தபால்..!
நேற்று எனது உறவினர் ஒருவருக்கு போன் பண்ணி உங்களுக்கு, எனது
மகளின் சாமத்தியவீட்டிற்கான காட் கொடுத்தேன். வீட்டிலுள்ள வேலையாள் தந்தாரா..? எனக்கேட்னேன்.
அவர் சொன்னார் ”அப்படியொரு காட் தனக்கு கிடைக்கவில்லை என்றும், மேலதீகமாக மனைவியிடமும்
விசாரித்தார். அவரும் சொன்னார் கிடைக்கவில்லை என்று..! பின்னர் அவரது வீட்டின் முகவரியைக்
கேட்டேன். அவர் சொன்னதும், அவரது தகப்பனார் சொன்னதிலும் வேறுபாடு இருந்தது புரிந்தது.
நான் தான் மாறி யாரிடமோ கொடுத்துவிட்டேன்.
சந்தர்ப்பங்கள் என்னைக் குழப்பிவிட்டன. உடனே அவரிடம் குறைநினைக்க வேண்டாம் என்றும்,
அவருக்கு whatup இல் காட்டைப்போட்டுவிட்டு, உண்மையான காட்டைத் திரும்பக்கொடுக்க அந்தப்பகுதிக்குப்போனேன்.
நேரம் பிந்தியதால் நன்றாக இருண்டுவிட்டது. வீட்டைக்கண்டு பிடிக்கமுடியவில்லை. அவர்
சொன்ன குறிப்பின் படி ஒரு வீட்டை நிச்சயப்படுத்திக்கொண்டு
திரும்பிவிட்டேன்.
போகும்போது, முதலில் தெரியாமல் மாறிக்கொடுத்த வீட்டில் கேட்கப்போனேன்.
அங்கும் ஒருவரும் தென்படவில்லை..!
அவர் வசிப்பது பிறமாவட்டம் என்பது தெரிந்தும், குறித்த உறவினர்
குடும்பமாக ஊருக்கு வந்துள்ளார் என்பதை அவரது
தந்தையார் சொல்லியே நேரடியாகக் கொடுக்கச்சென்றேன்.
இன்னும் அந்த வேலையை என்னால் முடிக்க முடியவில்லை.
சும்மா 60 ரூபா செலவழித்து தபாலில் போட்டிருந்தால் இன்நேரம் அவருக்கு கிடைத்து இருக்கும்.
ஆ.கெ.கோகிலன்
01-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக