மூச்சு வந்தது..!

 



சாதாரணமாக ஒரு வீட்டினுள் ஒருவரை அடைத்து வைத்தாலே மூச்சு முட்டும்போல இருக்கின்றது.

தனியாக ஒரு அறைக்குள் மாட்டி ஒரு நாள் இருந்தாலே சித்தம் கொஞ்சம் கலங்கிவிடும். அந்த அளவிற்கு மனிதன் ஒரு சமூக விலங்கு..!  பலருடன் தொடர்பு கொள்ள வேண்டும். பார்க்க வேண்டும். பழக வேண்டும்.



அண்மையில் இந்தியாவிலுள்ள உத்தரகாண்டிலுள்ள ஒரு சுரங்கத்தில், கடும் மழைப்பொழிவாலும், மண்சரிவாலும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் 41 சுரங்கத்தொழிலாளர்கள் மாட்டியிருந்தார்கள்..!  அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும், அவர்களை நலமாக வைத்திருக்கவும் இந்தியாவே அக்கறையோடு இருந்தது. இன்று விடுவிக்கப்படலாம், நாளை மீட்கப்படலாம் என 17 நாட்கள் சுரங்கத்தினுள் அகப்பட்டு இருந்தார்கள்.

சுரங்கத்திற்குள்ளும் பல பேர் இருந்தார்கள்.  வெளியிலும் பல பேர் இருந்தார்கள். மீட்புப் பணிகளிலும் நிறைய மனிதர்களும், தொழில்நுட்ப மற்றும் பொறிமுறைக்கருவிகளும் பயன்பட்டன.

பல வழிகளில் முயன்றும் தடைகள் வர வர மக்களின் நம்பிக்கைகளும் தளர்ந்து வந்தன..!

வெளியே இருக்கும் நாம், உள்ளே  மாட்டியிருக்கும் அவர்கள் எவ்வாறு தத்தளிப்பார்கள் என்று எண்ணும் போதே நெஞ்சு பதபதக்கின்றது..!



அதே நேரம் பல வழிகளில் அவர்களை மீட்கப் பல நாடுகளில் இருந்தும் நிபுணர்கள் வரழைக்கப்பட்டார்கள்..!

என்ன செய்தாலும் வெற்றி கிடைக்க ஒரு நேரம் வரவேண்டும்..! வந்தது அந்த நேரம்..! இன்று ஒரு பெரிய நீண்ட துளைக்குழாயின் ஊடாக உள்ளிருந்தவர்களுடன் தொடுப்பை ஏற்படுத்தி, ஒவ்வொருவராக 41 பேரும் எந்த உயிரிழப்பும் இன்றி மீட்கப்பட்டார்கள். இந்த மகிழ்வான செய்தியால், இந்தியாவே மூச்சு விட்டது. அயல்நாட்டில் இருக்கும் எனக்கும் கூட மூச்சு வந்தது. அவ்வளவு அழுத்தமாக அந்தக்காட்சிகளை பார்க்கும் போது மனதில் இருக்கும்.



மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நாமும் நன்றி பாராட்டுவோம். அவர்களுக்கும், மீட்கப்பட்டவர்களுக்கும், இறைவனினதும், இயற்கையினதும் ஆசி கிடைக்க வேண்டுவோம்.

 


ஆ.கே.கோகிலன்

29-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!