சுகாதாரக்கழிவு வாய்காய்..!
சாமத்திவீடு அன்று காலையே என்னைச் சோதித்த விடயம் அடிக்கடி அலுவலகத்திலும் நிகழ்கின்றது. இப்போது வீட்டிலும் நிகழ்கின்றது. இன்று பிள்ளைகளுக்கு இது தொடர்பாக விளக்கம் கொடுக்கவும், குறித்த manholes அடைப்புக்களை எடுக்கவும் தீர்மானித்து இருந்தேன். ஆனால் இரண்டு மொந்தன் வாழைகள் காற்றால் முறிந்து இருந்தன. மற்றும் ஆட்கள் சிலரும் வந்துகொண்டிருந்தார்கள். இதனால் நினைத்தவேலை தடைபட்டுக்கொண்டு வந்தது. எப்படியாவது இன்று நான் முயற்சித்துப் பார்க்க வேண்டும். என்னால் முடியாவிட்டால் வெளியில் இருந்து ஆட்களை வைத்து அதனைச் செய்யலாம் என நினைத்தேன்.
நினைத்தனை கடும் முயற்சியுடன் செய்தேன். மான்ஹோல்கள் நீண்ட
காலம் திறக்காமல் விட்டதால் இறுகியிருந்தன. உள்ள கருவிகள் துணைக்கொண்டு, போதாததற்கு
மகளையும் கூட வைத்துக்கொண்டு, ஒருவாறு அவற்றைத் திறந்துவிட்டேன். பின்னர் மோட்டர் மற்றும்
பெரிய நீண்ட ஹோர்ஸ்பை அவற்றுக்குள் தள்ளி தண்ணீரை
மிகவேகமாக விட்டேன். அடைத்த பிளாஸ்டிக் பைகள் பல வெளிவந்தன. பின்னர் அவற்றை எடுத்துத் தாட்டேன். மேலும் தண்ணீர் விட்டு நன்றாக
எல்லா மான்ஹோலையும் கழுவி அவற்றிற்கு கழிவு ஓயிலை ஊற்றி பின்னர் மூடிகளைப்போட்டேன்.
இவ்வாறாகக் காலம் கைகொடுத்ததால் என்னால் அவற்றைச் சுத்தமாக
அடைப்பெடுக்கவும், பிள்ளைகளுக்கு காட்டவும், மாற்று வழிகள் சொல்லவும் முடிந்தது.
இதேநேரம் அலுவலகத்திலும், பெண் ஊழியர்களின் உதவியுடன் பெண்
பிள்ளைகளுக்கு இந்த சுகாதாரக்கழிவுகளை வெளியேற்ற முறையான வழிகாட்டலைச் செய்யத் தீர்மானித்துள்ளேன். சுத்தம் சுகம் தரும். கழிவறையைச் சுகாதாரமாக வைத்திருப்பதே
சுத்தத்தின் முதல் நிலை. இந்த நிலையில் தான் ஒவ்வொரு சுகாதார ஊழியர்களின் சேவையின்
அருமை புரிந்தது..! நாம் சில வேலைகளை உயர்வாகவும்,
சில வேலைகளைத் தாழ்வாகவும் வைத்துள்ளோம். உண்மையில்
எல்லாம் தேவை தான். ஒன்று இல்லை என்றாலும் ஒட்டுமொத்த இயக்கமும் தடைப்படும். தொழில்களை
மதிப்போம். நிம்மதியுடன் வாழ்வோம்.
ஆ.கெ.கோகிலன்
11-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக