டது..!

சரி, அப்படி அவற்றை அழித்துவிட்டு, நானும் நிம்மதியாக இருந்துவிட முடியாது. அனைத்தையும் இயற்கையே படைத்தது. அதுவே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.

இப்படியான வெறுப்புக்காளால், இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் சென்றேன். சில நாட்கள் நன்றாகச் சென்றன. பின்னர், அங்கும் சில உயிர்கள் எமக்கு வெறப்பை ஏற்படுத்தின. நாய்கள், பூனைகள், காகங்கள், எலிகள், அணில்கள், கரப்பான்கள், நுளம்புகள் மற்றும் புறாக்கள் என சூழலில் காணப்பட்ட பல உயிரினங்களும்  ஏதோவோர் விதத்தில் தொல்லைகளையே தந்தன.  பொறுக்க முடியாமல் சிலவற்றைக் கொன்றாலும் பெரும்பாலும் மன்னித்து விடுவதே எனது வழக்கம்..! அவ்வாறே திருமலையிலும் செய்தேன்.  யாழிலும் அதையே செய்தேன்..!

குறிஞ்சி பூக்கும் கால இடைவெளியில் மீண்டும் திருகோணமலைக்கு மாற்றலாகி வந்தேன்..! பல அவ்வாறான விடயங்களை மறந்து இருந்தேன். வந்தபின்னர் திரும்ப அவற்றைப்பற்றிய எண்ணங்கள் வருகின்றன..! புறாக்களின் சத்தங்கள் மீண்டும் ஒரு வித பயத்தை எனக்கு மட்டுமல்ல பலருக்கும் ஏற்படுத்துகின்றன. பாவம் புறாக்கள், வேறு இடமில்லாமல் எமது நிறுவனத்திலுள்ள கட்டடக்கூரைகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன..! துரத்தினாலும் போய்விட்டு, திரும்ப வருகின்றன..! இதற்கு என்ன வழி..?  புறாத்தெய்வத்தைத் தான் வணங்க வேண்டும். அல்லது புறாக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, இருக்கும் புறாக்களை அகற்ற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும்.

இது இப்படியிருக்க, தற்போது தேரைகளின் தொல்லை பெரும் தொல்லையாக மாறியுள்ளன. அலுவலகத்தில் நிறையத் தேரைகளும், அதன் குஞ்சுகளும் குளியலறைக்குள் (Bathroom) இருந்துகொண்டு

கும்மாளம் போடுகின்றன..! ஏறக்குறைய நீண்டநாட்களாகப் பொறுத்துப் பொறுத்தப்பார்த்தேன். வழி ஒன்றும் தெரியவில்லை. துப்பரவுப் பணியாளரிடம் சொல்லி குளோறின் போட்டுப் பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. அவற்றின் தொல்லை குறைவதாகத் தெரியவில்லை.

நேற்று நானே மோட்டின் ஸ்பிறேயரை அவற்றின் மீது அடித்து கொல்ல முற்பட்டேன்.  என்ன நடந்ததோ  தெரியவில்லை. காலை அவை ஒன்றையும் காணமுடியவில்லை. இரவு திரும்ப வருகின்றனவா என்பதும் தெரியவில்லை..!  பொறுத்துப்போக முனைந்தாலும், எப்போதும் மனமும் அதற்குத் தயாராக இருப்பதில்லை. சில நேரங்களில் கடும் கோபங்கள் வந்துவிடுகின்றன..! தவிர்க்க முடியாமல் கொலைசெய்யும் அளவிற்கு அவற்றின் நடவடிக்கைகள் எம்மைக்கொண்டுசெல்கின்றன. என்ன செய்ய..? தேரைக்கடவுளை வணங்கவா..? அல்லது மருந்து வைத்துக்கொல்லவா..? அல்லது தொடர்ந்து சகித்துச்செல்லவா..?

சகித்து சகித்துப்போனால், காட்டுக்குள்  தவமிருக்கும் முனிவர் போல் சுற்றிவர கரையான் புற்றுக்கள் தோன்றினாலும் கேடுசெய்யாமல் இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே “சொர்க்கம்” என்று மனிதனால் வகுக்கப்பட்ட பகுதிக்குச் செல்லவேண்டியது தான்..!

மிக மிக நியாயமாக வாழ முற்பட்டால் எம்மால் இந்தப்பூமியில் தாக்குப்பிடிக்கவே முடியாது..!

தப்புச்செய்து  நிம்மதியாக இருக்கவும் முடியாது..!

எனவே இவை இரண்டிற்கும் இடையில், ஒருவாறு சமாளித்து, நகர்வதே வெற்றி தான்..!

 

ஆ.கெ.கோகிலன்

25-06-2024.

 

குறிப்பு-

                                        wood frog

அந்தத்தேரைகள் அழியவில்லை, கொலைப்பழி இல்லை என்று நம்புகின்றேன். தொடர்ந்து அவை குளியலறைத் தண்ணீரில் கும்மாளமிடுகின்றன..! கரப்பானுக்கான மோட்டீன், அவற்றைப் பாதிக்கவில்லை என்பதும், அது கரப்பானுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் பரிசோதனைவாயிலாகப் புரிகின்றது..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!