சலார்..!

 


 


இந்தப்படத்தை பார்க்கும் போது எனக்கு சற்று உடம்பு சரியில்லை. அதனாலோ என்னவோ படத்தின் கலரும் காட்சிகளும் மங்கலாகவும் வெறுப்பாகவும் இருந்ததன.

கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் என்பதாலும் பிரபாஸ், பிருதிவிராஜ், சுருதிஹாசன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படம் எனக்கு அவ்வளவு ஈர்க்கவில்லை.

நடைமுறைச்சாத்தியமில்லாத அளவிற்கு ஹீரோயிசத்தை காட்டியது கடுப்பாக இருந்தது.

இந்தப்படத்தின் கதை என்று பார்த்தால் நண்பனுக்காக சாகத்தயாராகும் நண்பனின் கதை. படத்தின் இறுதியில், பார்த்தால் நண்பனையே சாகவைக்கும் நண்பனின் கதை என்று தெரிகின்றது..!

அதே நேரம் தாயின் சொல்லை மதிக்கும் பிள்ளை. யாரோடும் வம்பு தும்புக்குப் போகாமல் தாயாரின் கண்காணிப்பில் இருக்கும் மகனிடம், நண்பன் உதவி கேட்கின்றார். அவருக்காகப் போய், பல அடிதடிகளில் ஈடுபட்டு, அவனை ஒரு சாம்ராஜ்ஜியத்தின் மன்னனாக்குகின்றான்..! அதேவேளை அந்த  சாம்ராஜ்யத்தை கைப்பற்ற வந்தவனும் அவனே என்பது போல்  இறுதிக்காட்சியை முடித்து, சலார் 2 வருகின்றது..! காத்திருக்கச் சொல்கின்றார்கள். 

சலார் 1 பார்ப்பதே கடினம். அவ்வளவு பெரிய படம். மங்கலான காட்சிகள். படம் முழுக்க ஒரே ரத்த வாடை..! படத்தில் பிரபாஸ் தான் அடிதடியில் இறங்கினார் என்று பார்த்தால் இறுதியில் பிரிதிவிராஜூம் அவ்வாறே இருக்கின்றார்.

சுருதிஹாசன் நினைக்கும் காட்சிகளாகாக் கதையை நகர்த்துகின்றார்கள். சுவாரசியம் குறைவு.

தொழில்நுட்பங்கள் தரமாக இருந்தாலும், காட்சிகளில் தெளிவு இல்லை. பிரமாண்டம் என்பதற்காக சும்மா பூச்சுற்றியுள்ளார்கள்.

பிரபாஸ், முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துக்கொண்டு அடித்து நொருக்குகின்றார். அதேபோல் பிருதிவிராஜ் பயந்தவர் போல் நடித்து கடைசியில் சண்டையிடுகின்றார்.

சுருதிஹாசன்  ஏதோ வந்து புலம்புகின்றார்.

ஆகமொத்தம், “சலார்” கன்னதில் “பளார் ”என்று அறைந்ததுபோல் இருந்தது.

ஆனால், 270 கோடி  இந்தியப்பணத்தை முதலாகப்போட்டு, ஏறக்குறைய 715 கோடி இந்தியப்பணத்தைப் பெற்றதன் ஊடாக இந்தப்படம் வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றுள்ளது என்பதை ஒத்துக்கொண்டாலும், படம் எனக்குப் பிடிக்கவில்லை.

இயக்குனர்  பிரசாந்த் நீல் அடுத்த பாகத்தில் இன்னும் நன்றாக புரியும்படி காட்சிகளை அமைக்கட்டும்.

 


ஆ.கெ.கோகிலன்

30-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!