கூலிவேலை..!
நாட்டின் பொருளாதாரச் சூழல் மற்றும் விலை வாசிகளின் நிலைக்கு ஏற்ப அரச ஊழியர்களால் சமாளிக்க முடியவில்லை. நான் எனது நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்தாலும் சம்பளம் எனது தேவைகளுக்கே பொதுமானதாக இல்லை என்பது ஆச்சரியம். பதவிக்கு ஏற்ப பல விடயங்களை என்னிடம் உறவுகள் மற்றும் நட்புக்கள் எதிர்பார்க்கலாம். அவற்றை எல்லாம் திருப்திப்படுத்துவது என்பது சிரமமான காரியமாக தற்போது மாறிவிட்டது. சாமத்தியவீட்டிற்கு முதல் திருத்தவேண்டிய சில மின்சார வேலைகள் இருந்தன. நான் தனியாக இப்போது செய்ய இயலாது என்பதால் ஒரு Electrician இனை வரச்சொன்னேன். அவரும் என்னுடன் சேர்ந்து வேலைசெய்து அரைநாளுக்குள் நினைத்ததை நிறைவு செய்தோம்.
இன்று நான் வேலைக்குப் போகவில்லை. இல்லை என்றால் இன்னொருவரை
நியமிக்க வேண்டும். செலவைக்கட்டுப்படுத்த என்ன வழிகள் இருக்கின்றதோ அவற்றைப் பின்பற்றுவதே
சாலச் சிறந்தது.
மாமியும், மாமியின் தங்கையும் பலாக்காயை எடுத்து, சுளையெடுக்க
முடியாமல் தவித்தார்கள். பின்னர் நான் அவற்றை எடுத்துக்கொடுத்தேன்.
மதியம் பலாக்காய் கறி, மரக்கறி என்றாலும் சுவையாக இருந்தது
உண்மை.
இன்றும் வீட்டில் பல சுத்தம் செய்யும் வேலைகளை இரவு 10 மணிவரை செய்தேன். பின்னர் சாமத்தியவீட்டில் கொடுப்பதற்காக மிக்ஸர் பொதி செய்ய மனைவிக்கு உதவினேன்.
ஏறக்குறைய இரவு 12.00 மணிவரை மிக்ஸர் பொதியைத் தயார்செய்தோம்.
மொத்த வேலையில் ஜந்தில் ஒன்றே இன்று முடித்தோம். மிகுதியை
களைப்புக்காரணமாக நாளை ஒத்தி வைத்தோம். இவ்வாறாக இன்றைய நாள் கழிந்தது.
ஆ.கெ.கோகிலன்
07-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக