ரத்தம்..!
சில நடிகர்களின் படங்களை மட்டுமே நம்பிப் பார்க்க முடியும்.
காரணம், வேறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள்..! அவ்வாறான நடிகர்களில், தற்போது
மூத்த மகளை இழந்த நடிகர் விஜய் அன்ரனியும் ஒருவர்..!
படம் தொடங்கும் போதே ஒரு கொலை நடக்கின்றது. அது ஏன் நடந்தது
என்பதை ஊடகங்களது சூழ்நிலைகளை வைத்து, கதை பின்னப்பட்டுள்ளது..! சில காட்சிகள் உண்மைக்கு
அருகாமையில் இல்லை என்றாலும் ஒரு வித்தியாசத்தைத் தருகின்றது.
இந்தப்படத்தின் மிகப்பெரிய வித்தியாசமே நாயகனும், நாயகியுமே
ஹீரோவாகவும் அன்ரிஹீரோவாகவும் நடித்துள்ளார்கள்..!
Data Server மற்றும் கணினி உதவியுடன் மனித நடத்தைக்கோலங்களை
வைத்து, அவர்களை அறியாமலே, மனித அம்புகளாக்கும் முயற்சியை ஒரு குழு, செய்கின்றது.
அதைக்கண்டறிவதே படத்தின் முக்கிய கதை. அந்தக்குழுவின் முக்கிய
உறுப்பினராக கதையின் நாயகியே இருக்கின்றார்..!
இன்னோர் ஒற்றுமை நாயகன், நாயகி இருவருக்கும் ஒரு பெண் பிள்ளையுண்டு.
Single Parent ஆக இருவரும் தமது பிள்ளையை வளர்க்கின்றார்கள்..!
உளவியல் ரீதியாக மனப்பாதிப்பு உடையவர்களைத் தேடுவதற்கு இணையத்தைப்
பயன்படுத்துவதும், அதிலிருந்து யாரை வைத்துக் காரியத்தை சாதிக்கலாம் எனத் திட்டம் போடுவதும்,
அதற்குக் கூலியாக எடுக்கப்படும் பெரும்தொகைப்பணம் எனத் தமிழ் சினிமாவில் பார்க்காத
வகையில் கதைசெல்வதே படத்தின் பலம்..! அதேபோல் சில காட்சிகளின் நம்பகத்தன்மைகள் கேள்விக்குறியாக
இருப்பது படத்தின் பலவீனமாகவும் பார்க்கலாம்.
மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா மற்றும் ரம்மியா நம்பீசன்
என மூன்று நாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இவர்களுடன் நிழல்கள் ரவியும் நடித்திருந்தார்.
தமிழ் படம், தமிழ் படம் 2 போன்ற நகைச்சுவைப் படங்களை இயக்கிய
C.S.அமுதன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இன்னும் திரைக்கதையைச் செதுக்கி, உயிரோட்டமாக எடுத்திருந்தால், நல்ல ஒரு படமாக
இருந்திருக்கும்.
இருந்தாலும் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக படம் இருந்தது..!
ஆரம்பத்தில் பிள்ளையோடு தனியாகத் தவிக்கும் இருவரும் சேருவார்கள் என நினைத்தால், ஒருவருக்கொருவர்
சவால் போட்டு, தமது திறமையை காட்ட நினைப்பதும், இறுதியில் நாயகன் வென்று, நாயகியைத்
தப்ப விடுவதுமாகக் கதை முடிகின்றது. சுருக்கமாக இருவரும் தமது பிள்ளையுடன் எதிரெதிர்
திசையில் பயணிக்கின்றார்கள்..!
ஆ.கெ.கோகிலன்
10-12-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக