கருடன்..!
சில கதைகள் வழமையான
பாணியில் இருந்தாலும் பார்க்கும் போது
ஏதோவோர் விதத்தில் ஈர்க்கும். அப்படிப்பட்ட படமாகவே இந்தப்படம் உள்ளது..!
படத்தில் நாயகன் சூரி தான் என்றாலும் அவரைக்கொண்டு சென்ற
விதம் புதுமையாக இருந்தது. வழமையாக வரும் கோவில் பிரச்சனைகள் போன்ற கதை என்றாலும் வித்தியாசமாக
சிந்தித்து காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
ஆக்ரோசமாக சூரி கதைக்கும் காட்சிகளிலும் உண்மை பேசும் காட்சிகளிலும்
நன்றாக நடித்துள்ளார்..!
அதுமாத்திரமன்றி, சண்டைக்காட்சிகளில் அவரின் நடிப்பு மிகச்சிறப்பாக
இருந்தது..!
சசிக்குமார், உன்னி
முகுந்தன், சமுத்திரக்கனி போன்ற ஹீரோக்கள் இருந்தாலும் சூரியின் நடிப்பு கச்சிதமாக
இருந்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
நாய் மாதிரி இருந்த ஒரு அநாதையை மனிதனாக மதித்து கௌரவித்த
ஒருவனை, விசுவாசத்திற்காக அவன்சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில்
தனது போக்கு பிழையென்பதை உணர்ந்து, மனிதனாக மாறியிருக்கும் ஒரு மிருகத்தை கொல்லவேண்டிய
சூழலுக்குள், அந்த விசுவாசி மாட்டுவதே கதை..!
வழமை போல் சசிக்குமார், சமுத்திரக்கனி மற்றும் உன்னி முகுந்தன்
போன்றவர்களின் நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தின் நாயகி புதுமுகமாக இருந்தாலும் சிறப்பாக
நடித்து இருந்தார். வடிவுக்கரசி, ஆர்.வி.உதயகுமார், மற்றும் மைம் கோபி போன்ற அனைத்து
நடிகர்களும் படத்தில் உணர்ந்து வாழ்ந்திருந்தார்கள்.
படத்தில் விறு விறுப்புக்குப் பஞ்சம் இல்லை. இந்தப்படத்தின் இயக்குனர் துரைசெந்தில் குமார் திரை, கதை, வசனம் , இயக்கம் எல்லாவற்றிலும் மீண்டும் தடம் பதித்துள்ளார்.
ஆ.கெ.கோகிலன்
14-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக