மழையில் சிரமதானம்..!

 



நேற்று லீவு எடுத்து வீட்டில் சிரமதானம் செய்தேன். ஆனால் காலை 10.00மணிக்குப் பிறகு மழை வந்துவிட்டது..! அத்தோடு எல்லாம் சரி..!

இன்றும் அரச அதிபர் சொன்னதற்கு ஏற்ப அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுடன் சிரமதானம்  செய்தோம்.  நேற்றுப்போல் இன்றும் மதியத்திற்கு பின் ஒரே மழை தான்..!

நுளம்பைக்கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சி, பேருக்காகச் செய்தது போல் அமைந்துவிட்டது..! மாலை பெய்த மழையால் அலுவலக  வளவுகள் எங்கும் நீர் பரவிக்காணப்பட்டன..!

வருட இறுதி, வந்துவிட்டதால் பல வேலைகள் சேர்ந்து விட்டன. இன்று சம்பள நாள்.   அதனை முதலில் முடித்துவிட்டு, ஏனைய சில வேலைகளையும், வெளிப்  பல்கலைக்கழகம் ஒன்றுடன் தொடர்புபட்ட பிரமுகர் ஒருவருடன் சில கலந்துரையாடல்களையும், அவர்களின் கற்கை நெறிகளை மாணவர்களுக்கு காட்ட ஏற்பாடும் செய்து, அவரை மகிழ்வுடன் அனுப்பி வைத்தேன். அதன்பின்னர், மாலை பொறியியல் துறை இருக்கும் நிறுவனத்தலைவர்களுடனும், சிரேஷ்ட விரிவுரையாளர்களுடனும்  Google meet இல் கூட்டம் வைத்து பல விடயங்களைக் கலந்துரையாடி சில முடிவுகளை எடுக்கத் தீர்மானித்தோம்.

வழமையாக Zoom இல் வைப்பேன். இம்முறை அந்தச்செயலி, வேலைசெய்ய மறுத்ததால், Google meet இற்கு மாறவேண்டி ஏற்பட்டது.

மேலும் எமது நிறுவனத்தின் இன்னொரு பகுதிக்காணிக்குள் முன்பு தீர்மானித்த கட்டடத்தை அமைக்க மீண்டும் முயற்சி எடுத்தோம். அதற்கான Project Proposal இனை எமது நிறுவன பொறியல் துறை  மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை விரிவுரையாளர்கள் உதவியுடன் முடித்து, பணிப்பாளர் நாயகத்திற்கு அவரது பரிந்துரைக்காக அனுப்பினோம்.

அது மாத்திரமன்றி, ஆளுனருக்கு வழங்குவதற்கு ஏற்ப அடுத்து வரும் 10 வருடங்களுக்கான, எமது நிறுவன நடவடிக்கைகளுடன் இதனையும் இணைக்க, கணக்கியல் துறை மற்றும் ஆங்கிலத்துறை விரிவுரையாளர்களிடம் கோரிக்கை வைத்தேன்.

நிறுவனத்தை சரியான பாதைக்கு கொண்டுவர அனைவரின் உதவியும் வேண்டும். ஒன்று பட்டாலே உண்டு வாழ்வு..! இல்லை என்றால் முரண்பாட்டே நொந்து சாவு..!



ஆ.கெ.கோகிலன்

22-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!