பெரிய செலவு..!

 



2006இல் திருகோணமலையில் எடுத்த எனது மோட்டர் பைக் கடந்த கிழமை செய்த பகீஸ்கரிப்பால் என்னால் பிரயாணத்தை இலகுவாகச் செய்யமுடியவில்லை..!

 நேற்று இரவு அங்கிருந்து வந்ததும் மோட்டார் பைக்கைத் திருத்தும் கடையில் கொண்டுபோய் விட்டேன். அதற்கு அவர்கள் பெரிய பிரச்சனைபோல் இருக்கின்றது..! கடை பூட்டப்போகின்றோம். நாளை காலை வேளைக்கு வாருங்கள், பார்ப்போம் என்றார்கள்.

அதேபோல் இன்று காலை சொன்னமாதிரிச்சென்றேன். எஞ்சினின் சில பகுதிகளைக் கழட்டி வைத்துவிட்டு இவையெல்லாம் மாற்ற வேண்டும் என்றார்கள். வேறு வழியில்லையா என்று கேட்கும் போது, செய்துபோடலாம். அதனால் ரூபா.2000 அல்லது ரூபா.3000 குறையக்கூடிய வழியுண்டு. ஆனால், ஒரு மாதத்திற்கு நீங்கள் கவனமாக வண்டியை ஓட்டவேண்டும் என்று நிபந்தனை போட்டார்கள். புதிதாக வாங்கினால் இந்தப்பிரச்சனையில்லை  என்றார்கள். சரி, பரவாயில்லை, அந்தப்பகுதிக்குரிய பொருளைப்  புதிதாக வாங்கிப்பூட்டச்சொன்னேன்.

அவ்வாறே திருத்தி, மாலை 5.45இற்கு என்னை அழைத்தார்கள். செலவு மொத்தமாக  ரூபா.37,000 இற்கு முடித்தார்கள்..! நான் கேட்டதிற்கு இணங்க ரூபா.1000 ஐ குறைத்துவிட்டார்கள். சரி, செலவு வந்தால் செய்யவேண்டியது தான். பணம் வரும் காலம் வரும்..! போகும் காலம் போகும்..! அவ்வளவு தான். இப்போது மோட்டார் வண்டி என்னோடு ஒத்துழைக்கின்றது.

ஏறக்குறைய 15 வருடங்களுக்கு மேலாக ஒரு இலட்சம் கிலோ மீறறர்கள் நான் பயணிப்பதற்கு, என்னையும் என்னோடு சேர்ந்தவர்களையும் சுமந்து திரிந்த எந்திரம் என்றாலும் ஏதோ ஒரு வகையில் தொல்லைகள் கொடுக்காமல், இடைவழியில் எங்கும் நிற்காமல், வீட்டில் நிற்கும் போது மட்டும் சில பிரச்சனைகள் கொடுத்தாலும், என்னால் விட முடியாத, தவிர்க்க முடியாத, அந்த வண்டியை மீண்டும் ஓட்டக்கூடிய நிலைக்கு கொண்டுவந்ததில் மகிழ்ச்சி..!

இதுபோக மகளின் சைக்கிளிலும் ஒரு திருத்தவேலை இருந்தது. அதையும் முடித்தேன். என்னைக் காவும் பைக்கிலும்  இருந்த பிரச்சனையைத்  தீர்த்தேன். எனது வீட்டு வளவிலும் சில குறைவேலைகள் இருந்தன. அவற்றையும் முடித்து, சில  மாதங்களுக்குப் பிறகு முடியையும், கடைக்குச்சென்று வெட்டினேன். தலையில் முடிகுறைவு  என்றாலும் இடையிடையே கடைக்குப்போகவேண்டிய தேவை தற்போது அதிகம் வந்துள்ளது..! அப்படிப்போகும் போது, முடிதிருத்துபவரின் 6 மாதக்குழந்தை இறந்ததைக் கேட்டதும், எனது மனதின் மூலையில் இருந்த கவலையும் பறந்தது..!

ஒரு தந்தைக்கு தனது பிள்ளையின் இழப்பை நேரில் பார்க்கும் வாய்ப்பு என்பது “மிகப்பெரிய தண்டனை”

என்றே நான் கருதுகின்றேன்.  அவ்வாறான சூழ்நிலைகள் யாருக்கும் வரக்கூடாது என்ற மனவுணர்வுடன் கடையைவிட்டு வெளியே வந்தேன்.

இதற்கு முதல் எனது மாமனாரைச் சந்தித்தேன். எப்படியோ இருக்க வேண்டியவர், இப்படியாக இருக்கின்றார் என்ற வருத்தத்துடன், அவருக்கு மேலும் நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறி, வாழ்வைப் பற்றிய எனது புரிதலையும் கூறி கலங்க ஒன்றுமில்லை. ஒவ்வொரு விடயத்தையும் சாதாரணமாக எடுத்துச் செல்லப் பழகினாலே போதும். அது நிறைவையும் நிம்மதியையும், வாழ்க்கை வேகத்திற்கு ஒரு நிதானத்தையும் தரும் என்ற கருத்தைக் கடத்திவிட்டு வந்தேன்.

இன்று நண்பர்களின் அழைப்பு,  என்னை மகிழ்வூட்ட வந்துகோண்டே இருந்தது..! எனக்குப்பிடித்த சூப்பர் சிங்கர், சரிகமப பார்த்து முடித்தபின் அவர்களிடம் சென்று, பல விடயங்களைப் பரிமாறி, மிச்சம் சொச்சமிருந்த மனவழுத்தங்கள் அற்று, நியூற்றலாக வீடுவந்தேன்..!

இரவு உணவை முடித்துப்படுக்கச் செல்ல, அடுத்த நாள் அதிகாலை 1 மணியாகிவிட்டது..!

யாழ்ப்பாணம் வந்தால் நித்திரை குறைவு..! திருகோணமலை சென்றால் போதிய நித்திரை..! வாழ்வு தற்போது சமச்சீராக இருக்கின்றது..!

செலவுகள் செய்தாலும், எல்லாம் தொழிற்படு நிலையில் வைத்திருப்பதையே நான் என்றும் விரும்புவேன். இன்றும் அதனைச் சரியாகச் செய்தேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்..!

ஆ.கெ.கோகிலன்

15-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!