புரிந்துணர்வு இடமாற்றம்..!
சில நாட்களுக்கு முன், பணிப்பாளர் ஒன்றியச் செயற்குழுக் கூட்டம்
நடந்தது.
அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனை பணிப்பாளர் நாயகத்திற்கு
தெரிவிப்பது என்பது முடிவு.
அந்தக்கூட்டத்தில், ஒன்றியத்திற்கான அங்கத்துவப்பணத்தை அநேகமானோர் வழங்கவில்லை. நான் அது தவறு என்றும்,
எல்லோரும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
அது தொடர்பான எனது பங்களிப்பை, ஒன்றிய தலைவருக்கும், பொருளாளருக்கும்
அனுப்பி வைத்தேன்.
அதன் பிறகு, செயலாளர்
பணிப்பாளர் ஒன்றியக்கூட்டத்தை இன்று சனிக்கிழமை இரவு 8.00மணிக்கு கூட்டியிருந்தார்.
அதில் பணிப்பாளர்கள் இடமாற்றம் கவனத்தில் கொள்ளப்பட்டது. அந்தக்கூட்டத்திற்கு 6பேர் மாத்திரமே கலந்துகொண்டார்கள்.
ஏனைய பணிப்பாளர்கள் காரணங்கள் சொல்லித் தப்பித்துவிட்டார்கள்.
இறுதியாக அந்தக்கூட்டம் எனது நிலைப்பாட்டை அறிவதற்கானது என்பது புரிந்தது..! வழமையாக
நான் கதைக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன், இன்று அதிகம் கதைக்கவேண்டி வந்துவிட்டது.
குறிப்பாக எனது 6 வருடங்களை யாழ்ப்பாணத்தில்
நிறைவு செய்ததால், இனிப்பணிப்பாளர் நாயகம் எங்கு போகப் பணித்தாலும் செல்லத் தயாராகவே
இருக்கின்றேன்.
திருகோணமலைக்கு ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் சென்றால்
நல்லது எனப்பலர் கருத்துத் தெரிவித்தார்கள்..! நான் தற்போது பணிப்பாளர் தரம் 1 இல்
இருக்கின்றேன். அதற்குத் தரம் 2 போதும்.
நிறுவனங்களுக்கு தரம் இல்லை என்றால், அதனை நான் ஏற்றுக்கொள்ள
முடியும். இல்லை என்றால் அது எனது சேவைக்கு இழுக்கானதாக அமையும். அத்துடன், எனது தகுதியை
குறைத்துக்கொண்டதாகவும் அமையும். அப்போது,
தரம் 1 இலுள்ள ஏதாவது நிறுவனத்தை தரும்படியும், இல்லை என்றால் தலைமையகத்தில் உள்ள ஒரு
பணிப்பாளர் பொறுப்பைத் தரும்படியும் கேட்டேன். மேலும் பரீட்சைப் பணிப்பாளர் பதவி வேண்டுமா
என ஒருவர் கேட்டார். நான் அதைக்கோரவில்லை. ஆனால் தகுதியான பதவி தந்தால் ஏற்பேன் என்றேன்.
அத்துடன், வழமைபோல் ஒன்றியத்திலுள்ள குறைபாடுகளையும், அறிவு,
உடல் மற்றும் நிதிப் பங்களிப்புக்கள் செய்வதில் கவனம் செலுத்தாத பணிப்பாளர்கள், தமது
நிலைப்பாட்டை மாற்றி, நிறுவனத்திற்கு பயன்தரக்கூடிய விதிகளை உருவாக்க வேண்டிக்கொண்டேன்.
நாம் எமக்கு ஏற்றது போல் விதிகளை வளைக்கவோ அல்லது மீறவோ கூடாது. அது நிறுவனத்திற்கும்
எதிர்கால எமது ஊழியர்களுக்கும் நன்மை பயக்காது.
ஆகவே அனைவரும் சரியான விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதற்காக
பொருத்தமான பணிப்பாளர் இடமாற்றத் திட்டத்தை வைக்க முன்வைக்க வேண்டும். அதனூடாக மற்றவர்களுடைய
ஆலோசனைகளையும் கேட்டு, அதனை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் கடந்த செயற்குழு கூட்ட அறிக்கையும் எல்லா அங்கத்தவர்களுக்கும் தெரியப்படுத்த
வேண்டும்.
கோரம் இல்லாவிட்டாலும் கூட்டம் ஒருவாறு கூகுள்மீற்றூடாக நடந்து
முடிந்தது..!
திருகோணமலைக்கு இருமுறை பணிப்பாளராகப் போக முயன்றும், அங்குள்ள
பதில் பணிப்பாளர், தான் தொடர்ந்து இருக்க விரும்பியதால், அந்நேரம் அவர் சொந்த இடம்
வரமுடியாமல் போய்விட்டது. அதுமாத்திரமன்றி, தனது பட்டப்பின்படிப்பு முடியும் வரை அங்கே இருந்து, சிரேஷ்ட விரிவுரையாளராகவும் வந்து, மேலும் மூன்றுவருட
சேவையை நிறைவேற்றும் வரை நீடிக்க விட்டது யார்..?
6 வருட கட்டாய சேவைசெய்ய நிபந்தனையுடன் கொடுக்கப்பட்ட நியமனத்தை பெற்றவர் அவர்..!
அதுமாத்திரமன்றி, பழைய எனது இடமாற்றத்திற்கு அவரை இடமாற்றும் படி நான் யாரையும் கோரவில்லை..!
இவை எல்லாம் தலைமையக முடிவுகளே..! ஆனால் இருமுறை நான் அவருக்கு உதவவும், யாழ்ப்பாணத்தை
விட்டு, திருகோணமலைக்குப் பணிப்பாளராக வர முயற்சித்துள்ளேன்.
ஆனால் மேலிடம் அதை நடைமுறைப்படுத்த எனக்கு அனுமதியளிக்கவில்லை.
இந்த நிலையில் எனது 6 வருடகால நிறைவு வந்துவிட்டது..! இனி, எங்கு நான் போகவேண்டும் என்பதை பணிப்பாளர் நாயகம்
தீர்மானிக்க வேண்டும்.
மேலும் நான் திரும்பவும் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்று யாரிடமும் கோரவில்லை. நடப்பதை ஏற்பதே எனது
எண்ணம்..! செய்வதை என்னால் இயன்றவரை சரியாகச் செய்ய வேண்டும். இது தான் எனது நோக்கம்.
அதற்கு இறைவனும் இயற்கையும் துணையாக இருக்க வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
25-11-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக