நான் சேர்த்த காதல் ஜோடி..!

 


எனக்கு 18 அல்லது 19 வயது இருக்கும் போது  எதிலும் அக்கறையற்று, விளையாட்டுப்புத்தியிலே இருந்தேன். அந்நேரம் எனக்கு என்று சில கூட்டுக்கள் ஊரில் இருந்தன..! மாலை அவர்களுடன் கதைத்துப் பொழுதுபோக்குவது வழமை. அந்தக்காலத்தில் எனது உறவினரும், நண்பருமான ஒருவர், ஒரு பெண்ணை விரும்பினார். அவரும் தமன்னா போல் அந்நேரம் அனைவருக்கும் அழகுராணி போல் ஜொலித்தாள்.  அந்தக்காதலுக்கு நானும் உதவி செய்தேன். காதல் திடீர் திருமணத்தில் முடிந்தது. அந்த நண்பருக்கு இரண்டு பெண் சகோதரிகளும், இரண்டு ஆண் சகோதரங்களும் இருந்தார்கள்.  அவர்கள் அனைவரும் திருமணம் செய்யவில்லை. அவர்களுக்குத் தந்தையும் இல்லை. தந்தைபோல் இருந்து குடும்பத்தை வழிநடத்த வேண்டிய அண்ணன் காதலில் விழுந்து, திருமணத்தில் மிதந்தார்.  அவருக்குப் பல பிள்ளைகளும் பிறந்தன. அவர் தனது சகோதரங்கள் எல்லோரது நலன்களைவிட தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மேல் அதிக அக்கறையிருந்தது போல் அப்போது எனக்கு தெரிந்தது..! இன்று அந்த எண்ணம் மாறிவிட்டது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் குறைவு இருந்தாலும், அன்பு காட்டுவதில் எந்தவோர் குறையுமில்லை.  சகோதரங்களுக்கு இடையிலோ அல்லது அவர்கள் உறவுகளுக்கிடையிலோ  எந்தச்சரீர உதவி  செய்யவும் முன்னிற்கின்றார்கள்.

இன்று அந்த வீடுகளுக்கு மகளின் சாமத்தியவீட்டுக்கான காட் கொடுக்கச் சென்றபோது பழைய விடயங்களைக்கதைத்து மகிழ்ந்தேன்.

பிள்ளைகளும் எனது அன்றைய செயற்பாடுகளை நினைத்துச் சிரித்தார்கள். அந்த அக்காக்களும் என்மேல் கோபிக்க வேண்டும். காலத்தின் மேல் எல்லாவற்றையும் போட்டுவிட்டு, என்னுடன் தம்பி போலவே பழகினார்கள். நேரம் போனதே தெரியவில்லை.

பின்னர் அம்மாவீடு சென்று சில மணி நேரம் அவர்களுடன் செலவிட்டுவிட்டு வீடு வந்தேன்.

 பணம், பதவி, பகட்டு எல்லாம் கொஞ்ச நாட்கள் தான் நிலைக்கும். ஆனால் அன்பு என்ற பெரும்பசை நம்மிடம் இருந்தால் நாம் மரணிக்கும் வரை உறவுகளும், ஆரோக்கியமும் கூட இருக்கும் என்பது சில குடும்பங்களின் வாழ்வியலைப் பார்த்து நான் கற்றுக்கொண்டது..!

 

ஆ.கெ.கோகிலன்

02-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!