நன்றி கூறல்..!
நாம் நினைக்காத பல விடயங்கள் நம் வாழ்க்கையில் வந்து சென்றுவிடும்..! அப்படியான ஒரு வாழ்க்கை கடந்த 12 ஆண்டுகள் வந்து சென்றது..! குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அது போல் எனக்கும் சில விடயங்கள் அமைகின்றன..! கடந்த ஒரு வருடமாக பல விதமான மனக்குமுறல்களையும், சந்தோசங்களையும், சங்கடங்களையும் கடக்க வேண்டும் என்பதற்காக, இப்படியான Bloger பக்கங்களில் எழுதிவந்தேன்..! ஒரு வருடத்தில் 365 நாட்கள். லீப் வருடமென்றால் 366. இந்தவருடம் இதுவரை 365 விடயங்கள் தொடர்பாக எழுதிவிட்டேன். இன்று 366 ஆவதாக என்ன எழுத என்று யோசிக்கும் போது, இன்று நடந்த ”நன்றி கூறும்..” நிகழ்வு தான் எண்ணத்தில் வந்தது..! நான் எனது நன்றிகளை எமது ஊழியர்களுக்குத் தெரிவித்து, என்னில் இருக்கும் குறைகளைக் கேட்கும்போது அவர்கள் கூறிய விடயங்கள் பெரும்பாலும் நல்லதாகவே இருந்தன..! இருந்தாலும் சில விடயங்களில் இன்னும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து, இன்னும் சிறந்த நிர்வாகியாக வர ஆலோசனை வழங்கினார்கள். அதற்கு நன்றி கூறுவதுடன் அவற்றை இயன்றவரை கடைப்பிடிக்க முனைவேன...