இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பயனுள்ள நாள்..!

படம்
  இன்று அரசு லீவு அறிவுக்கும் என்று பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அரசு அறிவிக்கவில்லை. வங்கிகளும், சில நிறுவனங்களும், முஸ்லீம் பாடசாலைகளும் மாத்திரம் லீவை அறிவித்தன.   எல்லா அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமைபோல் இயங்கின. லீவை எதிர்பார்த்தவர்கள் நொந்து, கவலைப்பட்டார்கள். தற்போது நாடு இருக்கும் நிலையில் நாம் உழைக்கும் நேரம் இருமடங்கு ஆகினால் தான் ஓரளவிற்கு நிறைவாக இருக்க முடியும். இல்லை என்றால் எமக்கும் கஷ்டம்..! நாட்டுக்கும் கஷ்டம் தான்..! பல திட்டங்களோடு இருந்த எனக்கு, இன்றைய நாள் நிறைவாக முடியுமா என்ற தயக்கம் நேற்றிரவுவரை இருந்தது. அரசை நம்ப முடியாது..! ஆனால்   இன்றைய அரசின் முடிவு, மகிழ்ச்சியைக் கொடுத்தது. நினைத்தனைச் செய்துமுடிக்க வாய்ப்பு அமைந்தது. கொரோனாவின் பின்னர் வழி தெரியாமல் தவித்த சூழலில் நிறுவன வருமானத்திற்கு   தேவையான சில தீர்க்கமான முடிவுகளை அவைதொடர்பான குழுக்களின் சிபாரிசுகளுடன் தெரிவிக்க முடிந்தது. வெயிலுடன் சேர்ந்து நாட்டுச் சூழல் வாட்டினாலும், சில கடுமையான முடிவுகளை எடுத்தேயாக வேண்டும். அத்துடன் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிர...

மகிழ்ச்சி நகர்ந்தது..!

படம்
    கடந்த ஒரு மாதத்திற்குள், நடந்த விடயங்கள் 3 வருடங்களுக்கு முன்னர் நடந்திருக்க வேண்டியவை. ஆனால் காலம் செய்த கோலம், இயற்கை என்னை இவ்வளவு நாட்கள் தண்டித்தது..!  என்று இயற்கை மன்னித்ததோ, அன்றே தடைப்பட்ட அனைத்தும் தங்குதடையின்றி நடந்தேறியது..! இப்படியான உணர்வுகள் பொதுவாக மக்களுக்கு வருகின்றதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனது வாழ்க்கையில் இயற்கை விளையாடுவதை பல முறை நான் அவதானித்துள்ளேன்..! இந்த அவசர காலத்தில் இயற்கையின் போக்கை அவதானிக்க யாருக்கு நேரம் இருக்கின்றது..? ஆனால் நான் அதற்கு சிறு நேரமாவது ஒதுக்கி அவதானிக்கின்றேன். இயற்கையின் அனுக்கிரகத்தால், சூழலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்.   எனது வாழ்க்கையில் வந்த சூழல்களும், அதில் இருந்து கிடைத்த பாடங்களும், தற்போது மீதமுள்ள எனது வாழ்க்கைக்கான வழிகாட்டிகள்..! இன்று அரச லீவு நாள். முஸ்லீம் மக்களின் ஹஜ்ஜூப் பெருநாள் (பக்ரீத் பண்டிகை). ஆனால் இரண்டு, முக்கிய உறவினர்களின் நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டிய சூழல். ஒருவாறு, ஒரு பகுதி உறவினரைச் சமாளித்து, இன்று என்னால் வரமுடியாது என்பதை முற்கூட்டியே தெ...

சாட்டிக்கடற்கரை

படம்
    கொஞ்சக்காலம் வேலை வேலை என்று ஓடியதால் உறவுகள் சற்று தொலைவாகப் போய்விட்டன..! இனி ஓய்வை நெருங்கும் சமயம் உறவுகள் இல்லை என்றால் வாழ்வே வெறுமையாகத் தோன்றும். எப்பேர்பட்டாலும், உறவுகளின் தொடர்புகளைப் பலப்படுத்துவது எமது கடமைகளில் ஒன்று என்பதை மிகத்தாமதமாகவே புரிந்துகொண்டுள்ளேன்.  இனி, தவறுகள் விடமுடியாது. புரியாது தவறுகள் செய்தால் மன்னிக்கலாம். புரிந்தும் தவறுகள்   செய்தால் அவர்களை மன்னிப்பதில் அர்த்தமில்லை. இது மற்றவர்களுக்கானது மாத்திரம் அல்ல. எனக்கானதும் கூட. ஆகவே தவறுகள் விடாமல் நடக்க என்னால் இயன்றளவு முயற்சிக்க வேண்டும். அந்தவகையில், திருகோணமலையில் என்னைப் பார்த்த உறவுகளுக்காக, இன்றைய நாளினை செலவிட்டேன். அந்தியேட்டிக்கடமைகள் அவர்கள் செய்ய நானும் கூட இருந்து,   என்னால் இயன்ற உதவிகளைச் செய்தேன். இதற்காக   வழமையாக அலுவலகம் போகும் நேரத்தில்   சாட்டி வெள்ளைக்கடற்கரைக்குச் சென்றேன். அங்கே உறவினர் வந்திருந்தினர். அவர்களுடன் சம்பிரதாயக்கடமைகளை முடித்து, கடற்கரையில் நல்லதோர் குளியலைப் போட்டு, வயிறுநிரம்ப உணவுகளை அடைத்துத் திரும்பும்போது அலுவலகம் ம...

புரியாத முதியோர்..!

படம்
  அறிவியல் வளர்ந்த இன்றைய காலத்தில், ஒரு குடும்பத்தை வழிநடத்துவது என்பது இலேசுப்பட்ட காரியமில்லை..! குறிப்பாக சூடு மற்றும் சொரனை இருக்கவே கூடாது..! அப்படியே இருந்தாலும், வாய் பேசமுடியாத, கண் தெரியாத, காது கேளாத மாதிரி இருந்தால் மாத்திரமே இந்த உறவுகளின் செயற்பாடுகளிலும்,வார்த்தைகளிலும் இருந்து சேதாரமில்லாமல் தப்பமுடியும்..! திருமணம் செய்த ஆரம்பத்தில் எனக்கும்,   மனைவிக்குமான புரிதல்கள் மிகவும் குறைவு தான்..! இதனால்    சத்தங்களும், சண்டைகளும் அதிகம் வரும்..!   போகப்போக பிள்ளைகள் வர, சண்டைகளால் சாதிக்காததை மௌனத்தால் சாதிக்க முடிந்தது..! அதன்பிறகு, அந்த நுட்பத்தை இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றேன். ஒருவரின் செயற்பாடு பிடிக்கவில்லை என்றால், அவரிடம் அதைப்பற்றி ஒன்றுமே சொல்வதற்கு இல்லை. மாறாக அவரை ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை. உறவு என்றால் கூட அவரைப்பற்றி ஒன்றும் நினைப்பதில்லை. கண்டாலும்,   அவருக்கு எந்தக்காயமும் ஏற்படாத வகையில் எனது செயற்பாடு இருக்கும். காலப்போக்கில், அவருக்கு என்னிடம் கதைக்க விருப்பம் வந்தாலும், நான் அதைப்பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை. ...

டடா (அப்பா)

படம்
    கடந்த சில வாரங்களாக திரைப்படங்கள் பார்க்கும் எண்ணம் வராத அளவிற்கு வேலைகள் இருந்தன. படம் பார்க்க முதல், அதனை ரசிப்பதற்கான ஒரு மனநிலை உடலில் வந்தால் தான், படத்தை ரசிக்க முடியும். இல்லையாயின் ஒரு நல்ல படமும் கெட்டதாகத் தெரியும். மாறியும் நடக்க வாய்ப்புண்டு..!   அவசரக்காதலும், அதனால் ஏற்படும் கர்ப்பமும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்ன   காதலனும், அதனைச் செய்ய மறுத்து, பிள்ளையைப் பெற்றெடுக்க முனைந்த காதலியும், பின்னர் சூழல் மாறியதால், காதலனே பிள்ளையை வளர்க்க வேண்டிய நிலையும், காதலி வேறோர் மனநிலைக்கு சென்ற நிலையில், எல்லோரையும் ஒன்று சேர்த்து தாய்மையின்    உண்மையை உணரவைத்த படம். மிகவும் சிறப்பான கதையம்சம் கொண்ட படத்தை, திரைக்கதையில் இன்னும் சிறப்பாகக்காட்டி பல இடங்களில் கண்ணீரையும், கைதட்டலையும் கொண்டுவந்தது இயக்குனரின் சிறப்பு.   நாயகனாக நடித்த பிக்போஸ் கவின் இந்தப்படம் மூலம் தானும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வருவதற்கான முழுத்தகுதியும் இருக்கின்றது என்பதை சிறந்த இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்..! நாயகியாக நடித்திருக்க...

மாறிய முடிவு..!

படம்
    சிலர் தமது வாழ்நாளில் பல நன்மைகளைச் செய்து மக்களின் மனங்களில் இடம்பெறுவார்கள். அப்படி மக்களின் மனங்களில் இடம் பெற்ற ஒரு ஆங்கில ஆசானின் மகன் எமது நிறுவனத்தில் வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்..! மிகவும் மென்மையான இயல்புகள் கொண்ட அவர் பழக மிக இனிமையானவர்..! அவரும் ஆங்கிலத்துறையில் சிறப்பு மிக்கவர். என்னைவிட அவருக்கு ஒரு 10 வயது கூட இருக்கலாம். அவருக்கு இரண்டு  வளர்ந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவரும், பார்க்க பழக மென்மையானவராக இருந்தாலும் கடும் முயற்சியாளர். மற்றும் விவசாயி..! அண்மையில் நடந்த எனது மகளின் சாமத்திய வீட்டுக்குக்கூட வந்திருந்தார். மக்களை மதிப்பவர். எனது வீட்டு விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தால் நிச்சயம் தவறாது சமூகமளிப்பவர். அவர், தனது தந்தையாரின் 100ஆவது ஆண்டையொட்டி ஒரு விழா செய்யப்போவதாகவும், என்னையும் சிறு உரையாற்றும்படியும் வேண்டியிருந்தார். முதலில் ஓம் என்று சொல்லிவிட்டேன். அதற்கேற்ப திட்டமிட, சில மாற்றங்கள் நடந்துவிட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் அறிஞர்களுடன் என்னை அழைத்தவர், தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அறிஞ...

ஏட்டுச் சுரக்காய்..!

படம்
    பொதுவாக வியாழக்கிழமை என்றால் எனக்கு சோதனை அதிகமாக இருக்கும். காலை அலுவலகம் போனதுமே சோதனை காத்திருந்தது..! இரு நாட்களுக்கு முன்னர் விசேட ஊழியர் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு மாறான ஒரு நிலைப்பாட்டில் ஒரு ஊழியர் இருந்தார். உண்மையில் அன்றைய தினம் அவர் சமூகமளிக்கவில்லை. இருந்தாலும், அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் அது நடைபெறவில்லை. நேற்று அவரையே எனக்கான பதில் கடமையை ஆற்றக்கோரியிருந்த வேளை, அதனை ஏற்றவர் தனது நிலைப்பாட்டைச் செய்யத் தயங்கிவிட்டார். இன்று நான் வந்ததும், அதனை ஒரு முக்கிய விடயமாகத் தெரிவித்தார். அதனைத் தீர்க்க நானும் முயன்றேன். எதிர்பார்த்த முடிவு  அமையவில்லை. அடுத்த கூட்டத்தில்  அதனைப்பற்றி அலசுவோம் என்று சொல்லிவிட்டு அடுத்த விடயத்திற்குப் போய்விட்டேன். ஒரு நாள் லீவு எடுத்தால் வேலைகள் மடங்காகிவிடும். அதனால் லீவு எடுப்பதை இயன்றவரை தவிர்க்க விரும்புவேன். இருந்தாலும் சில சூழல்களில் எடுத்தேயாக வேண்டியநிலை ஏற்படும்.   நாளையும் முக்கிய ஒரு குடும்பத்தேவைக்காக லீவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, நிம்மதியுடன் இருக்க, இரண்டாவது மகளிடம் இருந்து வந்த அழைப்பு அனைத்த...

காலவேகம்..!

படம்
  எனக்கு சொந்தத் தம்பிகள் தவிர, உறவு முறையில் பல தம்பிகள் இருக்கின்றார்கள்..! அவர்களில் பலரின் தொடர்புகள் சுத்தமாக இல்லை. குறிப்பாக அவர்களில் அதிகமானோர் இலங்கையில் இல்லை. திருகோணமலையில் கூட ஒரு தப்பி இருந்தார். அவர் திருமணம் முடித்து, தற்போது யாழ்ப்பாணத்தில் தான் இருக்கின்றார். அவரை வீட்டுக்கு அழைத்து ஒரு விருந்துகொடுக்க நினைத்தேன். காலச்சூழல் தாமதமாகிவிட்டது. அண்மையில் மகளின் சாமத்தியவீட்டுக்கு காட் கொடுக்கப் போக தீர்மானித்த நேரத்தில் அவரது சின்னம்மா மரணித்ததால், எல்லாம் தகர்ந்தது. தற்போது சாமத்தியவீடு முடிந்ததால் நேற்று அவரின் தாயாரைப் பார்த்துவிட்டு வந்தேன். இன்று அவரின் உதவியுடன், ஒருவேளை உணவை வழங்கத் திட்டமிட்டு அவரிடம், அந்தப்பொறுப்பை ஒப்படைத்தேன்.   அப்போது தான், அவரது வீட்டுக்குச் சென்றேன். ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த திருமணநிகழ்வுக்கு பொது மண்டபத்திற்குப் போன பின்னர் இன்று மாலை தான், வீட்டுக்குப்போனேன். ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது. தம்பிக்கு ஒரு அழகான மகள் பிறந்து ஏழு மாதமுமாகிவிட்டது..! ஆனால் அதுபற்றி நான் அறியவோ அல்லது அவனாவது   சொல்லவோ...

கல்வியா அல்லது காலமா..?

படம்
    எமது பிரதேசம் பல காலமாக முகங்கொடுத்த உள்நாட்டுப்போர் மற்றும் பேரினவாதத்தடைச்சட்டங்கள் மற்றும் பொருளாதார தேடல்கள் அல்லது ஆசைகள் என்பவற்றால் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது..! பொருளாதாரம் தற்போது எல்லா மட்ட சமூகங்களுக்கும் கிடைக்கின்றது..!  கல்வியில் பலமான போட்டிகள் இலங்கை எங்கும் இருக்கின்றன..! கீழே மிதிக்கப்பட்ட சமூகங்கள் மேலே வர கல்வியையும் பொருளாதாரத்தையும் பெற மிகக்கடினமாக உழைக்கின்றார்கள்..! இந்த உழைப்பின் விளைவுகளை பார்க்கும்போது உயர்நிலைகளில் இருந்தவர்கள் நாட்டைவிட்டே போய்விட்டார்களா அல்லது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிவிட்டார்களா அல்லது போதிய உழைப்பைப்போட மறுக்கின்றார்களா அல்லது தயங்குகின்றார்களா அல்லது காலம் அவ்வாறான எண்ணம் கொண்டவர்களுக்கு சாதகமாக இல்லையா என்பது புரியவில்லை. தற்போது கீழ் நிலையில் உள்ளவர்கள் உயர்பதவிகள் பலவற்றைப் பிடித்துள்ளார்கள்..!  இதற்கு யாரும் அரசியல் பலமன்றோ அல்லது செல்வாக்கு என்றோ சொல்லிவிடமுடியாது. கல்வி, உழைப்பு, காலம் எல்லாம் ஒரு புள்ளியில் சாதகமாக அமைவதாலேயே இது நிகழ்ந்துள்ளது..! காலம் தொடர்ந்து மாறும். ஒவ்வொரு...

பிராரப்தம் (பிரார்த்தம்)..!

படம்
  மகளின் சாமத்தியவீட்டுக்கான கடமைகளால், அந்தச்சமயத்தில் நிகழ்ந்த பல உறவுகளின் மரணச்சடங்குகளில் பங்குபற்ற முடியவில்லை. என்னைவிட வயது மூத்தவர்கள்,   ஒரு நல்ல காரியத்திற்கு நாள் குறித்தால், அதன் பிறகு வரும் துக்க நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டினார்கள். நான் முன்பு இவற்றைப் பெரிய அளவில் கடைப்பிடிப்பது இல்லை. ஆனால், கடந்த காலத் தடங்கல் அனுபவம், அதனை ஏற்கச்செய்துவிட்டது..! வேறுவழியின்றி மரணச்சடங்குகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டேன். இப்போது சாமத்திய வீடு முடிந்துவிட்டது. அதன்பிறகு அலுவலகப் பணி காரணமாக கொழும்பு சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டதால், மரணவீடுகளுக்குப் போகமுடியவில்லை. இறுதியாக இன்று வேலைக்கு லீவு போட்டுத்தான் இருமரண வீடுகளுக்குப்போனேன். அதில் ஒன்று, எனது வீட்டுக்கு மிக அருகாமையில் இருக்கின்றது. இன்று அந்த வீட்டில் அந்தியேட்டி நடைபெற்றது. அவர்களுக்கு கீரிமலைக்கடமைகள் செய்ய அதிகாலை 5.00 மணிக்கே சென்று உதவியது மனதிற்கு சிறு மகிழ்ச்சி. காலை 9.00 மணிக்குள், அந்த வேலை முடிந்ததால், அடுத்த செத்தவீடு நடந்த இடமான தீவுப்பகுதியிலுள்ள சரவணைக்குச்சென்றேன்.   அந்த...

வருகைதரு விரிவுரையாளரின் வருத்தம்..!

படம்
    அண்மையில் நடந்துமுடிந்த எனது மகளின் சாமத்தியவீட்டிற்கு, உறவினர்கள் வந்தார்களோ இல்லையோ எனது அலுவலகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வந்திருந்தார்கள். நிரந்தர ஊழியர்கள் மாத்திரமன்றி, ஏனைய தற்காலிக மற்றும் வருகைதரு விரிவுரையாளர்களும் வந்திருந்தார்கள். வழமையாகக் கல்விசார் ஊழியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் வருகைதரு விரிவுரையாளர்கள் என்ற வகையில் மூன்று வரவேற்பு அட்டைகளே வைப்பது வழக்கம். மூத்த மகளிற்கு அவ்வாறே நானும் வரவேற்பு அட்டைகளை வைத்தேன். இம்முறை ஏற்கனவே அதிகம் வரவேற்பு அட்டைகள் தயாரித்த படியால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வரவேற்பு அட்டைகள் கொடுக்க விரும்பினேன்.   இன்னொரு காரணமும் உண்டு. அது, எனக்கு   எல்லோரும் தனியாக ஒரு காட் தருவது வழமை. ஆகவே நானும் அவ்வாறே திருப்பிச்செய்ய வேண்டும் என்றும் விரும்பினேன். அவ்வாறே செய்தும் முடித்தேன். எமது நிறுவனம் ஏழு நாளும் இயங்கும். ஆனால் என்னால் 5 நாட்களே போகமுடியும். வார இறுதிநாட்களில் நான் போவது மிகக்குறைவு. ஏதாவது முக்கிய விழாக்கள் என்றால் தவிர்க்க முடியாது என்பதற்காகச் செல்வேன். சும்மா சாதாரண நாட்களில் செல்வத...

விசேட கூட்டம்..!

படம்
    அண்மையில் எமது தலைமையகத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அன்பாகப்பேசக்கூடியவர். முதலில் ஒன்லைன் ஜூம் செயலியூடாக ஒரு அறிமுகக்கூட்டத்தையும், பின்னர் அனைவரையும் கொழும்புக்கு அழைத்து, பௌதீகரீதியில் ஒரு கூட்டத்தையும் சிறப்பாக நடாத்தினார். குறைவான நேரத்தில் பல விடயங்களைத் தீர்ப்பதற்கு அதிக உப அமைப்புக்களை உருவாக்கி, அதன் ஊடாகத் தீர்மானம் எடுக்கும் வேலைகளை இலகுபடுத்த திட்டமிட்டார். அதனையே எம்மையும் பின்பற்ற அறிவுறுத்தினார்.   அவரும் பல உபகுழுக்களை அமைத்துள்ளார். எனது நிறுவனத்திலும் பல குழுக்கள் ஒவ்வொரு வருடமும் நியமிக்கப்படுவது வழமை. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவது குறைவு. சில குழுக்கள், ஒரு காரியங்களும் ஆற்றாமலே   அவற்றின் காலம் கடந்து, புதிய குழுவும் உருவாகிவிடும். இந்த நிலையில் நான் சில குழுக்களை தூண்டி அவற்றினூடாக சில பிரச்சனைகளுக்கான பரிந்துரைகளை வரிசைப்படுத்தச்சொன்னேன். அதனடிப்படையில், இன்றைய விசேட ஒருங்கிணைந்த திட்டமிடல் செயற்பாட்டினை 5 வருடங்களுக்கு மேற்கொள்ளும் முயற்சியில் ஒரு புதிய குழுவை நியமித்ததுடன், அக்குழுவுக்குத்த...

காட்சி எண்ணம்..!

படம்
    அண்மைநாள்களில், குளிர் சாதனப் பெட்டிக்குள் இருந்த கேக், பலகாரங்கள், வாழைப்பழங்கள், குளிர்வித்த தண்ணீர் போன்றவற்றை அதிகம் எடுத்ததோ என்னவோ தெரியவில்லை கால் பிரச்சனை மீண்டும் வந்துவிட்டது போன்ற எண்ணம் இன்று திரும்ப ஏற்பட்டுவிட்டது..! காலும் அதிகம் விறைத்து இருந்தது. வழமையாக நடப்பதுபோல் நடக்க சற்று சிரமமாக இருந்தது. இது உண்மையில் நிகழ்ந்ததா..? அல்லது கற்பனையா..? என்றுகூடத்தோன்றியது. இன்று காலை கூடப்பிசியோதெரபி செய்தேன். முந்தையநாள் இரவு கொழும்பில் இருந்து வரும்போது, ஒரு வயதான தாயாரை ஒரு இளம் மகள் கூட்டி வந்தார். ஓட்டோவில் இருந்து இறந்து பஸ்ஸில் ஏற அந்தத் தாயார் மிகுந்த சிரமப்பட்டார். அங்கிருந்த பலர் அந்தக்காட்சியைப் பார்த்தோம். இளம் மகள் தாயாரை வார்த்தைகளால் ஊக்கப்படுத்தி நடக்க வைக்க முயற்சித்தாள். ஆனால் அவரால் முடியவில்லை. அவரது முகத்தில் அழுகையும் சிரிப்பும் ஒன்றாக இருப்பதாகத் தோன்றியது. பார்வையாளர்களில் 60 வயது மதிக்கத்தக்க ஆரோக்கியமான உடல்வாகுகொண்ட பெண் ஒருவர் ஓடிச்சென்று அந்த அம்மாவிற்கு உதவினார். முதுகைத் தட்டிக்கொடுத்து மெல்ல மெல்லமாக பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அந்தக்...

பொசுக்கிய மாலைக் குளியல்..!

படம்
  கொழும்பில்   தலைமை அலுவலகக் கூட்டத்திற்காக யாழில் இருந்து கொழும்புக்கு குளிர்சாதன வசதியுள்ள ஒரு பஸ்ஸில் இன்று காலை வந்தேன். வழமைபோல் தம்பி வீட்டில் காலைக்கடனை முடித்து வெளியேற முன்னர் இன்று தம்பியும், அவரது அலுவலக தேவைக்காக வெளிநாடு ஒன்றிற்கு புறப்பட்டார். சிறிது நேரம் கழித்து நானும் வெளிக்கிட்டேன். காலை உணவை ஒரு கடையில் எடுத்துக்கொண்டு, அரை மணிக்கு மேல் காத்திருந்து, பஸ்ஸைப்பிடித்து, அதிலும் நீண்ட நேர காத்திருப்பின் பின்னர் அலுவலகம் போய்ச்சேர்ந்தேன். புதுப்பணிப்பாளர்   நாயகம் கூட்டத்தைத் தலைமை தாங்கிக் கொண்டு சென்றார். போகும்போது ஏதாவது குழப்பமாகக் கேட்பார் என்ற எண்ணத்தோடு சென்றதால், அவரின் செயற்பாடு மிகவியப்பாக இருந்தது. இன்னொருவிதமான பார்வையில் நிறுவனத்தை திறமையாக வழிநடத்துவார் என நம்பக்கூடிய வகையில் செயற்பட்டார். எனது வேலைகளைத் தலைமையகத்தில் முடித்துக்கொண்டு, வழமைபோல் பொரளையிலுள்ள மாமாவீட்டிற்குச் சென்று ஒரு மணி நேரத்தைச் செலவழித்துவிட்டு, மீண்டும் தெஹிவளை வந்தேன். வரும்போதும் பஸ்ஸில் நீண்ட நேரம் காக்க வேண்டியிருந்தது..! அத்துடன் அணிந்த புது அடைகளும், காலணியும் ...

மக்களின் பொருளாதார நிலை..!

படம்
  அண்மையில்   வைத்த எனது சாமத்தியவீட்டு செலவுகளையும் வரவுகளையும் வைத்துப்பார்க்கும்போது தெரிகின்றது மக்கள் வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பது..! பணப்புழக்கம் குறைந்துள்ளது..! சின்னப்பொருள் வாங்க பெரிய தொகை கொடுக்கவேண்டியுள்ளது. ஆனால் அரசால் அதனை ஈடுசெய்ய முடியவில்லை. தனியார் நிறுவனங்கள் தமது சேவைகளுக்கான விலைகளைக் கூட்டுவதால், ஊழிர்களின் சம்பளங்களில் சிறிய அதிகரிப்பை ஏனும் செய்ய முடிகின்றது. ஆனால் அரச ஊழியர்கள் நிலைமை..? பலர் நாட்டை விட்டே ஓடுகின்றார்கள்..! யுத்தத்தைவிடக் கொடுமையானதாகப் பார்க்கப்படுகின்றது இந்தப்பொருளாதாரச் சுமை. ஏறக்குறைய 17 இலட்சம் அரச ஊழியர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். அனைவரின் நிலையும் இது தான். இருந்தாலும் அடிமட்ட ஊழியர்கள் மேலும் திண்டாட வேண்டியுள்ளது. உயர்மட்ட ஊழியர்கள் நாட்டுக்கு வரி செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனது சாமத்திய வீட்டுக்கு 500 பேருக்கு உணவு என மண்டபத்தில் ஏற்பாடு செய்தேன். ஒருவருக்கு 1200 ரூபா என்ற வீதத்தில் 6 இலட்சம் ரூபாய் சாதாரண உணவுக்கு மட்டுமே தேவைப்பட்டது.   இதைத்தவிர வரவேற்பு அட்டை மற்றும் ...

குப்பைத் தண்ணீர் வார்ப்பு

படம்
  நிம்மதியான உறக்கம் முடிந்து வெளியில் வரும்போது பல கடமைகள் இருந்தன. வாசலில் கட்டிய வாழைகளை அகற்றவும், மீண்டும் வீட்டை பழைய நிலைக்கு கொண்டுவரவும் நிறைய வேலைகள் இருந்தன. வாழைகளை அகற்றும்போது மகளின் உதவியைக் கேட்க, அவள் சொதப்ப ஏசிவிட்டேன். பின்னர் முக்கி முக்கி நானே செய்து முடித்து, ஓரளவிற்கு மீள ஒழுங்கு படுத்தலையும் செய்ய களைப்பு மிகுதியாக இருந்தது.    இந்த நிலையில் எனது போன் அடிக்கடி அலறிக்கொண்டு இருந்தது. தற்போது எமது நிறுவனத்தில்   Admission   எடுப்பதற்கு ஒன்லைன் விண்ணப்பங்கள் கோரியுள்ளதால், வழிமுறைகள்   தொடர்பாக சந்தேகமுள்ள மாணவர்கள் எனக்கு போன் எடுப்பது வழமை. அலுவலக நேரங்களில் அவர்களுக்கு பதில் அளிப்பது எனது வழக்கம். மற்றைய நேரங்களில் எடுக்கும்போது, எனது வீட்டுக்கடமைகளைச் செய்யமுடியாது என்பதால் அதிகம் தவிர்க்கவே முனைவேன். வேலையில்லாமல் சும்மா இருந்தால் பதில் அளிப்பேன்.   இன்று வேலைசெய்ய களைப்பால் சிறிது உறங்க முடிவுசெய்து பாயில் படுத்துவிட்டேன். 15 நிமிடங்கள் தாண்டமுன்னர் மனைவி வந்து தட்டி எழுப்பி, ”என்ன தம்பி எத்தனை முறை போன் பண்ணியும் எடுக்கின்றீ...

சுகாதாரக்கழிவு வாய்காய்..!

படம்
  சாமத்திவீடு அன்று காலையே என்னைச் சோதித்த விடயம் அடிக்கடி அலுவலகத்திலும் நிகழ்கின்றது. இப்போது வீட்டிலும் நிகழ்கின்றது. இன்று பிள்ளைகளுக்கு இது தொடர்பாக விளக்கம் கொடுக்கவும், குறித்த manholes அடைப்புக்களை எடுக்கவும் தீர்மானித்து இருந்தேன். ஆனால் இரண்டு மொந்தன் வாழைகள் காற்றால் முறிந்து இருந்தன. மற்றும் ஆட்கள் சிலரும் வந்துகொண்டிருந்தார்கள்.   இதனால் நினைத்தவேலை தடைபட்டுக்கொண்டு வந்தது. எப்படியாவது இன்று நான் முயற்சித்துப் பார்க்க வேண்டும். என்னால் முடியாவிட்டால் வெளியில் இருந்து ஆட்களை வைத்து அதனைச் செய்யலாம் என நினைத்தேன். நினைத்தனை கடும் முயற்சியுடன் செய்தேன். மான்ஹோல்கள் நீண்ட காலம் திறக்காமல் விட்டதால் இறுகியிருந்தன. உள்ள கருவிகள் துணைக்கொண்டு, போதாததற்கு மகளையும் கூட வைத்துக்கொண்டு, ஒருவாறு அவற்றைத் திறந்துவிட்டேன். பின்னர் மோட்டர் மற்றும் பெரிய   நீண்ட ஹோர்ஸ்பை அவற்றுக்குள் தள்ளி தண்ணீரை மிகவேகமாக விட்டேன். அடைத்த பிளாஸ்டிக் பைகள் பல வெளிவந்தன. பின்னர் அவற்றை   எடுத்துத் தாட்டேன். மேலும் தண்ணீர் விட்டு நன்றாக எல்லா மான்ஹோலையும் கழுவி அவற்றிற்கு கழிவு ஓயிலை...

சாமத்திய வீடு..!

படம்
    ஒவ்வொரு நாள் விடியும்போதும், அந்த நாள் சிறப்பாக மறையவேண்டும் என்ற நினைப்போடே பாயைவிட்டு எழும்புவேன். நேற்றிரவு பிந்திப்படுத்தாலும்  சாமத்தியவீடு பற்றிய நினைவால்,  நித்திரை சரியாகக் கொள்ள முடியவில்லை. எமது வீட்டைச் சூழ நிறைய வயதானவர்கள்  இருக்கின்றார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ தெரியாது..? இயற்கை மீது எப்போதும் மிகப்பெரிய பயம் இருக்கின்றது. நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் இயற்கை எப்போதும் தண்டனை தரக் காத்திருப்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை..! என்னை அறியாமலே பல தவறுகள் நடந்திருக்கலாம்.  இறைவன் தந்த அறிவை வைத்தே நான் இயங்குகின்றேன்.  அதில் தவறுகள் இருந்தால் என்ன என்று சொல்வது..? தந்தது அவனே..! வருவதை சமர்ப்பிப்பதும் அவனுக்கே..! எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் இயல்பை மாத்திரம் வளர்க்க விரும்புகின்றேன். அத்துடன் விழாமல் இருக்க, என்றும் முயற்சி செய்ய  விரும்புகின்றேன்.   இந்த எண்ணவோட்டத்தில் நேரம் காலை மணி 6ஐ தாண்டிவிட்டது. உடனேயே சின்னச்சின்ன வேலைகளைச் செய்து முடிக்க முன்னரே Camera men மற்றும் மேக்கப் பெண் எல்லோரும் நேரத்திற்க...

சாமத்தியவீட்டுக்கு முதல் நாள்..!

படம்
  நாளை சாமத்தியவீடு என்பதால் மனம் பதறியது. ஒவ்வொரு நாளும் மரண வீட்டு அறிவிப்புக்கள்   வீதியில் வரும்போது, வீட்டுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரப்போகுது என்ற பயம் வந்தது. யாரையும் குறைகூற முடியாது. ஆனால் சூழல் அப்படி அமைகின்றது. காலையில் இருந்து, மரங்களுக்குத் தண்ணீர்விட்டு, வீடுகளைச் சுத்தம்செய்து வெளியில்   வர மதியமாகிவிட்டது. மகள் இருக்கும் குளியல் அறை அதிக குப்பையாக இருந்ததாக எனக்குப்பட்டது. தனியாகப் படிக்கும் பெண், ஒரு வீட்டைப் பாதுகாப்பது   என்பது மிகப்பெரிய கஷ்டம் தான். தன்னால் இயன்றதை அவள் செய்தாள். அதற்கு மேலாக என்னால் இயன்றதை நானும், தன்னால் இயன்றதை சின்ன மகளும் செய்தோம். இவற்றை முடித்துக்கொண்டு, குளித்துவிட்டு அலுவலகம் புறப்பட்டேன். போகும்போது சில நாளைய நிகழ்வுக்குத் தேவையான சாமான்களையும் வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது கடையில் நின்றவர் ”அண்ணே அவசரப்பட்டு எல்லாவற்றையும் கடும்விலையில் வாங்காதீர்கள்..   50 சதவீதத்தால் விலை குறையும் என்று அரசாங்கம் சொல்வதால், அவசரத்திற்குத் தேவைப்படாத சாமன்களை பொறுத்திருந்து வாங்கலாம்..” என்றார். பி...