ஜவான்..!

 


 

ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் என்று வெற்றிகரமான மசாலாப்படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லியின் இந்தப்படத்தை எனக்கு வந்த நாட்களில் பார்க்கத்தோன்றவில்லை. சரி இந்தியிலும் போய் பல படங்களை உருவிக்கதைப்பண்ணியிருப்பார் என நினைத்தேன். இன்று தான் படத்தைப் பார்த்தேன், அவ்வாறே எடுத்து இருந்தார்.

ஆனால் வழமைபோல் அவரது காட்சிப்படுத்தல்கள் போரடிக்காது, எல்லோருக்கும் பிடிக்கலாம். இதிலும் நிறைய நல்ல விடயங்களைப் பற்றிப்பேசியிருக்கின்றார்..! விவசாயிகள் தற்கொலை, விசவாயுக்கசிவு, மருத்துவத்தில் ஊழல் மற்றும் இராணுவத்தில் ஊழல் என்று நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் சேர்த்துப் பந்தாடியிருக்கின்றார்..!

போதாததற்கு இறுதியில் அரசியல் பேசி, எப்படி ஓட்டுப்போடனும் என்று மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அனைத்துத் துறைகளையும் காப்பாற்றுவது மக்கள் கையில் தான் உள்ளது என்று சொல்லி அரசியலும் பேசியிருக்கின்றார்.

படத்தில் சாருக்கான் இரட்டை வேடத்தில் தேவைப்பட்டுள்ளது. தீபிகாபடுகோனி, நயன்தாரா,பிரியாமணி, விஜய்சேதுபதி மற்றும்  சஞ்சய்தத் என இந்திய சினிமா நட்சத்திரப்பட்டியலையே படத்தில் இறக்கியுள்ளார்..!

படம் பார்க்கும் போது விறு விறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் போகின்றது. பாடல்கள், இசை, ஒளிப்பதிவு என அனைத்துத் தொழில்நுட்பங்களும் ரசிக்கலாம். வில்லனையும், கதாநாயகியையும் தூக்கில் போட்டுக்கொண்டது வித்தியசாமாக இருந்தது. ஆனால் சட்டம், ஒழுங்கு பற்றிக்கதைக்காமல் நினைத்த மாதிரி யாரையும் தூக்கில் போட்டுக்கொல்லலாம் போல, படத்தை எடுத்திருக்கின்றார் இயக்குனர்.

சாருக்கானை மனதில் வைத்துக்கதை எழுதினாரா அல்லது விஜய்க்கு எழுதிய கதையில் சாருக்கான் நடித்தாரா தெரியவில்லை.

ஆனால் ஒன்று, வர்த்தக ரீதியாக வெற்றிபெறக்கூடிய ஆற்றல் அட்லிக்கு இருக்கின்றது என்பதை, இந்தப்படத்தின் மூலம், இந்திய ரீதியில் நிரூபித்துள்ளார்..! அதற்குப் பாராட்டுக்கள். ஏதாவது புதுமையான கதைகள் என்றால் என்னைப்போன்றவர்களுக்கு இன்னும் பிடிக்கலாம்.

சிடி வாங்கி நீண்ட நாட்களாக மறந்துவிட்டேன். இன்று, இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பார்த்தேன்.

பின்னர் தான் மகள் சொல்லித் தெரிந்தது சிடி இருக்கு என்கின்ற விபரம்..!  சில இயக்குனர்கள் என்றால் உடனே படத்தைப்பார்க்கத்தோன்றும். ஆனால் சிலரது படத்தைப் பார்க்க, உடனே ஆவல்வர மறுக்கின்றது. இந்தப்படத்திற்கும் நீண்டகாலம் எடுத்துவிட்டது..!

விஜய் பட ரசிகர்களுக்கு, இந்தப்படம் நிச்சயம் செமவிருந்து. ஆனால் சாருக்கான் இடத்தில் விஜயை வைத்துப் பார்க்க வேண்டும்.

 


ஆ.கெ.கோகிலன்

06-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!