ஓடாத கடிகாரங்கள்..!

 


காலை சற்று வேளைக்கே விழித்துவிட்டேன்..! பல யோசனைகள் வந்தன..! இடமாற்றம் பெற்று செல்லும்போது, எப்படி நடக்க வேண்டும்..? எங்கு இருக்க வேண்டும்..? தொடர்புகளை எப்படிப் பேணவேண்டும் ..? எனப்பலவாறாக மனம் ஓடிக்கொண்டிருந்தது..! கண்மூட முடியாமல் புரண்டு புரண்டு படுத்தேன். நேற்று இரவு பார்த்த ”இறுகப்பற்று..” படத்தின் சில காட்சிகளும் நினைவுக்கு வந்தன..!

இன்று திருவெம்பாவைக்கடைசிப் பூஜை. மனைவியின் தலையில் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரே தர்ப்பைபோட வேண்டும். நான் வழமையாக அவ்வாறான விடயங்களுக்கு முன்நிற்பதில்லை. வேலைப்பளுவால் அதனை நினைத்தும் பார்ப்பதும் இல்லை. பாவம், மனைவி எல்லாவற்றிற்கும் தனியாகவே போராட வேண்டியிருக்கின்றது. வருகின்ற கிழமை இடமாற்றம் பெற்று தூர இடம் போனால், இன்னும் சிரமப்படவேண்டிய சூழல் இருக்கும். ஆகவே கிட்ட இருக்கும் சந்தர்ப்பங்களிலாவது, அவருக்கு உதவ முடிவு செய்தேன். வேலைக்கு முதலில் குறுகிய லீவு சொல்லிப் பின்னர், கால தாமதமாக, அரைநாள் லீவு சொன்னேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது ஊர் கோவிலுக்குப் போனதில் திருப்தி..! அதைவிட மனைவி மற்றும் மாமியாருக்கு உதவியது திருப்தி..! இன்று காலை ஏறக்குறைய ஒரு ட்ரைவராகவே மாறிவிட்டேன்..!

பின்னர், காலை உணவை மதியத்திற்கு கிட்ட முடித்துக்கொண்டு அலுவலகம் ஓடினேன். அங்கு ஒரு வித அமைதி நிலவியது. சிலருடன் எனது இடமாற்ற முடிவைப்பற்றிக் கதைத்துவிட்டு, யார் வந்தாலென்ன..? போனால் என்ன..? நிறுவனம் தனது வளர்ச்சியை அடைய அனைவரும் ஒத்துழைப்புக்கொடுக்க வேண்டிக்கொண்டு, நிறைய வேலைகள் காத்திருந்தன..! அவற்றையும் முடித்துக்கொண்டு, உடம்பு ஒருமாதிரியாகவும், மூக்கால் நீர் ஒழுகிக்கொண்டும் இருந்ததால், ஒரு கட்டத்தின் மேல் அலுவலகத்தில் இருக்க முடியவில்லை.

அபசகுனங்கள் பல விதங்களில் வெளிப்படும்..! கிறிஸ்மஷ்  அன்று சுவர் மணிக்கூடும், மேசை மணிக்கூடும் வேலைசெய்யவில்லை..! பற்றரி மாற்றிப்  பார்த்தேன், பயனில்லை. இறுதியாக, ஒரு கடிகார திருத்துனரை அனுகிப் பார்ப்போம்..!  எனமுடிவெடுத்து, அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தேன். கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றார்கள். நானும் “நாளை எடுக்கின்றேன்..” எனச்சொன்னேன்.

இன்று, அந்த நாள் வந்துவிட்டது. சொன்னது போல் திருத்தி வைத்திருந்தார்கள்..! Service மாத்திரம் தான் செய்தது என்றும், இரண்டிற்கும் ரூபா.700 ஐ வாங்கிவிட்டு, தந்தார்கள்.  மணிக்கூடுகள் தற்போது வேலைசெய்கின்றதன..!

மணிக்கூடு வேலைசெய்யாத சமயத்திலே இடமாற்றக்கோரிக்கை வந்தது..! இன்று கடிகாரம் வேலை செய்கின்றது..! இயற்கை என்ன சொல்லக் காத்திருக்கின்றது எனப்பார்ப்போம்..?

 

ஆ.கே.கோகிலன்

27-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!