கல்வியா அல்லது காலமா..?
எமது பிரதேசம் பல காலமாக முகங்கொடுத்த உள்நாட்டுப்போர் மற்றும்
பேரினவாதத்தடைச்சட்டங்கள் மற்றும் பொருளாதார தேடல்கள் அல்லது ஆசைகள் என்பவற்றால் பல மாற்றங்களுக்கு
உட்பட்டுள்ளது..!
பொருளாதாரம் தற்போது எல்லா மட்ட சமூகங்களுக்கும் கிடைக்கின்றது..! கல்வியில் பலமான போட்டிகள் இலங்கை எங்கும் இருக்கின்றன..! கீழே மிதிக்கப்பட்ட சமூகங்கள்
மேலே வர கல்வியையும் பொருளாதாரத்தையும் பெற மிகக்கடினமாக உழைக்கின்றார்கள்..! இந்த
உழைப்பின் விளைவுகளை பார்க்கும்போது உயர்நிலைகளில் இருந்தவர்கள் நாட்டைவிட்டே போய்விட்டார்களா
அல்லது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிவிட்டார்களா அல்லது போதிய உழைப்பைப்போட
மறுக்கின்றார்களா அல்லது தயங்குகின்றார்களா அல்லது காலம் அவ்வாறான எண்ணம் கொண்டவர்களுக்கு
சாதகமாக இல்லையா என்பது புரியவில்லை.
தற்போது கீழ் நிலையில் உள்ளவர்கள் உயர்பதவிகள் பலவற்றைப்
பிடித்துள்ளார்கள்..! இதற்கு யாரும் அரசியல் பலமன்றோ அல்லது செல்வாக்கு என்றோ சொல்லிவிடமுடியாது.
கல்வி, உழைப்பு, காலம் எல்லாம் ஒரு புள்ளியில் சாதகமாக அமைவதாலேயே இது நிகழ்ந்துள்ளது..! காலம் தொடர்ந்து மாறும். ஒவ்வொரு மட்ட சமூகங்களும் மேல்வரும் சந்தர்ப்பங்கள் வரும்காலத்தில்
உண்டு என்பதை அனைவரும் உணரவேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளவும்
வேண்டும்.
இங்கு நில புலன்களுக்குச் சொந்தக்காரர்கள், ஒரு காலத்தில்
சாதாரணமானவர்களாக இருந்து, பின்னர் ஆட்களைத்திரட்டி, குட்டி அரசுகளாக மாறி, அங்குள்ள
அப்பாவிகளின் வளங்களைச் சுரண்டியதுடன், அம்மக்களை அடிமைகளாக மாற்றி வந்த வரலாறே மனதில்
வருகின்றது..!
இதனை, தற்போது இருக்கும் வளங்களையும் வசதிகளையும் வைத்துப்பார்க்கும்
போது புரியாது. ஆனால் எல்லோரும் போய் சேரும் இடமும், இறுதி நிலையும் நிச்சயம் இதை உணர்த்தியே
ஆகவேண்டும். இன்னும் உணரவில்லை என்றால் கற்க இன்னும் நிறைய இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இல்லையென்றால் காலம் உணர்த்தும்போது கவலைப்பட நேர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆ.கெ.கோகிலன்
21-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக