முடிவெட்டல்..!

 



2020 கொரோனா வந்ததில் இருந்து கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நான் முடிவெட்ட சலூனுக்குப் போனதில்லை. சில கருவிகளை சில ஆயிரங்களுக்கு அந்தக்காலப்பகுதியில் வாங்கியதால் அதனைப் பயன்படுத்தி வெட்டிவிடுவேன். தேவையெனின், பிள்ளைகளின் உதவியைப் பெறுவேன்.

இதனால் வேறும் பல நன்மைகள் உண்டு. அவற்றில் ஒன்று செலவு குறைவு. மேலும் முக்கியமான நன்மை நேர விரயத்தைத் தடுக்கலாம். குறிப்பாகச் சலூன்களில் காத்திருக்கும்  நேரத்தை தவிர்க்கலாம். அதுமாத்திரமன்றி, நானே பிள்ளைகளின் உதவியுடன் வெட்டுவதால் அவர்களுக்கும் சிகையரங்காரம் தொடர்பாக அறிவும், அதை தாமே செய்யலாம் என்ற நம்பிக்கையும் வந்திருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருந்தால், அங்கு பிழைப்பதற்கு இதுவும் ஒரு வழி. ஒரு சாரார் தான் அங்கு செய்யவேண்டும் என்பது கிடையாது. ஆர்வமுள்ளவன் செய்வான். அதனூடாக தனது பொருளாதாரத்தை ஈட்ட முடியும்.

இந்த நிலையில், எனது முடியை மூத்த மகள் கேலி செய்வாள். கொண்டையுடன் இருப்பதைப்போல் அதனைப் படம் எடுத்து அனைவரையும் சிரிக்க வைப்பாள்.

இன்று மகள் சொன்னாள், “போய் கடையில் வெட்டுங்கள் என்று..” அப்படி வெட்டினால் தான் சலூன் காரனும் பிழைக்க முடியும்..!

அவள் சொன்னதன் பின்னர் சலூன் சென்று, ஏறக்குறைய மூன்று வருடங்களின் பின் முடிவெட்டியுள்ளேன். 300 ரூபா செலவு செய்து, மூன்று வருட  இப்படியொரு தவத்தைக் கலைத்தேன்.

 

ஆ.கெ.கோகிலன்

03-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!